ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்ஸ்: இந்தியர்கள் கலக்கல்!
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா நான்காவது இடத்திலும் இந்திய கேப்டன் விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.
டெஸ்ட் பௌலர்களுக்கான பட்டியலைப் பொறுத்தவரை, இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர். இதில் அஷ்வின், மூன்றாவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கையில் ரங்கன ஹெராத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல ஆல்-ரவுண்டர்களுக்கான தர வரிசையில் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்திலும், ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி இன்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா
நட்பு ரீதியிலான போட்டிதான் என்றாலும், அந்த ஆட்டத்தை உலகமே பார்த்தது. ஸ்பெயின் நாட்டின் பெருந்தலைகளான
பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் மல்லுக்கட்டிய ‛எல் கிளாசிகோ’ என்றால் சும்மாவா? அமெரிக்காவின் மியாமி நகரில் ராக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை் போட்டியில் இரு அணிகளும் களம்கண்டன. ஃப்ரெண்ட்லி மேட்ச் என்றாலும் உக்கிரத்துக்குப் பஞ்சமில்லை. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை தோற்கடித்தது. தன் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
ரொனால்டோ மட்டுமே அவுட்.. மற்றபடி இரு அணிகளும் தங்கள் ஸ்டார் வீரர்களூடனே களமிறங்கின. மூன்றாவது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து பார்சிலோனா அணிக்கு லீட் ஏற்படுத்தி கொடுத்தார் லியோனல் மெஸ்சி. செர்ஜியோ புஸ்கட்ஸ் கடத்திக்கொடுத்த பந்தை நான்கு டிஃபெண்டர்களை ஏமாற்றி விட்டு வலையை நோக்கி உதைக்க, அது லேசாக ரியல் மாட்ரிட் டிபெண்டரின் காலில் பட்டு தடையே இல்லாமல் வலைக்குள் சென்றது.
கவுண்ட்டர் அட்டாக்கில் தொடர்ந்து கவனம் செலுத்திய பார்சிலோனா அணி 7-வது நிமிடத்தில் அடுத்த கோலைப் பதிவு செய்தது. நெய்மாரின் பாஸை பின்னாலிருந்த இவான் ராகிடிச்சிற்குநேர்த்தியாக சுவாரஸ் கடத்த வலையின் கீழ் இடது மூலைக்கு அனுப்பிவைத்தார் ராகிடிச். 14-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பி மாட்ரிட் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தார் மடெயொ கோவசிச். அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை பார்சிலோனாவின் சுவாரஸ்,ராகிடிச், நெய்மார் வீணடிக்க, ரியல் மாட்ரிட் சார்பில் பென்சிமா , மோட்ரிச் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்டனர். இரு அணி கோல்கீப்பர்களுக்கும் ஓய்வே கிடைக்கவில்லை.
திறமையான கவுன்ட்டர் அட்டாக்கால் 36-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் 2-வது கோலை அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது. ரொனால்டோ இடத்தில் களம் கண்ட அசென்சியோ அசால்ட்டாக தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முதல் பாதி 2-2 என்ற சமநிலையில் இருந்தது.
இரண்டாம் பாதி பரபரப்பாகவே தொடங்கியது. இரு அணி வீரர்களும் எதிரணியின் கோல் கம்பங்களை நோக்கி படையெடுத்தனர். இது நட்பு ரீதியிலான போட்டி என்பதால் எத்தனை மாற்று வீரர்களை வேண்டுமானாலும் களமிறக்கலாம். ரியல் மாட்ரிட் தன் இளம் வீரர்களை வரிசையாக இறக்க ஆரம்பித்தது. 50-வது நிமிடத்தில் ஃபிரீ கிக் வாய்ப்பில் நெய்மார் உதைத்த பந்தை லாவமாக கோலாக்கி அமர்க்களப்படுத்தினார் ஜெரார்டு பிக்கே.
