புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2011


Chennai Super Kings won by 58 runs
Chennai Super Kings innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalMEK Husseyc Mithun b Syed Mohammad634533140.00
View dismissalM Vijayc Vettori b Aravind955246182.69
View dismissalMS Dhoni*†c Kohli b Aravind221302169.23
View dismissalSK Rainab Gayle8501160.00
View dismissalJA Morkelc Kohli b Gayle240050.00
S Badrinathnot out0000-
DJ Bravonot out6101600.00
Extras(lb 7, w 2)9
Total(5 wickets; 20 overs)205(10.25 runs per over)

Royal Challengers Bangalore innings (target: 206 runs from 20 overs)RB4s6sSR
View dismissalMA Agarwalb Ashwin10520200.00
View dismissalCH Gaylec †Dhoni b Ashwin03000.00
View dismissalV Kohlilbw b Raina353211109.37
View dismissalAB de Villierslbw b Jakati181230150.00
View dismissalLA Pomersbachc & b Jakati230066.66
SS Tiwarynot out423413123.52
View dismissalDL Vettori*c & b Ashwin01000.00
View dismissalA Mithunc Bollinger b Bravo11820137.50
View dismissalZ Khanc Hussey b Bollinger212120100.00
J Syed Mohammadnot out2200100.00
Extras(b 2, lb 2, w 1, nb 1)6
Total(8 wickets; 20 overs)147(7.35 runs per over)
Did not bat S Aravind


இலங்கை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஐ.நா. செயலாளர் நாயகமே தீர்மானிக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்சபை
[ சனிக்கிழமை, 28 மே 2011, 04:34.12 PM GMT ]
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில்இலங்கை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயலாளர் நாயகம் பான் கீ மூனே தீர்மானிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் நடைபெற்றுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவென சுயாதீனமான விசாரணைக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென நிபுணர் குழு ஐ.நா. செயலளார் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரே தீர்மானிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் ஜோசப் டைஸ் தெரிவித்துள்ளார்.  ஆயினும்  ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை மற்றும் பொதுச் சபையின் இணக்கப்பாடின்றி அவ்வாறான ஒரு சர்வதேச விசாரணைக்கட்டமைப்பை ஏற்படுத்த முடியாது என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையில் பிரஸ்தாப விடயம் குறித்து பான் கீ மூனே தீர்மானிக்க வேண்டுமென பொதுச் சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியின் போதே  பொதுச் சபையின் தலைவர் ஜோசப் டைஸ் அதனை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.மகள் திருமணத்துக்கு போகாத அமைச்சர்: ஜெயலலிதாவும், கட்சியும்தான் முக்கியம் என்கிறார்
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.த.செல்லப்பாண்டியன் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. மகளின் திருமண நாளும் அவரது எம்.எல்.ஏ. பதவியேற்பு விழாவும் ஒரே நாளில் நடந்ததுதான் இதற்கு காரணம்.

சி.த. செல்லப்பாண்டியனின் மகள் எஸ்தர் தங்கமணிக்கும், உடையார் குளம் ஜெயக்குமாருக்கும் தேர்தலுக்கு முன்னதாகவே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் கடந்த 23ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தலில் சி.த. செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது.

தமிழக அமைச்சரவை பதவியேற்றதில் இருந்து முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அடிக்கடி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இலவச திட்டங்களை செயல் படுத்துவது, அமைச்சர்கள் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து இதில் ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில் மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியது இருந்ததால் அந்த பொறுப்பை தனது சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்தநிலையில் எம்.எல்.ஏ. பதவியேற்பு விழா சி.த.செல்லப்பாண்டியன் மகளின் திருமண நாளான 23ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதா? அல்லது எம்.எல்.ஏ. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதா?என்ற கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் சி.த. செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.முதலில் தனக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், அ.தி.மு.க. வும்தான் முக்கியம் என கருதியதால் எம்.எல்.ஏ.விழாவில் கலந்து கொள்வதே சிறந்தது என கருதினார்.
 
