புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2020

விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 2-சுமந்திரன்  இப்போதைய  ஸ்ரீதரன்  போன்ற விடுதலை போன்ற எதிர்ப்பாளர்களை  ஏன்   வைத்துள்ளீர்கள் ? 
விடை 2- சுமந்திரன் ஆரம்பத்தில்  நல்ல சடடவலராகவும்  மும்மொழி திறன் கொண்டவராகவும்  கட்சியில் நுழைந்தார் .  அவருக்கு  தேசியப்பட்டியல் நியமனம்  வழங்கப்பட்டு  உலாவங்கப்படார் .அப்புறம்  அடுத்த தேர்தலில்  அவரை மக்கள் முன்  சென்று  வேறுதான் வரவேண்டும் என  தேர்தலில்  பங்கு பற்றி  மக்கள்   தான் அவரை  தெரிவு செய்தனர் .பின் வந்த காலங்களில்  புலிகள் எதிர்ப்பு  ஒவ்வாமை  கருத்தியலை  பகிரங்கமாக பல இடங்களில் வெளிப்படுத்தினார்  சிலவேளை மழுப்பல் பதில்களையும் வாரி  வழங்கினார்  ஆனாலும் இனிவரும் காலங்களில் இவரால் கட்சிக்கு ஆபத்தான  கட்டிடம்  என்பதால் கட்சிக்குள்ளேயே  விமர்சனங்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டு மக்கள் முன்  விளக்கம்  கோரப்படுகின்ற து  இது கட்சிக்குள் உள்ளே உள்ள ஜனநாயக மரபு  இப்போது மக்கள் முன்  நிறுத்தி  வைக்கப்பட்டுளார்  மக்கள் அவரை  நிராகரிக்கவேண்டும் அடுத்து ஸ்ரீதரன்  .எல்லோரும் கட்சிக்குள்ளே வரும்போது  நல்ல பிள்ளைகளாக  தான்  வருவார்கள்  கட்சி செல்வாக்கு  கட்சி வாக்கு வாங்கி  என  வளர்ந்து முகவரி  தேடிக்கொண்ட பின்னர் தான்  சுரூப  வெளிவரும் அப்படி  தான்  ஐவரும்  இவருக்கென்று  பெரிய வாக்கு வங்கியை  உருவாக்கிய  இறுமாப்ப்பில்   சுமந்திரனோடு  அணி சென்ற்து  புலி  எதிர்ப்பு  பக்கமாக  நடிக்கிறார்  .இவருக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இவர்  வெற்றி பெற்றாலும்  75  கள்ள  வாகு பிரச்சினை சனியனாகா  மாறும்  அதனை விட இவரது  ஒழுக்கற்றல் சம்பந்தமாக  மாவை நடவடிக்கை எடுப்பதாக  வேறு கூறியுள்ளார் யாழ்  கிளி  மாவட்த்தில் 10  வேட்ப்பாளர்  கூட்ட்டமைப்பில் உள்ளனர்  மக்கள்  சுமந்தினையும் ஸ்ரீதரனையும்  தெரிவு செய்யாமல்  விடலாம்  தானே  இது மக்களின் கவனத்துக்கு 
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா  வினாக்களா  ? எஸ். எஸ். தீவகன் 
வினா 1.நல்லாட்சி அரசில் என்ன கிழித்தீர்கள் ?
விடை .பலமாக இருந்த புலிகளின் காலத்திலேயே பேச்சுவார்த்தை  உலக நாடுகளின் மத்தியஸ்தம் என்று  சென்றும் வருடங்களை இழுத்தடித்து  தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா புலிகளின் மௌனிப்புக்கு பின்னர்  பலவீனமான  நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  எளிதில்   ஏதும் கொடுக்கவா  போகிறார்கள்  அதுவும்  சில வருடங்களில் . ஒரு அரசு சொற்ப பலத்துடன் இருக்கும்போது தான்  பேரம் பேசி  இணங்க  வைக்க   கூடிய காலமாகும் அதனையே விட  ஸ்ரீலங்கா  வரலாற்றிலேயே  இரண்டு பெரிய பெரும்பான்மை கட்சிகளும் இணைத்து ஆட்சி செய்த ஒரே  காலம்  அந்த காலத்தில் தான்  ஏதும் ஒரு  தீர்வு  கிடைக்குமானால்  கிழித்தெறியப்படாத ஒப்பந்தமாகும்   நம்பியே  கூட்டமைப்பு  இணைக்க நிலையை எடுத்தது .  