அந்த வீடியோ காட்சியைப் பார்க்கும் யாரும், இனி ஏ.டி.எம். பக்கம் போக, ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்கவே செய்வார்கள்! அப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது, பெங்களூருவில்!
பெங்களூருவில், கார்ப்பரேசன் வங்கியில் மேலாளராக இருப்பவர், ஜோதி உதய். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல காலை 6.30மணிக்கு வேலைக்குப் புறப்பட்டார். போகும் வழியில், பணம் எடுப்பதற்காக, ஜே.சி. சாலையில் உள்ள கார்ப்பரேசன் வங்கி ஏ.டி.எம்.முக்குள் சென்றார். சில மணித்துளிகளில்..