புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 மார்., 2013


மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும்! கலைஞர் எச்சரிக்கை
 
திமுக தலைவர் கலைஞர் 15.03.2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 இலங்கையில் அண்மை காலத்தில் நடைபெற்ற

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! காங்கிரஸ் உயர்நிலைக் குழு அவசர ஆலோசனை!
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் குறித்து காங்கிரஸ் உயர்நிலைக் குழு (5.03.2013) அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

கடலூர்: உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி 
கடலூர் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 14.03.2013 காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை ராம்பிரசாஷ், பாலகிருஷ்ணன், புஷ்பராஜ் மூன்று மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
மூன்று மாணவர்களையும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதித்தனர்.

இலங்கைக்கு எதிரான போராட்டம் எதிரொலி! கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க

நேரலை அறிவிப்பு : தற்போது நடப்பதைக் காணலாம் !
மத்தியில் அழுத்தவும் 


நாடாளுமன்றத்தில் எதிரொலித்த தமிழக மாணவர்கள் போராட்டம்
அ தி மு க ,தி மு க இணைந்து முழக்கம் 
தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வலியுறுத்தினர்.
மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மார்ச் 22ம் தேதி கடைசி தேதியாக உள்ள நிலையில்


கலாட்டா கல்யாணம்!
நடிகர் விஜய் சுவர் ஏறிகுதித்து தப்பி ஓட்டம்! 
  13.03.2013 புதன்கிழமை காலை 9 மணிக்கே நடிகர் விஜய் வருவார் என்று விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்களுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. Photos
இது ஜப்பானில் நடந்த உண்மை கதை...!
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! 
மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது. 
புலம்பெயர்ந்த ஈழச்சகோதரன் எழுதிய மடல்
என் அன்பான தமிழக மாணவருக்கு வணக்கம்,

உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவின் மத்தியில் இதைப்படிப்பதற்கு உங்களுக்கு நிச்சயம் நேரம் இருக்காது, ஆனாலும் ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்,


இனி, சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது!
அடுக்கடுக்கான போர்க்குற்ற ஆதாரங்களை இலங்கை அரசின் மீது அள்ளித் தெளித்த பின்னாலும், சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான கொள்கையோ, பார்வைகளோ மாறவில்லை. சர்வதேச அழுத்தங்களால் ஏதாவது நல்லது நடக்குமா என ஈழத் தமிழ்ச் சமூகம் திணறி நிற்கும் நிலையில்,

தென்னிலங்கையில் அதிற்சி! பசில் – நாமல் மோதல்! மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பம்

சர்வதேச ரீதியில் மகிந்த அரசாங்கம் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதைப் பயன்படுத்தி பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை பணயக் கைதியாக வைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்
பசில் ராஜபக்‌ஷ ஶ்ரீல.சு.க.யின் தேசிய அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து நாமல் ராஜபக்‌ஷ தனது நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது குடும்பத் தொடர்புகள் ஊடாக

இலங்கை இன்று அமெரிக்காவிற்கு பதிலளிக்கும்

தெலுங்கு பெண்ணின் தமிழர் பாசம்
news
ஈழத் தமிழர் விவகாரம் தமிழ் நாட்டை எரிமலையாகக் குமுற வைத்துள்ள நிலையில், அங்கு தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தில் தெலுங்குப் பெண் ஒருவரும் ஈடுபட்டுள்ளார். சென்னை, அடையாறில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு ஈழத் தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தில் குதித்துள்ளார்.
 
உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் 8 மாணவர்களுடன் தனி ஒரு பெண்ணாக அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.  
வவுனியா சிறையில் புலிச்சந்தேக நபர்கள் எதிர்வரும் காலங்களில் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுப்காப்பு காரணங்களை கருத்தில் கொண்டே இவர்களை வவுனியாவில் தடுத்துவைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டதுடன்  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பிள்ளைகளை விடுவியுங்கள்
எங்களுக்கு நீங்கள் தரும் எந்த உதவிகளும் வேண்டாம். காணாமல் போன எங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தந்தால் போதும் இவ்வாறு காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு மாநகரசபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடத்திய ஊடகவியலாளர்
அமெரிக்கா - கியூபா இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர் ;இந்தியா மெளனம் இலங்கை மாயம்
இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து

இலங்கையின் போர்க்குற்றம்: "இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்"- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியிட்ட காணொளி 
கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை இராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர்.

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் மரத்தில் ஏறி போராட்டம்! 
செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலையில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அங்கு போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களை கியூபிரிவு

ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியாவை ஆதரிக்க கோருகின்ற அதே வேலையில் இலங்கையில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச தன்னிச்சையான விசாரணையை வ-யுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்களுக்கு இன்றைய தீர்வு தனி ஈழம் நாடு உருவாவது மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு தனி

போராட்டக் களத்தில் நிற்கும் என் மாணவத் தம்பிகளே..தங்கைகளே..
மாணவ சக்தி மகத்தானது என்பதைதான் வரலாறு அழுத்தமாக போதிக்கிறது. வெடித்தெழுந்த புரட்சிகளின் தொடக்கம் துளிர்த்த தோட்டங்களாக கல்லூரியின் வகுப்பறைகள்

புதுவை: உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு - புதிய அமைப்பு
வரும் திங்கட்கிழமை ( 18.3.2013 ) தமிழக கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.  தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு என்ற புதிய அமைப்பினர் இதனை அறிவித்தனர்.


எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது:
 உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களிடையே சிம்பு பேச்சு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக

1. விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும். 
2. கடன் தொல்லையால் தற்கொலை செய்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 
3. சாகுபடி செய்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், வறட்சியால் பாசனத்துக்கு வழியில்லாமல் போன நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். 
4. விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் 

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வைகோ தலைமையில் மதிமுக தொண்டர்கள் விருதுநகரில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் விருதுநகரில் இன்று காலை துவங்கியது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த போராட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தை மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா துவக்கி வைத்தார். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவடைகிறது.
 வைகோ தலைமையில் மதிமுக தொண்டர்கள் விருதுநகரில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். 
விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும்.
2. கடன் தொல்லையால் தற்கொலை செய்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 
தமிழ் நடிகனின் முன்மாதிரி  -சிம்பு மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேரடி விசயம் 
அதிர அதிர அடியெடுத்து வையுங்கள்.
அனைத்தும் வசப்படும்.
---------------------------------------
பாராட்டுக்களை கூறியே ஆகவேண்டும். மத்திய அரசு கூடுதலாகவே மிரட்டும். கண் வைக்கம். சம்பாதிக்கும் பணத்திற்க கணக்கு கேட்கிறேன் பேர்வழி என்று சண்டித்தனம் செய்யும். குறிவைத்து பிடிக்கலாம். ஏதாவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். புதியதாக சிம்புவை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களை மிரட்டலாம். அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்குள் வருமான வரி என்று நுழைந்து மிரட்டலாம். எப்படி பார்த்லும் சிம்புவிற்கு இழப்புதான். கஷ்டம்தான். அது தெரிந்திருக்கலாம். இப்படி பலதையும் யோசிக்காமல் வந்திருக்கமாட்டார். அவரின் துணிந்த இந்த ‘மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு” என்ற முடிவை பாராட்டத்தான் வேண்டும்.

இன்னும் பலர் இப்படி வந்தாலும்...
மாணவர்களின் போராட்டம் மாணவர் போராட்டமாகவே நீடிக்க வேண்டும்.