புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2023

www.pungudutivuswiss.com

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 11 வயது பிக்கு! விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்

Sri Lanka PoliceSri Lanka Police Investigation
 1 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

11 வயதுடைய பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 11 வயது பிக்கு! விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம் | An 11 Year Old Boy Who Was Sexually Assaulted

விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம் 

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 11 வயது பிக்கு! விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம் | An 11 Year Old Boy Who Was Sexually Assaulted

பிக்கு வைத்தியசாலையில்

சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  

28 ஏப்., 2023

உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கும் நோட்டோ

www.pungudutivuswiss.com

உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நோட்டோ நட்பு நாடுகள் கொடுத்து இருப்பதாக நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட நோட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நோட்டோ நட்பு நாடுகள் கொடுத்து இருப்பதாக நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட நோட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

27 ஏப்., 2023

கெய்க்வாட், ஷிவம் துபே அதிரடி வீண்: 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

www.pungudutivuswiss.com
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில்
ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. ஜெய்ப்பூர், 16-வது ஐ.பி.எல்.

புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரகசிய ட்ரோன் விமானம்: அம்பலப்படுத்திய ஜேர்மன்

www.pungudutivuswiss.com

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது அரசாங்கம்!-கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.co

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதற்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருந்ததாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதற்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருந்ததாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

நெடுந்தீவில் உயிர் தப்பிய 100 வயது மூதாட்டியும் மரணம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 100 வயதான மூதாட்டி இன்று  உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 100 வயதான மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளார்.

குருந்தூர் மலை விகாரை கட்டுமானத்தை பார்வையிடவுள்ள நீதிவான்

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கு விசாணைகள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாணைகள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் விக்ரகங்களை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவு

www.pungudutivuswiss.com

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, எடுத்துச் சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, எடுத்துச் சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாணக்கியனிடம் மன்னிப்புக் கோரினாார் அலி சப்ரி!

www.pungudutivuswiss.com
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  'இனவாதி, புலி' என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி  'இனவாதி, முட்டாள்' என்றும் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து எனக்கு எதிராக கருத்துக்களை குறிப்பிட்டார்கள். இவ்விருவரின் கருத்துக்களால் எனது  பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விருவரும் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்வதற்கு தடை விதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார 'இனவாதி, புலி' என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி 'இனவாதி, முட்டாள்' என்றும் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்து எனக்கு எதிராக கருத்துக்களை குறிப்பிட்டார்கள். இவ்விருவரின் கருத்துக்களால் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விருவரும் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்வதற்கு தடை விதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்

நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு கடற்படை , இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா

www.pungudutivuswiss.com


நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை , இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்  சபையில் வலியுறுத்தினார்.

நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை , இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்

பால்டிக் கடலில் ரஷ்யப் போர் விமானங்கள் வழிமறிப்பு

www.pungudutivuswiss.com
பால்டிக் கடலில் ரஷ்ய உளவு விமானம் மற்றும் போர் விமானங்களை யேர்மன் விமானப்படை வழிமறித்துள்ளது.

முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்திற்கு நீராடச் சென்ற போதே,  இந்த அனர்த்தம் நேரிட்டுள்ளது.

முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்திற்கு நீராடச் சென்ற போதே, இந்த அனர்த்தம் நேரிட்டுள்ளது.

முல்லைத்தீவில் குட்டிகளுடன் கிணற்றில் விழுந்த யானை

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், பாதுகாப்பாக ) மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, முள்ளியவளை தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள களிக்காடு விவசாய கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தாய் யானை ஒன்றும் இரண்டு குட்டிகளும் வீழ்ந்துள்ளன.
இந்த யானைகள், நேற்று முன்தினம் இரவு வீழ்ந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், பாதுகாப்பாக ) மீட்டுள்ளனர். முல்லைத்தீவு, முள்ளியவளை தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள களிக்காடு விவசாய கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தாய் யானை ஒன்றும் இரண்டு குட்டிகளும் வீழ்ந்துள்ளன. இந்த யானைகள், நேற்று முன்தினம் இரவு வீழ்ந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

26 ஏப்., 2023

கிழக்கு மாகாண ஆளுநராக தமிழர்! வடக்கு உட்பட பல மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள்

www.pungudutivuswiss.com
கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்

விருது வழங்கும் விழா; மனைவியிடம் தமிழில் பேசும்படி கூறிய ஏ.ஆர். ரகுமான்

www.pungudutivuswiss.com
சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் மனைவியிடம் இந்திக்கு 
பதிலாக தமிழில் பேசும்படி ஏ.ஆர். ரகுமான் கூறியதும் பலத்த கோஷம் 
எழுந்தது. சென்னை, சென்னையில் விருது வழங்கும் விழா ஒன்றில் 

கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாமல் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

www.pungudutivuswiss.com


நேற்று மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், அங்கு தரையிறங்க முடியாத நிலையில் மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116 என்ற விமானமும்,
சென்னையில் இருந்து பயணித்த யூ.எல். 128 என்ற விமானமும் மற்றுமொரு விமானமும் மத்தளவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

