-
23 பிப்., 2023
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் ; இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட்டு
ஐபிசி பாஸ்கரனுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!
அனைத்து மருத்துவமனைகளிலும் தொழிற்சங்கப் போராட்டம்
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது |
முஸ்லிம் காங்கிரசுடன் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடவில்லை!
முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லையெனவும் சிலர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள் |
15 வருட சிறைவாழ்வில் இருந்து விடுதலையானார் தமிழ் அரசியல் கைதி!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் |
அறிவிக்காத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது? - கைவிரித்த ஜனாதிபதி
இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் |
ஜெட் விங் விடுதியில் ரணிலைச் சந்தித்த விக்கி - பேசியது என்ன?
அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரது குடும்பங்களின் கோரிக்கை மற்றும் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |