புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2023

தொப்புள் கொடி உறவுகளே .தோள்  முட்டும் வெள்ளம் 
தோள்  கொடுக்க  ரஜனி, கமல், விஜய் வந்தார்களா ?
----------------------------------------------------------------------------------
உறவுகளே சிந்தியுங்கள் ,. இந்த  பெரிய நடிகர்கள் எல்லாம்  உழுது நீர் இறைத்து  சோற்றுக்குள் நின்று நாற்று நாட்டு  விவசாயம் செய்தா  கோடீஸ்வரர் ஆனார்கள்   உங்கள்  பணத்தில் கோடி கோடியாக சம்பாதித்து கால் மேல் கால் போட்டு  அனுபவிக்கிறார்கள் .நீங்கள் அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் .எத்தனை தலைமுறைக்கும் இருந்து கொண்டே சாப்பிடும் அளவுக்கு சொத்துக்களை  குவித்து வைத்திருக்கிறார்கள்,எப்பொழுதாவது  இப்போது போன்ற பேரிடர்களில்  வெளியில் இரங்கி வந்து  மக்களை  பார்த்தார்களா  என்ன நடக்குது என்று  கவனித்தார்களா  ஒருசாதமாவது  ஈகம் செய்தார்களா நலம் விசாரித்தார்களா  மக்கள் எக்கேடு  ஆவது கேடடா நமக்கென்ன என்று  தங்களை  மாளிகையை விட்டு  எட்டிக்கூட பார்க்கவில்லை 
உறவுகளே சினிமா  என்பது ஒரு பொழுதுபோக்கு . அதனை உங்கள் வாழ்க்கையாக  நினைக்காதீர்கள்,  100  120 கோடி என்று ஒரு படத்துக்கு வாங்கு  நடிகர்கள்  உங்களுக்கு   ஒருசதம் கூட உதவவில்லை . ஏன்  வெளியே வந்து நிலைமையை  கவனிக்க கூட இல்லை ,இவறிகளையா நீங்கள் தலையில்  தூக்கி வைத்து  கொண்டாடுகிறீர்கள் .வேண்டாம் விட்டு விடுங்கள் இனியாவது உங்கள் வாழ்க்கையை  நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் . சினிமாவையும் அரசியலையும்  நம்பி ஏமாறாதீர்கள்  சிந்தியுங்கள் 

அமெரிக்காவை எச்சரித்த ஜெலென்ஸ்கி

www.pungudutivuswiss.com

உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் தோன்றிய விளாடிமிர் புடின் (Vladimir Putin), 'ரஷ்யா வலுவாக வளரும்போது உக்ரைன் பலவீனமடையும்' என தெரிவித்தார்.

உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் தோன்றிய விளாடிமிர் புடின் (Vladimir Putin), 'ரஷ்யா வலுவாக வளரும்போது உக்ரைன் பலவீனமடையும்' என தெரிவித்தார்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : தமிழ் இளைஞன் வெட்டிக் கொலை

www.pungudutivuswiss.com
குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் நேற்று
இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருளுடன் யாழ்.பல்கலை மாணவன் கைது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் "டிஜே நைற்"க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்

www.pungudutivuswiss.com

செட்டிக்குளத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்கு துணைபோகிறதா ஐ.நா?

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையின் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.  இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக் குடும்பங்கள் தமது காணிகளை  இழக்கின்றார்கள் என்ற  பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா  செட்டிகுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் தேசியமக்கள் முன்னணியின் எம்.பி  செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையின் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக் குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா செட்டிகுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் தேசியமக்கள் முன்னணியின் எம்.பி செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 100 கைதிகள் தப்பியோட்டம்

www.pungudutivuswiss.com


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 100 வரையான கைதிகள் நேற்று தப்பிச் சென்றுள்ளனர்.  அவர்களில் 21 கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையோரை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 100 வரையான கைதிகள் நேற்று தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் 21 கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் கூட்டமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு

www.pungudutivuswiss.com
உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பிணைக் கைதிகள் உயிருடன் வெளியேறமாட்டார்கள்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

www.pungudutivuswiss.com

எங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிணை கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

எங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிணை கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது

ad

ad