நேற்று மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், அங்கு தரையிறங்க முடியாத நிலையில் மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116 என்ற விமானமும், சென்னையில் இருந்து பயணித்த யூ.எல். 128 என்ற விமானமும் மற்றுமொரு விமானமும் மத்தளவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கொடிகாமத்தில் விபத்து பொலிஸ் பலி! - மற்றொருவர் படுகாயம்!

www.pungudutivuswiss.com


கொடிகாமம்- எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம்- எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

முழு முடக்கப் போராட்டம் வெற்றி! - நன்றி தெரிவித்து அரசியல் கட்சிகள் அறிக்கை

www.pungudutivuswiss.com

 வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றி வரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு :

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றி வரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு 

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்! -திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சுமந்திரன்.

www.pungudutivuswiss.com


பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்.

பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்

25 ஏப்., 2023

ஹர்த்தாலுக்கு வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு!

www.pungudutivuswiss.com

இன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பூரண ஆதரவு வழங்கியுள்ளது.

இன்று வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பூரண ஆதரவு வழங்கியுள்ளது

வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர்

உக்ரைனில் தமக்குள்ளே மோதிக்கொள்ளும் ரஷ்ய படைகள்

www.pungudutivuswiss.com
உயிரிழப்புகளும் ஏராளம்உக்ரைன் போர் கடந்த ஒருவருடத்தை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில் போரின் முன்வரிசையில் உள்ள ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர்

யேர்மனியில் மகிழுந்தை மோதித்தள்ளியது தொடருந்து: மூவர் பலி

www.pungudutivuswiss.com
வடக்கு யேர்மனியில் உள்ள கனோவர் நகருக்கு அருகில் தொடருந்தும் மகிழுந்தும் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

KKRvCSK: முன்னிலையில் சென்னை! - `6 6 6 6 4 1 4 1 6 4' சளைக்காமல் சண்டை செய்த ரஹானே-துபே கூட்டணி!

www.pungudutivuswiss.com

12 ஓவர்கள் முடிய ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் என்ற நிலையில் சி.எஸ்.கே. ஈடன் கார்டனின் இந்த நல்ல பேட்டிங் ட்ராக்கிற்கும் சற்றே

மத போதகர் பேச்சால் 'இயேசுவை சந்திக்க' பட்டினி கிடந்து இறந்தார்களா மக்கள்? கென்யாவில் தோண்டத் தோண்ட உடல்கள்

www.pungudutivuswiss.com
கென்யாவின் கடற்கரை நகரான மெலிந்தி அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47

ஒரே ஒரு போட்டிதான்! சென்னை அணி செய்த 6 சிறப்பான சம்பவங்கள்!

www.pungudutivuswiss.com
கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று விளையாடிய சென்னை அணி சில மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது.

24 ஏப்., 2023

வடக்கு கிழக்கு நாளை முடக்கம்

www.pungudutivuswiss.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை   இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன

யாழ்ப்பாணத்தில் நடிகர் திலகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் குழப்பம் விளைவித்த பெண்!

www.pungudutivuswiss.com


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிலையில், தன்னை ஏற்பாட்டாளர் எனக் கூறிய பெண் ஒருவர் ஊடகங்களை வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிலையில், தன்னை ஏற்பாட்டாளர் எனக் கூறிய பெண் ஒருவர் ஊடகங்களை வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது

நெடுந்தீவில் கொல்லப்பட்ட கணவன், மனைவி சடலங்கள் ஒப்படைப்பு!

www.pungudutivuswiss.com


நெடுந்தீவில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள்  உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இவர்களது சடலங்கள் கொக்குவில் பிரம்படி ஒழுங்கையிலுள்ள உறவினர் ஒருவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள் உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள் கொக்குவில் பிரம்படி ஒழுங்கையிலுள்ள உறவினர் ஒருவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது!

www.pungudutivuswiss.com

முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

23 ஏப்., 2023

14 வயது சிறுமி பாலியல் வல்லுறவு - 21 வயது காதலன் கைது!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் வசிக்கும் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய 21 வயதான சிறுமியின் காதலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் வசிக்கும் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய 21 வயதான சிறுமியின் காதலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ். பல்கலையில் இன்று சிவாஜி குறித்த ஆய்வு நூல் வெளியீடு - ராம்குமார் வருகை.

www.pungudutivuswiss.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று  பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

நெடுந்தீவில் நடந்தது என்ன? - கும்பாபிஷேகத்துக்குச் சென்றவர்கள் கொன்று போடப்பட்டது ஏன்?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன

22 ஏப்., 2023

பிரேக்கிங் நியூஸ் நெடும்தீவில் கடற் படை முகாம் அருகே வெளிநாட்டு தமிழர் இருவர் உட்பட ஐவர் வெட்டிக் கொலை

www.pungudutivuswiss.com
____________________________
நெடுந்தீவு மாவிலி இறங்குறையினை



அண்மித்தவாறு அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து மகாநாயக்கர்கள் கடிதம்!

www.pungudutivuswiss.com

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்

21 ஏப்., 2023

நல்லூரில் விடுதிக்குள் நுழைந்து அருண் சித்தார்த் வன்முறைக் கும்பல் தாக்குதல்!

www.pungudutivuswiss.com
[Friday 2023-04-21 07:00]

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் இராணுவ மற்றும் அரச ஆதரவுப் பின்னணி 
கொண்ட அருண் சித்தார்த் தலைமையிலான வன்முறைக் கும்பல், ஹோட்டல் 

யேர்மனியில் வேலை நிறுத்தம்: மூன்று விமான நிலையங்கள் வெறிச்சோடின!

www.pungudutivuswiss.com
யேர்மனியில், ஊதிய உயர்வுகோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த
 போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகளின்றி விமான நிலையங்கள் நேற்று 

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்  சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
 உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் முன்னணி இணையப் போவதில்லை

www.pungudutivuswiss.co


வடக்கு கிழக்கில் எதிர்வரும் 25 ஆம் திகதி கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையப் போவதில்லை என்றும் அவ்வாறு இணைந்தால் அது தமிழ்  மக்களை முட்டாள் ஆக்கும் செய்பாடாகவே அமையும் எனவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 25 ஆம் திகதி கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையப் போவதில்லை என்றும் அவ்வாறு இணைந்தால் அது தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் செய்பாடாகவே அமையும் எனவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

ஜமைக்காவில் குடும்பத்துடன் பிரதமர் ட்ரூடோ விடுமுறை கொண்டாட மக்கள் வரிப்பணத்தில் 162,000 டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்

www.pungudutivuswiss.com

ஜமைக்காவில் ஒருவார காலம் குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட சென்ற பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். ஜமைக்காவில் குடும்பத்துடன் பிரதமர் ட்ரூடோ விடுமுறை கொண்டாட மக்கள் வரிப்பணத்தில் 162,000 டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜமைக்காவில் ஒருவார காலம் குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட சென்ற பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். ஜமைக்காவில் குடும்பத்துடன் பிரதமர் ட்ரூடோ விடுமுறை கொண்டாட மக்கள் வரிப்பணத்தில் 162,000 டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் புதை படிமங்களாக, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு 6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் புதை படிமங்களாக, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன

உலக பணக்கார நகரங்களின்பட்டியலில் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.

www.pungudutivuswiss.com

உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் ஓடிய பெண்மணி!

www.pungudutivuswiss.com

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய இந்திய வம்சாவழி பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய இந்திய வம்சாவழி பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

20 ஏப்., 2023

சன நொிசல் ஏமனில் 85 பேர் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com

கைதடியில் கோர விபத்து - ஏஎஸ்பி பலி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - கைதடிப் பகுதியில் நேற்று இரவு  இடம்பெற்ற வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப்  பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கைதடிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு தலைமையகத்தில் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல்!

www.pungudutivuswiss.com


அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில், கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை தலைமையகத்துக்கு சொந்தமாக 36 துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில், கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை தலைமையகத்துக்கு சொந்தமாக 36 துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்

பிள்ளையானை துரத்தும் சாணக்கியன்

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு, மாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும்
 ஐஸ் தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதிகள்
 பெறப்படவில்லை எனவும் குறித்த திட்டங்களுக்கு அரசியல் அழுத்தங்கள்

19 ஏப்., 2023

உக்ரேனிய உணவுப் பொருட்களுக்கு மேலும் மூன்று நாடுகள் தடை!

www.pungudutivuswiss.com

உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் தற்போது இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன.

உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் தற்போது இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன

யங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

www.pungudutivuswiss.com


உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் , ஊடகங்கள் ஒருபோதும் முடக்கப்பட மாட்டாது.  எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி , சிறைச்சாலை அலுவல்கள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் , ஊடகங்கள் ஒருபோதும் முடக்கப்பட மாட்டாது. எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி , சிறைச்சாலை அலுவல்கள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாளை முதல் காலி முகத்திடலில் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை!

www.pungudutivuswiss.com


கொழும்பு - காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள் , இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக அனுமதி வழங்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் வியாழக்கிழமை  முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு - காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள் , இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக அனுமதி வழங்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் வியாழக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது

யாழ்.மாநகர சபை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனி நபர்!

www.pungudutivuswiss.com

சூடான் இராணுவத் தரப்பினரிடையே மோதல் 185 பேர் பலி!! 1800 பேர் காயம்

www.pungudutivuswiss.com
இடம் - துணை இராணுவக் குழுத் தலைவர் ஜெனரல் ஹம்தான் டகாலோ: வலம் - 
இராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான்

ஐரோப்பாவுக்குள் இலங்கையர்கள் நுழையும் புதிய வழி!

www.pungudutivuswiss.com


ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்

தேசிய அரசு - நிராகரித்தார் சஜித்!

www.pungudutivuswiss.com


மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை.எனவே போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை.எனவே போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து!- ஒருவர் பலி, 10 பேர் காயம்.

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸும்  டிப்பர் வாகனமும்  தம்புள்ளைக்கு அருகில் நேருக்கு நேர் மோதின. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் டிப்பர் வாகனமும் தம்புள்ளைக்கு அருகில் நேருக்கு நேர் மோதின. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ad

ad