இரு பக்கங்களின் கோல் கம்பங்கள் எந்நேரமும் பிஸியாகவே இருந்தன. வாய்ப்புகள் ஒருபுறம் நழுவிக்கொண்டிருக்க, இரு அணிகளும் இளம் மாற்று வீரர்களைக் களத்தில் இறக்கின. ரியல் மாட்ரிட் தொடுத்த அனைத்து கவுன்ட்டர் அட்டாக் அம்புகளையும் சிரமப்பட்டாலும் கூட தன் விடாமுயற்சியால் தடுத்து விட்டார் பார்சிலோனாவின் இளம் கீப்பர் ஜாஸ்பர் கிலெசன். பார்சிலோவின் கவுன்ட்டர் அட்டாக்கும் ரியல் மாட்ரிட் அணியின் டிஃபெண்டர்களை தாண்டவில்லை. ரியல் மாட்ரிட் அணியின் இஸ்கோ, கேரத் பேல் மற்றும் டேனி கெபெலோஸ் ஆகியோரது ஷாட்டுகள் வலைக்குள் செல்லவில்லை. இரு அணிகளின் இளம் வீரர்களும் துடிப்புடன் செயல்பட்டனர்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
நகம் கடிக்க வைத்த த்ரில் மேட்ச்... யு மும்பா யூ டர்ன் போட்டு வென்றது எப்படி? #ProKabaddi #MatchReview
Pro kabaddi league இந்த சீசனில் தனது முதல் போட்டியில் புனே அணியிடம் தோற்றிருந்தது மும்பை அணி. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை U Mumba beat Haryana Steelers in Pro kabaddi league
' மேட் இன் இந்தியா' ஜீப் காம்பஸ், ரூ.14.95 லட்சத்தில் அறிமுகம்! #JeepCompass
இருந்தாலும், இறுதி வரை இரண்டு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கவில்லை. எனவே ஆட்டம் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவின் கைகளில் விழுந்தது. ப்ரீ சீஸனின் மூன்று நட்பு ஆட்டங்களையும் தோல்வியே காணாமல் நிறைவு செய்த பார்சிலோனா அணி இண்டர்னேசனல் சாம்பியன்ஸ் கோப்பையையும் வெற்றிகரமாக கைப்பற்றியது.போன மாதம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில், பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது
விராட் கோலி தலைமையிலான பென் இன் புளூ…இன்று அதே இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்திடம் உலகக் கோப்பையை இழந்துள்ளது வுமன் இன் புளூ.
எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், லீக் சுற்றில் 5 வெற்றிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி, கெத்தாக ஃபைனலுக்குள் நுழைந்தது மித்தாலி ராஜ் தலைமையிலான நம் அணி. இறுதிப்போட்டியில், இன்று இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது.
கிரிக்கெட்டின் மெக்காவான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதிகம் பவுன்ஸ் ஆகாத பிட்சில் ரன் அடிப்பது சற்று சிரமமாகவே இருந்தது. இங்கிலாந்து வீராங்கனைகள் பொறுமையாக ஆடியபோதும், சீரான இடைவேளையில் இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தியது. தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஷ்வரி அடங்கிய சுழல் கூட்டணி இங்கிலாந்து வீராங்கனைகள் ரன் குவிக்காமல் பார்த்துக்கொண்டது. இந்த நிலையில், சாரா டெய்லர், நடாலி சிவர் கூட்டணி அணியின் ஸ்கோரை மெள்ள உயர்த்தியது. அந்தப் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் தலைசிறந்த பௌலரான கோஸ்வாமி பிரித்தார். அவர்கள் இருவரையுமே வீழ்த்திய கோஸ்வாமி, 10 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதில், 3 மெய்டன்களும் அடங்கும். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.