தன்னுடைய அந்த முடிவை குடும்பத்தினரிடம் கூறி திருமணத்தை சிறப்பாக நடத்துமாறு கேட்டுக் கொண்டு, கடந்த கடந்த 22ந் தேதி பிற்பகல் சென்னை கிளம்பினார். அதன்பிறகு சி.த.செல்லப்பாண்டியனின் மகள் திருமண வேலைகளை அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் செவ்வனே செய்து திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

மகளின் திருமணம் நடந்த அதே வேளையில் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ.பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருந்தார்.   அதன்பிறகும் தனது துறை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டியது இருந்ததால் தொடர்ந்து சென்னையிலேயே முகாமிட்டிருந்தார். தனது மகளுக்கும், மருமகனுக்கும் போன் மூலமாகவே தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தநிலையில் 28.05.2011 அன்று காலை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி வந்தார். முதலாவதாக தனது மகள், மருமகனை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் எம்.எல்.ஏ.பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டமைக்கான காரணம் குறித்து கேட்ட போது அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கூறியதாவது:

எனக்கு முதலில் அம்மாவும், கட்சியும்தான் முக்கியம். அதன்பிறகு தான் குடும்பம். ஆகவேதான் எனது மகளின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. தூத்துக்குடி தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச்செய்துள்ளனர்.

மேலும் எனக்கு அமைச்சர் பதவியை அம்மா வழங்கியுள்ளார். அம்மா மக்களுக்காக 24 மணிநேரமும் உழைக்கிறார். அம்மாவுக்கு உறுதுணையாக இருந்து மக்களுக்கு உழைக்க விரும்புகிறேன். அதற்காகத்தான் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதில் இருந்து சென்னையில் துறை பணிகளை கவனித்து வந்தேன் என்றார்.

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் 
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.


முன்னதாக சட்டசபையில் மு.க.ஸ்டாலினும், கொறடா சக்கரபாணியும் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்டசபைக்குள் வந்தார். அவர் வரும்போது மு.க.ஸ்டாலின் உள்பட சபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு ஜெயலலிதாவும் வணக்கம் தெரிவித்தார்.
அதேபோல சபை நிகழ்ச்சிகள் முடிந்ததும் வெளியில் வந்த சபாநாயகர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் உள்பட முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

உதயன் செய்தியாளர் மீது இனம்தெரியாதோர் சரமாரித் தாக்குதல்

E-mailஅச்சிடுகPDF

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பிராந்திய பத்திரிகையான உதயனின் அலுவலகச் செய்தியாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகில் வைத்து ஜந்து பேர் கொண்ட இனம் தெரியாதகுழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டை மற்றும் விக்கெட்டுக்களால் அவர்மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த 36 வயதுடைய எஸ்.கவிதரன் இன்று காலை வழமை போல் தொழில் நிமித்தம் உதயன் அலுவலகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்..

குறித்த செய்தியாளர் உதயன் பத்திரிகையில் சில முக்கியமான கட்டுரைகளையும் எழுதி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்

அழுத்தங்களுக்கு உள்ளாகும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-28 08:11:51| யாழ்ப்பாணம்]

Ban Ki Moonசர்வதேச ரீதியான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்குகளில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், தொடர்ந்தும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இன்னர்சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அவர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் புறக்கணிக்கப்பட்டது.

அத்துடன் அது தொடர்பில் பல்வேறு அழுத்தங்களை பான் கீ மூன் சந்தித்து வருகிறார். இதற்கிடையில் கிரிகிஸ்தான் நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி பிரபல எழுத்தாளர் கிமோ கல்ஜுனேனை அறிக்கை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் அந்த நாட்டினுள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தீர்மானம் ஒன்று கிரிகிஸ்தான் நீதிமன்றில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்கீயிடம் இன்னர் சிட்டிபிரஸ் கேள்வி எழுப்பியுள்ள வேளையில் கிமோவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாகாது எனத் தெரிவித்தார். எனினும் இந்த அறிக்கை பயன்படக்கூடியது என்று அவர் தெரிவித்தார்.

இதன்போது குறித்த அறிக்கையின் அடிப்படையில் கிரிகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது அங்கு இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளாதா என இன்னர்சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது. இதேபோன்ற செயற்பாட்டினையே இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பிலும் பான் கீ மூன் வெளிப்படுத்தி வருகிறார் என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியது.

