புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2013

ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ஜோகனர்ஸ்பர்க்கில் துவங்கிய முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்து சுருண்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில், ஸ்டெயின் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9057 பேர் 3 பாடங்களில் “ஏ” சித்தி!
2012ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128, 809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 


அமெரிக்காவின் பிரேரணை சாதாரண விடயமல்ல! ஐநா பொருளாதார தடை விதிக்கும் சாத்தியம்! எச்சரிக்கிறார் விதாரண
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாக கருதமுடியாது. என்று அமைச்சரும்

பா .உ.ஸ்ரீதரன் அவர்களின் அலுவலக வழக்கு தொடர்பாக ஆஜராகி வாதடவிருக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த  கொழும்பின் பிரபல  உயர் சட்டத்தரணி கே.வீ.தவராசா  அவர்கள் சொந்தக் குரலில் தந்துள்ள பேட்டி 

பா.உ.சிறிதரன் அலுவலக சோதனையும் கைதும் தொடர்பில் வழக்கறிஞர் தவராஜா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பேட்டி
விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக. நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து

ad

ad