-
12 ஆக., 2013
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு ஓரளவு சுமுகநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை திருத்தியமைக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்படுவதற்கு முன்னர் அங்கு பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு
கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)