இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று ந
பர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட்ட ஆட்சி தலைவரும் வைகோவுடன் பேசி திருமண மண்டபத்து செல்ல வலியுறுத்தியும் வைகோ மறுத்து திருமண மண்டபத்துக்கு சென்றாலும் அங்கு இருந்தும் எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும். ஒன்று எங்களை ஜனநாயக வழியல் கருப்பு கொடி காட்ட அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களை சிறைக்கு அழைத்து செல்லவும் என்று மறுத்து தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நாக்பூர் - போபால் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகலில் இருந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வைகோவின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒரு சிறு வன்முறை கூட நிகழாமல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் நமது போராட்டத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.