கோப்பையை வெல்ல 229 என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் அமைந்தது. இந்தப் போட்டியிலாவது நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்த்த ஸ்ம்ரிதி மந்தனா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் மாபெரும் நம்பிக்கையான கேப்டன் மிதாலி, மெத்தனமாக ஓடி ரன் 17 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனால் இந்திய அணியின் மீதான பிரஷர் அதிகமானது. அதன்பின்பு, ஹர்மன்பிரீத்தும், பூனம் ராவத்தும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். இருவரும் அரைசதம் எடுத்து, முறையே 86 மற்றும் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அதன்பின்னர், விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போலச் சரிய, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் டெயில் எண்டர்களை எளிதில் சாய்த்தார் இங்கிலாந்து வீராங்கனை ஷ்ரப்சோல். அவர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி நான்காவது உலகக் கோப்பைமகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி
யில் இன்று ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள்
வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அதிக ரன்களைக் குவிக்கும் எண்ணத்தோடு முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா மற்றும் பூனம் ரவுத் முறையே 6 மற்றும் 14 ரன்கள் எடுத்தனர். பின்னர், களத்துக்கு வந்த கேப்டன் மித்தாலி ராஜ், பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மித்தாலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கௌர், களத்தில் இறங்கியது முதலே பந்துகளை விளாசினார். எதிர்பாராத விதமாக, மித்தாலி 36 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். ஆனாலும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை மேற்கொண்ட கௌர், 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். மகளிர் கிரிக்கெட்டில் ஒரு தனிப்பட்ட வீராங்கனை அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். மழை காரணமாக 42 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதையடுத்து 42-வது ஓவர் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது இந்தியா.
இதையடுத்து, 282 ரன்கள் சேஸ் செய்யும் முனைப்போடு தனது ஆட்டத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எலிஸ் பெர்ரி மற்றும் எல்லிஸ் வில்லனி ஆகியோர் ஆஸ்திரேலிய தரப்பில் முறையே 38 மற்றும் 75 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். 9 விக்கெட்டுகளை 200 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே இழந்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அலெக்ஸ் பிளாக்வெல் மற்றும் கிறிஸ்டன் பீம்ஸ் ஆகியோர் அதிரடி ரன் குவிப்பில் இறங்கினர். பிளாக்வெல், 56 பந்துகளில் 90 ரன்கள் கடந்து தொடர்ந்து ஆக்ரோஷம் காட்டினார். இந்தியாவின் வெற்றி பறிபோகுமோ என்று நினைத்த நிலையில், பிளாக்வெல் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து, 40.1 ஓவர்கள் முடிவில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவது இதுவே இரண்டாவது முறையாகும். இம்மாதம் 23-ம் மாதம் தேதி நடைபெற விருக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணிஸ்மிருதிக்கு வாழ்த்து சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் பெண் சேவாக்'. இப்படித்தான் ரசிகர்கள் இவரை அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்பெண் சேவாக்'. இப்படித்தான் ரசிகர்கள் இவரை அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அதற்கு
சேவாக்கே எதிர்ப்பு தெரிவித்து ஸ்மிருதியை பாராட்டி இருந்தார். பொதுவாக, பெண்கள் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை அடிக்கடி காண முடியாது. இந்திய அணியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீராங்கனைகளே அதிகம். இந்நிலையில் சேவாக் பாணியில் ஆரம்பத்திலிருந்தே பெளண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசிவருகிறார் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana). மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிருதிக்கு, வயது 21தான். ஸ்மிருதியின் அண்ணன் ஷ்ரவணன், கிரிக்கெட்டர். அண்ணன் மகாராஷ்டிரா அணிக்காக ஆடும்போது கிடைத்த புகழைப் பார்த்த பிறகு, ஸ்மிருதிக்கும் கிரிக்கெட் ஆசை வந்திருக்கிறது. ஏழு வயதில் பேட் பிடிக்க ஆரம்பித்த ஸ்மிருதி, ஒன்பது வயதில் மகாராஷ்டிரா அணிக்குள் நுழைந்தார். பதினாறு வயதிலேயே இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

ஸ்மிருதி, இயல்பிலேயே வலதுகை ஆட்டக்காரர். ஆனால், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனின் பேட்டிங் ஸ்டைல் பிடித்துப்போக லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்வுமன் ஆனார். ஸ்மிருதியின் ஷாட் தேர்வுகள் அபாரமாக இருக்கின்றன. இவரின் சிக்ஸர்கள் கங்குலியின் ஆட்டத்தை நினைவுபடுத்துகின்றன. 2013-ம் ஆண்டில் குஜராத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் ஸ்மிருதி இரட்டைச்சதம் விளாசியிருந்தார். உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் முதன்முதலில் இரட்டைச்சதம் அடித்த வீராங்கனை இவர்தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூட்டில் ஏற்பட்ட காயத்தால் ஐந்து மாதங்கள் விளையாடாமல் இருந்தார். இதனால் உலகக்கோப்பைத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் விளையாட முடியவில்லை. ``இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் ஆடுவதே என் கனவு. அது மிஸ்ஸாகப்போகிறது" எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர், வேகமாக குணமடையவே உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைத்தது.
ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பெற்றதும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளுத்துவாங்கினார். சொந்த மண்ணில் உலகக்கோப்பையில் ஆடும் இங்கிலாந்துக்கு, ஸ்மிருதியை எப்படிச் சமாளிப்பது என்றே புரியவில்லை. ஸ்மிருதியின் அதிரடி ட்ரீட்மென்டில் இந்தியா எளிதில் வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பத்து ரன்களில் சதத்தை மிஸ்செய்தவர், அடுத்த மேட்சிலேயே சதம் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார். இந்த
உலகக்கோப்பையின் சென்சேஷனாக உருவெடுத்திருக்கிறார்.
இந்த உலகக்கோப்பைக்கு முன்னதாகவே அவர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். 2014-ம் ஆண்டு அவர் அணியில் நுழைந்த தருணத்தில், இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பக்கிங்காம்ஷைரில் நடந்த டெஸ்ட் போட்டியில், இரு அணி வீரர்களும் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் எடுத்தது. அந்த இன்னிங்ஸில் இரண்டாவது அதிகபட்சம் ஸ்மிருதிதான். இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களைக் குவித்தது. தாறுமாறாக ஸ்விங் ஆகிய ஆடுகளத்தில் இந்தியாவுக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது இங்கிலாந்து அணி. பதினெட்டு வயது ஸ்மிருதி அருமையாக ஆடி அரைசதம் அடித்து அணி வெற்றிபெற உதவினார்.

அந்தப் போட்டியிலிருந்து ஸ்மிருதி மீது கவனம் திரும்பியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. மூன்று போட்டிகள்கொண்ட டி20 தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அதில் குறிப்பிடத்தக்க பங்களித்திருந்தார் ஸ்மிருதி. முன் காலை சாதுர்யமாக நகர்த்தி விளையாடுவதில் ஸ்மிருதி வல்லவர். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தவருக்கு, அடுத்தடுத்த போட்டிகள் சோதனையாக அமைந்தன. இனிவரும் போட்டிகளில் அவர் மீண்டும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். இன்று அவருக்கு பிறந்த நாள். இந்த நாளிலிருந்து அவரின் கரியர் வேற லெவலுக்குச் செல்ல வாழ்த்துகளைப் பகிர்வோம்டென்னிஸ் உலகத் தரவரிசையில் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற பெடரர் 3-வது இடத்திற்கும், முகுருசா 5-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூலை 3-ந்தேதி முதல் நேற்று வரை லண்டன் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முகுருசாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
இந்த சாம்பியன் பட்டம் மூலம் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்த தொடருக்கு முன் ரோஜர் பெடரர் 5-வது இடத்தில் இருந்தார். தற்போது 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நம்பர் ஒன் வீராங்கனை
பெண்கள் தரவரிசையில் முகுருசா 15-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் 10 இடங்கள் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஏஞ்சலிக் கெர்பர் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். வீனஸ் வில்லியம்ஸ் 11-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.