உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் தற்போது இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன |
-
19 ஏப்., 2023
உக்ரேனிய உணவுப் பொருட்களுக்கு மேலும் மூன்று நாடுகள் தடை!
யங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை!
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் , ஊடகங்கள் ஒருபோதும் முடக்கப்பட மாட்டாது. எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி , சிறைச்சாலை அலுவல்கள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். |
நாளை முதல் காலி முகத்திடலில் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை!
கொழும்பு - காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள் , இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக அனுமதி வழங்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் வியாழக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது |
சூடான் இராணுவத் தரப்பினரிடையே மோதல் 185 பேர் பலி!! 1800 பேர் காயம்
இடம் - துணை இராணுவக் குழுத் தலைவர் ஜெனரல் ஹம்தான் டகாலோ: வலம் -
ஐரோப்பாவுக்குள் இலங்கையர்கள் நுழையும் புதிய வழி!
ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் |
தேசிய அரசு - நிராகரித்தார் சஜித்!
மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை.எனவே போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் |
புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து!- ஒருவர் பலி, 10 பேர் காயம்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் டிப்பர் வாகனமும் தம்புள்ளைக்கு அருகில் நேருக்கு நேர் மோதின. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். |