புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012


மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2.50 லட்சம்: ஜெ. அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை  இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கி, பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக 17.10.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், பிச்சையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா என்பவரின் மகன் செல்வம்;


நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளரின் வாகனத்தில் உள்ள தமிழ்  பிழையினைப் பாருங்கள்
குறித்த வாகனத்தில் மூன்று மொழிகளிலும் ஒட்டப்பட்டிருக்கும் 'ஸ்ரிக்கர்' கொழும்பில் உள்ள அமைச்சுக்களில் இருந்து ஒட்டி அனுப்பப்படுகின்றது. 
ஆனாலும் வானகம் பயன்படுத்தப்படும் இடம் தமிழ் மொழி அதிகமாக பயன்படுத்தப்படும் பிரதேசம்
அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும் இலங்கை குறித்த கொள்கை மாறாது; அமெரிக்க இராஜதந்திரி பிளேக் தெரிவிப்பு
 "ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
சீ.டி. யில் மாணவியின் நிர்வாணப் படம்
மாணவியை கையடக்க தொலைபேசி மூலம் வீடியோ படமெடுத்து சீ.டி.யில் பதிவிறக்கம் செய்து கடித உரையொன்றில் இடப்பட்டு, குறித்த மாணவியின் வீட்டிற்குள் போடப்பட்ட சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கை அகதிகளை, பிரித்தானியா எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கைக்கு நாடு கடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேNவைள இதற்கு எதிராக செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள ஹார்மொன்ஸ்வோர்த், கோல்புறூக் தடுப்பு முகாம்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


நண்பனைக் காப்பாற்றச் சென்று தனது உயிரை நீத்த “இளம் வீரன்” முரளிதரன் பிருந்தனுக்குத் தேசிய விருது

 முன்னாள் விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளராக  இருந்து மிகத் திறமையாகச் செயல்பட்ட நடராசா முரளிதரனின் மகனுக்கே இந்த விருது கிடைத்தது 
உயிரையும், தங்களது இழப்புகளையும்பொருட்படுத்தாது மற்றவர்களைக் காத்தற்பொருட்டு துணிச்சலுடன் அருஞ் செயல்களையும் , தியாகங்களையும் கனடிய மண்ணில்

துண்டித்த நிலையில் தலை: சென்னையில் பரபரப்பு
சென்னை பாரிமுனை சாலையில் உடல் இல்லாமல் துண்டித்த நிலையில் தலை மட்டும்  கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பொதுமக்களின் புகாரையடுத்து யானைகவுளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லியடியில் வைத்தியசாலை சென்ற இளம் தாயும் குழந்தையும் மாயம்
நெல்லியடி, வைத்தியசாலைக்குச் சென்ற இளம் தாயும் அவரது ஒரு வயதுப் பெண் குழந்தை யும் கடந்த திங்கட்கிழமை முதல் கா ணா மல் போயுள்ளதாக கணவரால் நெல் லி யடி பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு செய் யப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேச வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரல் என்ன?இதயச்சந்திரன்
இதற்கான பதிலைத் தேடும்போது இந்தியா,சீனா,மேற்குலகு என்கிற மூன்று முக்கிய சக்திகளின் நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 80 களின் ஆரம்பத்தில் உருவான இந்திய-அமெரிக்க ஆதிக்கப்போட்டி இற்றைவரை நீடிப்பதை அவதானிக்கலாம்.
இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் நிகழ்ச்சி நடக்கும்! - அமைப்பாளர்கள் உறுதி

நவம்பர் மூன்றாம் தேதி நடக்க இருக்கும் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களான ட்ரினி ஈவண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.
குடிவரவு மற்றும் ஏதிலி பாதுகாப்பு சட்டம் மேன்முறையீட்டு வழக்கு இன்று கனடிய உச்ச நீதிமன்றம், வழக்கில் கனடிய தமிழர் பேரவை தலையீடு
இன்று அக்றேய்றா (Agraira) என்பவர்  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால முன்னேற்பாடு அமைச்சர் அவர்கட்கு எதிரான மேன்முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு  எடுத்துக் கொண்டது.  இது ஒரு முக்கிய வழக்கு. இதில் தலையீடு செய்யும் தகுதியை உச்ச நீதிமன்றம் கனடிய தமிழர் பேரவை (கதபே-CTC) க்கு வழங்கியுள்ளது.  இந்த  வழக்கு குடிவரவு மற்றும் ஏதிலி
தென்னிந்தியத் திரைப்படத்துறையின் பலம் ஈழத்தமிழர்களின் கைகளிலும் தங்கியிருக்கின்றது: - இளையராஜா..(காணொளி)
நான் இத்தடவை கனடா வருவதற்கு இங்கு வாழும் ஈழத்தமிழ் மக்களே காரணமாக உள்ளார்கள். அவர்களை நான் என்றும் மதிக்கின்றேன். முக்கியமாக தென்னிந்தியத் திரைப்படத்துறையானது தற்காலத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக இருப்பதற்கும் அங்கு தமிழகத்தில் தயாராகும் திரைப்படங்கள் உலகளவில் வெற்றி பெறுவதற்கும் காரணமாகத் திகழ்பவர்களில் ஈழத்தமிழர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை நான் நன்கு உணர்கின்றேன்.
 

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற கருதப்படும் ஒருவரை கனேடிய குடிவரவுத்துறை அதிகாரிகள், நாடு கடத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர் கடந்த 15 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். குறித்த தமிழர், கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன், சர்வதேச தமிழர் இயக்கத்திலும் அங்கம் வகித்துள்ளார்.

நேரடியாக மோதினார்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள்! முந்துகிறார் ஒபாமா!

 செவ்வாய் இரவு இரண்டாவது முறையாக நேரடி விவாதத்தில் மோதினார்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவும் மிட் ரோம்னியியும்.
இது அத்தனை எளிதான மோதல் அல்ல. உலகிலேயே மிக முக்கியமான தேர்தலில் போட்டியிடும் இருவரின் நேரடியான, முகத்துக்கு முகம் பார்த்த மோதல். ஒன்றரை மணி நேரம் நடந்தது,
மண்டபம் முகாமில் 65 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் 32 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்ட 65 தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

ad

ad