சிலர் கூறுவது போல  கேட்ட்து தாராவிடடாள் ராஜினாமா  செய்யலாமா  ?  செய்தால் என்ன நடக்கும் பாராளுமன்றில் மகிந்த தரப்பு நல்லாட்சியை கவிழ்க்கும் . அதாவது  கூட்டமைப்பு இல்லாவிடின்   பெரும்பான்மை  கிடைக்கும் கூட்டமைப்பு வைக்கலாவிடினும் இதே நிலைமை தான்  உதாரணம்  வேலணை பிரதேச சபை  தவிசாளர்  டேகிர்வில்  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி  உறுப்பினை ர்   செந்தூரன் வேண்டுமென்றே   வாக்கெடுப்பு  முடிந்த பின்  வந்து  மறைமுகமாக ஈபிடிபிக்கு உதவியது போல .ஆக  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று  உள்ள  உறுப்பினர் பலமும் போய்  நல்லாட்சியும் கவிழ்ந்து  1-2 வருடங்களின் முன்னேயே   குழப்பநிலை  வந்து  எமக்கு என்ன பலன் .
அதே  தீர்வு கோரிக்கையோடு  கம்பெரேலியா  பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதி  என்பவதரியும் பயன்படுத்தி  போருக்கு பின்னர் அழிந்து  போயுள்ள எமது  நிலத்தை  ஓரளவாது  நிவர்த்தி செய்து மக்களை  மூச்சுவிட செய்ய முடிந்தது  அல்லவா  ஈபிடிபி  போன்றோரின் கட்டுப்பாட்டில் பலவருடங்களாக   கிடைக்காத  அபிவிருத்தி  சிலவருடங்களில்  கிடைத்துள்ளதை  சீர்தூக்கிப்பார்க்கலாம் இப்போது  கூக்குரலிடும் மாற்று  அணிகள் இரண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டவர்கள் தான் அவர்களும்  அங்கெ சென்று  எதனை  செய்தார்கள் அவர்களின் காலத்தில் என்றும் கேட்கலாம் மக்களே சரி   இந்த தடவை  வெற்றி பெற்று போனாலும்  அடுத்த மாதங்களிலேயே  அதுவும்  கோத்தாவின் ஆட்ச்சியில் தீர்வு  கொண்டு வருவார்களா ? அல்லது சமஸடி  எடுப்பார்களா ?அல்லது  உடனேயே  ராஜினாமா செய்வார்களா ? ஒற்றையாட்சி  சடடதுக்கு கீழே  தான் சாத்தியப்பிரமணமே  எடுக்க வேண்டும் மறந்து விடாதீர்கள் 22.14.16  என்று  போனபோதே  அப்போதைய   அரசுகளே  கொடுக்காத  தேர்வினை  கோத்த  என்னும் கடும்புக்குவாதி  கொடுப்பாரென்று  நம்புவீர்களா  ?
  தீவகத்தில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சாட்டி  மாவீரர்   துயிலும் இல்லத்தை  புதுப்பித்து  மாவீரர்  நாளை  நிகழ்த்தியவர்கள் கூட்ட்டமைப்பும்  செண்பகம் அமைப்பும் மட்டுமே  மற்றவர்கள்  இப்போதைய  சிவப்பு மஞ்சள் கொடிகாரர்   எங்கே போனார்கள் 
தீவகத்தில் கட்சி தலைவரை கேவலப்படுத்தி கட்சியால்  கிடைத்த கம்பெறிலியாவை காரணம் காட்டி வாக்கு சேகரிக்கும்  ஸ்ரீதரன் 
தமிழரசுக்கட்சியின்  பேசுபொருளாக  ஸ்ரீதரன் 

சைக்கிள் கட்சியின் புலிவேசம் எப்போது கலையும்

  தேர்தலில்   டக்ளஸ்  விஜயகலா  அங்கஜன்  தோல்வி  காணலாம் .தமிழ் தேசியக்கட்சிகளுள்ளேயே  7  ஆசனங்களும்  பங்கிடப்படலாம் எளிமைக்கு  மாவை  வரலாறு  அனுபவம் நீண்டநாள் கட்சி பனி தலைமைக்கு  மாவை  கோடை  ஊடகப்பிரசாரம்  சரவணபவன் மகளிர்   கணவனின் அனுதாபம்  சசிகலா   கிளிநொச்சி தனிமை  சரியாருக்கு  
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறுவார்களா என்பது சந்தேகமே.தேர்தலில்  நிறைய  சுயேச்சை குழுக்களும்  தேசியக்கட்சிகளும்  ஐ தே  க  இரண்டு அணிகளாகவும் போட்டி   இடுகின்றன ,இதனால்  இந்த காட்சிகள்  அல்லது சுயேச்சைகள்  பெரும் வாக்குகள்  மொத செல்லுபடியான   வாக்குகளில் 5  வீதத்துக்கு குறைவாக இருந்தால் அந்த  வாக்குகள்  கழிக்கப்படும் மீதி  மொத்த வாக்குகளில்  6  ஆசனகளுக்கக்கா  ஆரால்  வகுக்கப்படும்  வாக்குகளின்  எண்ணிக்கையில்  ஆசனகள்   கட்சிகளுக்கு பங் கீடாகும் விஜயகாலவின்  20 ஆயிரம்  வாக்கு வாங்கி   இரண்டாக உடையும்  தொலைபேசிக்ககா  பிரியும் . அங்கஜன்  அணியும்  டக்ளஸ்  அணியும்  ஒரே  கோத்தாவின் அணி  என்பதால்  அவர்களுக்குள்ளேயே  இழுபறி  வாக்கு  வங்கி  சிதறும் .   கூடுதல் வாக்குகöலாய்   கூட்ட்டமைப்பே  பெயரம்  கணிப்பு  இருப்பதால்  கூட்டமைப்புக்கு ஒரு  போனஸ்  ஆசனம்  எடுத்து  வைக்கப்படும் மீதம் ஆறில்   கூட்டமைப்பு 3  ம்   சைக்கிள் மீன்  அணிகள்  தலா ஒவ்வொன்ருமாக  பங்கு  போட்டுக் கொள்ளலாம்  முக்கியமாக  கூடடைப்புக்கு அடுத்து  இரண்டாம்  மூன்றாம் இடங்களை  சொற்ப  வாக்கு  வித்தியாசத்திலாவது  அடையும்  கட்சிக்கே 6 , 7  ஆம் ஆசனங்கள்  கிடைக்கும்   உதாரணமாக  சைக்கிள் 20000 வீணை  19600 மீன்  19200   மொட்டு 19100  யானை 18 900 -சைக்கிளும் வீணையும்  ஒவ்வொன்று மற்றவைக்கு இல்லை  அதே போல்  சற்று  மாறி  சைக்கிள் 20000  மீன்  19800  வீணை  19300   என்றால்  டக்ளஸ்  தோல்வி  
இனி  கூட்ட்டமைப்பை பொறுத்தவரை  சுமந்திரன்  தோல்வி  நிச்சயமாகி  விட்ட்து  ஸ்ரீதரனின் வாக்கு  வாங்கி அவரது   வாய்கொழுப்பாலும்  சுமந்திரன்  இணைப்பு  கொளகையாலும் சந்திரகுமாரின்  பிரிப்பாலும்  சரிவு  காணப்படும்  இருந்தாலும்  தட்டி தடுமாறி  வெல்லலாம் சசிகலா  விருப்பு வாக்கில்  முன்னேறினால்  ஸ்ரீதரனுக்கு சரிவு   நிச்சயம் .மாவை  சித்தர் சரவணபவன் நான்காம் இடம்  ஸ்ரீதரன் அல்லது சசிகலா  இது ஒரு  கட்டிடம் அல்லது  மாவை  சித்தர்  ஸ்ரீதரன்  நான்காம் இடம்  சரவணபவன் அல்லது சசிகலா  என்ற  நிலை  உருவாகும் கஜதீபனுக்கும் கணிசமான  வாக்கு  வாங்கி  கிடைக்கும் இருந்தாலும்  சித்தரின்  வங்கியை உடைத்தால்  சித்தருக்கும்  நட்டம் 

விஜயகலா மகேஸ்வரன் தோல்வியடைந்து டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினாலும், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சாத்தியமற்றதே.

கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால் சலுகை, நிவாரண அரசியலுக்குப் பழக்கப்பட்ட வாக்காளர்கள் கூட, இம்முறை அங்கஜன், டக்ளஸ் ஆகியோருக்கு வாக்களிப்பர் என்று கூற இயலாது. விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்களிப்பர் என்று சொல்லவும் முடியாது.

டக்ளஸ் தேவானந்தாவோடு செயற்பட்ட சந்திரகுமார் சுயேட்சையாகப் போட்டியிடுவது. ஈபிடிபிக்குப் பெரும் சவாலாகும். தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து சிறிதரனின் தனிப்பட்ட வாக்குச் சரிவுக்கும் இது காரணமாக அமையலாம்.

ஆகவே தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுமே இம்முறை ஆசனங்களைப் பங்கிட்டுக்கொள்ள முடியும். முதற் சுற்று ஆசனப் பங்கிட்டில் தமிழரசுக் கட்சிக்கே ஆசனங்களும் போனஸ் ஆசனமும் கிடைக்கலாம்.

2015ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கு ஒருவர் 48ஆயிரத்து முந்நூற்றி 60 வாக்குகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூற்றி ஏழு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி, முதல் சுற்று ஆசனப் பங்கீட்டில் நான்கு ஆசனங்களைப் பெற்றது. 14ஆயிரத்து 137வாக்குகள் எஞ்சியிருந்தன.

இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் 30ஆயிரத்து 232 வாக்குகளைப் பெற்ற டக்ளஸ் தேவானந்தாவும், 20ஆயிரத்து 25வாக்குகளைப் பெற்றிருந்த விஜயகலா மகேஸ்வரனும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றிருந்தனர்.

17ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்றிருந்த அங்கஜன், 15ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆசனங்களைப் பெறமுடியவில்லை.

கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற்று ஐந்து ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது.
2015ஆம் ஆண்டு அங்கஜன் தோல்வியடைந்தாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பிரதியமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது, தனது அமைச்சின் மூலமாகக் குறைந்த பட்சம் உதவிகளைச் செய்திருக்கிறார்.

இதனால் இம்முறை தேர்தலில் அங்கஜன் நம்பிக்கையோடு போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்கிறார். ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு என்பதில் இருந்து விலகித் தன்னைத் தனித்துவமாகவும் காண்பிக்கிறார் அங்கஜன்.

டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் வாக்கு வங்கிகளையே இலக்குவைத்தும் அங்கஜன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இதனால் டக்ளஸ். விஜயகலா ஆகியோரின் வாக்குகள் இம்முறை சிதைவடையப் போகின்றன. ஏனெனில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குகளை அங்கஜனால் உடைத்தெடுப்பது கடினமானது.

நிவாரணம், சலுகை அரசியலுக்குப் பழக்கப்பட்ட மக்களே டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா ஆகிய இருவருக்கும் வாக்களிப்பது வழமை. ஆனால் இம்முறை அங்கஜன் அந்த வாக்குகளைப் பெறும் நோக்கில், இவர்கள் இருவரையும் விட மேலதிகமாக ஏதோ புதிய வடிவம் ஒன்றை அமைத்துள்ளார்.

அத்துடன் அங்கஜனுடைய இளமைத்துடிப்பினால் கவர்ச்சியடைந்த இளம் ஆதரவாளர்களும் இம்முறை அவருக்கு வாக்களிக்கக் கூடும். ஆகவே அவ்வாறு வாக்களிக்கும்போது ஏற்படும் வாக்குச் சிதைவுகளினால் குறித்த முன்று பேருமே இம்முறை ஆசனங்களைப் பெற முடியாமல் போகலாம்.
இதற்குச் சந்திரகுமாரும் விதிவிலக்கல்ல.

அப்படி இல்லையேல் விஜயகலா மகேஸ்வரன் மாத்திரம் தோல்வியடைந்து டக்ளஸ் அல்லது சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரும் அங்கஜனும் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகலாம்.

அவ்வாறு இருவர் தெரிவாகும் நிலை ஏற்பட்டால், அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளில் ஏற்பட்ட சரிவாகவே கருதமுடியும். ஏனெனில் தமிழரசுக் கட்சி, கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கியதால் ஏற்பட்ட விளைவாகவே அதனைக் கருத வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கைகளை (இணக்க அரசியல்) சாதகமாகப் பயன்படுத்தியே, அதாவது அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி இணைந்து செயற்பட்டிருந்தாலும், அவர்கள் உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியே அங்கஜன் பிரச்சாரம் செய்கிறார். டக்ளஸ். சந்திரகுமார் ஆகியோரும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறான பிரச்சாரங்களை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களில் குறிப்பிடக்கூடிய பலர் நம்புகின்றனர். ஆனாலும் டக்ளஸ் சந்திரகுமார் ஆகிய இருவரையும்விட, கவர்ச்சிகரமான தோற்றத்தோடு உலா வரும் அங்கஜனுக்கே அந்தப் பிரச்சாரங்களை நம்பும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென நம்பியிருக்கும் சிலரும் வாக்களிக்கும் கள நிலைமை காணப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கையினால் அதிருப்தியடைந்த ஏனைய ஆதரவாளர்கள் பலர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் வாக்களிப்பர். மேலும் சிலர் வாக்களிக்கச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வர்.

இம்முறை அனேகமான இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிக்கும் கள நிலையும் உண்டு.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 63ஆயிரம் வாக்குகளையும் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இம்முறை தமிழரசுக் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளைத் தமக்குச் சாதகமாக்க முடியுமெனப் பலமாக நம்புகின்றது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் மொத்தமாக 82 ஆசனங்களை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியும் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அவ்வாறு எதிர்பார்க்கிறது.

இதனாலேயே முதற் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகும் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலை உருவாகும். யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு வீதம் குறைவடைந்தால், தமிழரசுக் கட்சியின் நிலை மேலும் சிக்கலாகும்.

காரணம், அதிருப்தியால் வாக்களிப்பைத் தவிர்ப்போர், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்பர். இதனால் 2015ஆம் ஆண்டைப் போன்று ஐந்து ஆசனங்களை தமிழரசுக் கட்சியால் இம்முறை பெறமுடியாது

ad

ad