வெற்றிக் கொண்டாட்டங்களின் போது மோசமான காலநிலை ஏன்? தமிழர்களின் சாபமா ? கண்ணீரா? : ஆராயும்  மஹிந்த ராஜபக்ஷ 
[ சனிக்கிழமை, 28 மே 2011, 07:01.14 AM GMT ]
இலங்கையில் நேற்று நிலவிய மோசமான காலை நிலை தொடர்பில், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கவலை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் அரசாங்கத்தின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டது.
இதன் போது மேற்கொள்ளப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் மோசமான கால நிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வான் படையினரின் 35 விமானங்களில், 10 விமானங்களின் சாகசங்களே நிகழ்த்தப்பட்டன. மோசமான காலநிலை காரணமாக ஏனைய விமானங்களின் சாகசங்கள் இடை நிறுத்தப்பட்டன.
அத்துடன் பரசூட் சாகசங்கள் மற்றும் ஆளில்லாத கடற்படை வள்ளங்களின் சாகசங்கள் என்பனவும் இடை நிறுத்தப்பட்டன.
இதேபோன்று கடந்த வருடம் யுத்தக் வெற்றி கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படும் போதும், திடீரென கால நிலை மோசனமானது.
இந்த நிலையில் கவலை அடைந்துள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும், அவருக்கு நெருங்கியவர்களும், உடனடியாக பிரபல ஜோதிடர் ஒருவரை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்த வெற்றி கொண்டாட்டங்களின் போது ஏற்படுகின்ற இவ்வாறான மோசமான காலநிலை, தமது அரசியலுக்கு சிவப்பு கொடியாக இருக்கலாம் என ஜனாதிபதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் திருகோணமலைக் கட்டளைத்தளபதி பதுமனுக்கு தடுப்புக் காவல் உத்தரவு
[ சனிக்கிழமை, 28 மே 2011, 06:35.19 AM GMT ]
விடுதலைப் புலிகளின் திருகோணமலைக் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமனுக்கு திருமலை உயர்நீதிமன்றம் தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் மீது திருகோணமலை உயர் நீதிமன்றத்தில் பொலிசாரால் குற்றச்சாட்டுகள்  முன் வைக்கப்பட்டுள்ளன.
சிவசுப்பிரமணியம் வரதநாதன் எனும் இயற்பெயர் கொண்டவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பதுமன் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தவருமான அவரை  பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸார் நேற்று திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நிறுத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட  காலத்தில் அவருடைய கட்டளையின் கீழ் விடுதலைப் புலிகள் பல இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அத்துடன் ஏராளமான படையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் அவருக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவ்வாறான சம்பவங்கள் காரணமாக பதுமனுக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது சட்டப்பிரிவின்  பிரகாரம் பயங்கரவாதத்துக்கு உதவியளித்தமை மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  
பொலிசார் முன்வைத்த விடயங்கள் மற்றும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட திருகோணமலை உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி பதுமனை ஜுலை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

யாழ். பாழடைந்த வீடுகளில் அரங்கேறும் பாலியல் துஷ்பிரயோகங்கள்!

E-mailஅச்சிடுகPDF

யாழ் மாவட்டத்திலுள்ள தீவகப் பிரதேசங்களில் மக்கள் குடியிருக்காத நடமாட்டமில்லாத பாழடைந்த வீடுகளில் பாலியல் துஷ்பிரயோகச் செயல்கள் இடம்பெறுகிறன.

இவ்வாறான துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றதற்கான தடயங்கள் அல்லைப்பிட்டி கிராமத்திலுள்ள பாழடைந்ந வீடுகளில் காணப்படுகிறது.

இங்கு நீண்ட காலமாக மக்கள் குடியிருக்காத வீடுகளில் இருந்து பெண்ணின் சுடிதார் ஆடையும் பாதுகாப்பான பாலியல் செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆணுறைகளும் மீட்க்கப்பட்டுள்ளன.

இத்தகைய தடயங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் குடியிருக்காமல் இவ்வாறு பாழடைந்து போய் உள்ள வீடுகளில் உடனடியாக அந்த அந்த வீட்டு உரிமையாளர்கள் ஒன்றில் அவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ குடியிருக்க வர வேண்டும்.

அப்படி குறுகிய காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் குறித்த பாழடைந்த வீடுகளில் யாரையாவது வசிக்க ஏற்பாடு செய்யாவிடில் கிராம மக்கள் சேர்ந்து வீடில்லாதவா்களை குடியமா்த்துவோம் என்று கூறினார்கள்.

இப்படியாக பாழடைந்த வீடுகளின் உரிமையாளர்களில் கணிசமானோர் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad