புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2013

கபொத உயர்த்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு
கல்வி பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சையில் அதிக் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தனர்.மாணவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஆசி வழங்கினார்.
யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களின் நியமனங்களை தட்டிப்பறிக்க அங்கஜன் இரகசிய திட்டம்
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சுகதாரத் தொண்டர்கள் சிலருக்கு> நாளை நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்பொது கட்சிபேத அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கொள்ளையில் பங்கில்லை! யாழ்.மாநகர மேயருடன் அமைச்சர் டக்ளஸிற்கு கருத்து முரண்பாடு
யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாக அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார்.
நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொழும்பு-பளை ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்

கொழும்பிலிருந்து பளை வரையான ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. கிளிநொச்சியில் இருந்து பளை வரை யான ரயில்
எதிர்க்கட்சியில் அமரவும் தயங்கமாட்டோம்! – அரசாங்கத்தை எச்சரிக்கிறது ஹெல உறுமய
மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்றால் எதிர்க்கட்சியில் அமரத் தயார் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை
 வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்; வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு
வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.
நாமே கிழக்கை கைப்பற்றினோம் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க
ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தனியே வன்னியில் இருந்து மட்டுமே அழித்ததே தவிர, அவர்களை கிழக்கில் இருந்து விரட்டி, கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிஸில் ரகசிய கமெராவில் பெண்களை படமெடுத்த பொலிஸ் ஊழியரின் அயோக்கிய செயல் அம்பலமாகியுள்ளது.
சுவிஸில் பேர்ண் எம்மேந்தால் பிராந்திய பகுதியில் அமைந்திருக்கும் வாசன்(3457 Wasen ) நகரில் இருக்கும் உடற்பயிற்சி மையம் ஒன்றில் உடைமாற்றும் அறையிலும், குளியலறையிலும் ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு படமாக்கப்பட்டது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கனடாவில் ஏற்பட்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவின் பெரிய நகரமான டொரொன்டோ மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நிராகரித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 
நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்த விசேட கூட்டத்தின் போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.காணி அபகரிப்பு, இராணுவம், பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன.
இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.

          ந்தசாமிக்கு அது தொழில்தான். மக்களுக்கு ஒரு சேவையாக அது இருக்கிறது என்பதைக்கூட அவர் பெரிதாக நினைத்ததில்லை. ஃபினாயில் விற்பதை பெரிதாகவோ பெருமையாகவோ நினைப்பதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தார் கந்தசாமி. நீங்களும்கூட இதில் என்ன பெருமை இருக்கிறது என நினைக்கலாம். அவர் ஃபினாயில்
அரசு பங்களாவை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழன் கிழமை பதவி ஏற்கிறார். வழக்கமாக, டெல்லி முதல்-மந்திரிக்கு வழங்கப்படும் ’இசட்’ பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என்று ஏற்கனவே அவர் கூறிவிட்டார்.
ஏ.கே.47 துப்பாக்கியை கண்டுபிடித்தவர் காலமானார்
 ஏ.கே.47 என்ற நவீன துப்பாக்கியை வடிவமைத்த மிக்கேல் கலாஷ்னிக்கோவ் இன்று ரஷ்யாவில் காலமானார்.
வாஷிங்டன் சென்றடைந்தார் அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர் 
தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டிற்கான புதிய இந்திய தூதராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார்.விசா மோசடி குற்றச்சாட்டில்

அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்
 
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் :மத்திய அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு
நடிகர் மோகன்பாபு திருப்பதியில் உள்ள ரங்கம்பேட்டை பகுதியில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது சிறந்த கல்வி சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2007–ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.கவுரவித்த விருதை நல்வழியில் பயன்படுத்தாமல் அரசியல் ஆக்குவதால் அந்த விருதை திரும்ப
காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் வருத்தம்
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போதுபேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால் 
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெறுவது யார்? முதல் பட்டியல் வெளியானதாக தகவல்!
டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையில் மணீஷ்சிசோடியா, சோம்நாத்பாரதி,

ad

ad