புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2020

Jaffna Editor
புங்குடுதீவு. இப்போதைய செய்தி
ஆதாரபூர்வமானது
............................................................................
கொரொனா தொடர்பாக புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை அவர்கள் வழங்கிய தகவல் .
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த சில பெண்பிள்ளைகள் வேலை செய்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவர் கடந்த மாதம் ( புரட்டாசி) 30ஆம் திகதி புங்குடுதீவில் இருக்கும் தன் இல்லத்திற்கு வந்திருந்தார். மற்றும் ஒருவர் இந்த மாதம் (ஐப்பசி) 4ஆம் திகதி தன் இல்லம் வந்திருந்தார். இன்நிலையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் மத்தியில் கொரோண தொற்று இருப்பதை அறிந்ததும் அங்கிருந்து வேலைசெய்து புங்குடுதீவிற்கு வந்திருந்த இவ் இருவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் 30ஆம் திகதி வந்த யுவதிக்கு Negative என்றும், 4ஆம் திகதி வந்த யுவதிக்கு positive என்றும் முடிவுகள் வந்தன. எனவே positive. என்று அடையாளம் காணப்பட்ட யுவதியை வைத்திய சாலைக்கும், Negative என்று அடையாளம் காணப்பட்ட யுவதியை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களது பெற்றோர், சகோதர சகோதரிகள், அவர்களோடு உரையாடி உறவாடியவர்கள், அவர்களோடு வாகனங்களில் பயணித்தவர்கள், என இவர்களும் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் positive என்று இனங்காணப்பட்ட யுவதியின் பெற்றோர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்றைய 15/10/2020 நிலவரத்தின் படி 105 குடும்பங்களைச் சேர்ந்த 292 பேர் 59 வீடுகளில் தனிமைப்படுத்தப்படிருக்கிறார்கள். இவர்களில் 15 பேரிற்கு PCR பரிசோதனை எடுக்கப்பட்டது அதனுடைய முடிவுகளாக எடுக்கப்பட்ட அனைவரிற்கும் Negative என்றுதான் கிடைக்கப்பெற்றது. அதற்காக இறைவனிற்கு நன்றி கூறுகின்றோம்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்ற பலர் தங்களை அர்ப்பணித்து சேவை செய்கிறார்கள். அந்தவகையில் எமது புங்குடுதீவு பிரதேசத்தின் PHI திரு.அபராஜ் மற்றும் J/22, J/23, J/26, J/35, J/36, ஆகிய கிராம பிரிவுகளில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தர்கள், மேலும் நலன்புரிசங்க உறுப்பினர்கள் இவர்களோடு இணைந்து கடற்படையினர் , பொலிசார் இவர்கள்தான் தங்களை அர்ப்பணித்து இரவு பகல் என்று பாராமல் பயம் நோக்காமல் பணிகளை செய்கின்றார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான மதிய உணவினை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரும் (130 பாசல்கள்), புங்குடுதீவு சர்வோதயம் (55 பாசல்கள்) மிகுதி உணவினை ஊர் மக்களும்,புங்குடுதீவு நலன்புரி சங்கமும் இணைந்து கொடுக்கின்றனர்.
காலை மற்றும் இரவு உணவினை புங்குடுதீவு நலன்புரி சங்கத்தினர் தங்களுக்கு கிடைத்த, கிடைக்கப்பெறுகின்ற நிதிகளில் இருந்து உணவினை தயார்செய்து கொடுக்கின்றார்கள்.
மேலும் இரு நாளின் இரவு உணவினை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரும், மற்றும் ஒரு நாளின் இரவு உணவினை பொதுஜன பெரமுன கட்சியினரும் வழங்கினர் மற்றும் புங்குடுதீவு இறுபிட்டி அபிருத்தி சங்கம், இரு நாள்களுக்கன அதாவது இன்றும், நாளைக்குமான இரவு உணவினை வழங்குகின்றனர்.
குடிநீர் வசதிகளை புங்குடுதீவு சர்வோதயமும், வேலணை பிரதேச சபையும் செய்து கொடுக்கிறார்கள்.
மேலும் இக்காலத்தில் உயர்தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டதினால் புங்குடுதீவில் இருந்து இப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வேலணை மத்திய கல்லூரிக்கு கூட்டிச்சென்று மீண்டும் புங்குடுதீவுக்கு கூட்டிவரும் பொறுப்பை புங்குடுதீவு நலன்புரி சங்கம் பொறுப்பாக செய்வது பாராட்டத்தக்கது. இவற்றுக்கான போக்குவரத்து செலவையும் புங்குடுதீவு நலன்புரி சங்கமே செய்து வருகிறது. மேலும் இம் மாணவர்களுக்கான சிற்றுண்டி, மதிய போசனம் இதற்கான செலவை பிரதேச செயலகம் பொறுப்பேற்ரிருக்கின்றது.
இன்நாட்களில் மக்களோடு நின்று பணியாற்றுவது என்பது முக்கியமானது அந்த வகையில் எமது புங்குடுதீவு பிரதேசத்தின் சுகாதார உத்தியோகத்தரும், புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் தலைவராகவும் இருந்து செயற்படுகின்ற திரு.அபராஜ் மற்றும் மேலே குறிப்பிட்ட கிராம பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள், நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர்கள், கடற்படையினர், பொலிசார் இவர்களை பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
குறிப்பாக இவர்களில் சுகாதார உத்தியோத்தர் தன்னுடைய சுகாதார நிலையத்திலும் சில கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் நலன்புரி சங்கத்தின் கட்டிடத்திலும் தங்கியிருந்து தங்கள் வீடுகளுக்கும் செல்லாது பணியாற்றுவது அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துகாட்டுகிறது.
மேலும் உணவு வகைகள், பொதிகள், நீர், போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கின்றவர்களையும் பாராட்டி கொள்கின்றேன்.
இறை ஆசீர் உங்களுடன் என்றும் இருப்பதாக.
பங்குத்தந்தை
புனித சவேரியார் ஆலயம்
புங்குடுதீவு

ரிஷாத்தின் மனைவியிடம் விசாரணை

Jaffna Editor
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவியிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள

நாளை மீண்டும் கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்

Jaffna Editor
தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணத்தில் நாளை காலை நடைபெறவிருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா இதற்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.

பிரேக்கிங் நியூஸ்

Jaffna Editor
சுமந்திரன், ஸ்ரீதரன் vs சிவஞானம் ..யார் உச்சம்
தமிழரசுக்கட்சியில் பூசல் . பதவி விலகினார் சிவிகே

ரிஷாத் தலைமறைவு! தொடர்ந்தும் வலைவீச்சு!

Jaffna Editorமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுனை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும் அவர் தொடர்ந்தும் தலை

ஊடகவியலாளர்கள் தாக்குதலில்தாக்குதலாளிகள் சார்பில்சட்டத்தரணிகள் ஆஜராகமாட்டார்கள்?

Jaffna Editor
முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகள்

மணிவண்ணன், மயூரனைமாநகர சபையில் நீக்க கோரியது முன்னணி. மணிவண்ணன் இல்லாத முன்னணி உரூப்படுமா _

Jaffna Editorயாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

ரிசாத்தை தேடி சஜித் வீட்டிற்கு சென்ற சிஐடியினர்

Jaffna Editorமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிஐடியினர் அவரை தேடி எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ராஜகிரியவில் உள்ள எதிர்கட்சி தலைவரின் ரோயல் கார்டன் இல்லத்திற்கு சிஐடியினர் சென்றுள்ளனர்

ad

ad