புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2021

இத்தாலியில் 2 பிள்ளைகளை கொலை செய்த இலங்கை பெண் சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com
இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவர் தனது குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்

செயலணியில் 3 தமிழர்கள் - ஜனாதிபதி இணக்கம்!

www.pungudutivuswiss.com

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்

மார்க்கம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! [Thursday 2021-10-28 16:00]

www.pungudutivuswiss.com
மார்க்கம் 407 நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பட்டன்வில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின்னர்  ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து, விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மார்க்கம் 407 நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பட்டன்வில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து, விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாத்தில்

www.pungudutivuswiss.com
20 உலகக்கோப்பை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

28 அக்., 2021

WelcomeWelcome ஜனாதிபதி கோட்டா, இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

www.pungudutivuswiss.com


ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

27 அக்., 2021

கனடாவில் 39 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

www.pungudutivuswiss.com


பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.  புதிய அமைச்சரவை பட்டியலில் பிரதமர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில்  பல புதிய முகங்களும் இடம்பெற்றுள்ள  புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு-

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை பட்டியலில் பிரதமர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பல புதிய முகங்களும் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு

20 உலக கோப்பை: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

www.pungudutivuswiss.com
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

நிருபமாவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com


முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பண்டோரா ஆவண சர்ச்சையில் அவரும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் சிக்கியுள்ளனர்.தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே நிருபமா ராஜபக்சவுக்கும் ஆணைக்குழு விசாரணைக்கான அழைப்பை விடுத்திருப்பதாக தெரியவருகிறது. விசாரணைத் திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பண்டோரா ஆவண சர்ச்சையில் அவரும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் சிக்கியுள்ளனர்.தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே நிருபமா ராஜபக்சவுக்கும் ஆணைக்குழு விசாரணைக்கான அழைப்பை விடுத்திருப்பதாக தெரியவருகிறது. விசாரணைத் திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை

கொடும்பாவி எரித்து சுமந்திரனுக்கு எதிர்ப்பு! Top News [Tuesday 2021-10-26 17:00]

www.pungudutivuswiss.com

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ்- குருநகர் மீனவர்கள் இன்று கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்ததுடன் கொடும்பாவியையும்   எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ்- குருநகர் மீனவர்கள் இன்று கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்ததுடன் கொடும்பாவியையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதிய அமைச்சரவையை இன்று அறிவிக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ

www.pungudutivuswiss.com


பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் தொடர்பாக இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் தொடர்பாக இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

25 அக்., 2021

"நீதிபதியின் கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியது" - விஜய் வேதனை!

www.pungudutivuswiss.com

இறக்குமதி கார் விவகாரத்தில் தனிநீதிபதியின் கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது

நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

www.pungudutivuswiss.com



ஆரியகுளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆரியகுளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்

விசேட விமானத்தில் வந்திறங்கிய அதானி! - ஜனாதிபதியை சந்திக்கிறார். [Monday 2021-10-25 18:00]

www.pungudutivuswiss.com



தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ‘அதானி’ குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, இலங்கை வந்துள்ளார்.
இந்தியாவில் இருந்து நேற்று இரவு விசேட விமானம் மூலம் இவர், இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் அதானி, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ‘அதானி’ குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, இலங்கை வந்துள்ளார். இந்தியாவில் இருந்து நேற்று இரவு விசேட விமானம் மூலம் இவர், இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் அதானி, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளார்

நடு கடலில் தத்தளித்த 39 அகதிகள் மீட்பு

www.pungudutivuswiss.com
நடுக்கடலில் தத்தளித்த 39 அகதிகளை பிரெஞ்சு கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

டி-20 உலகக்கோப்பை: வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

www.pungudutivuswiss.com
வங்காளதேச அணிக்கு எதிரான ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை; பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

www.pungudutivuswiss.com
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது

23 அக்., 2021

புளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்!

www.pungudutivuswiss.com

 


புலிகள் என கூட்டமைப்பு எம்.பிக்களை நோக்கி கூச்சல்

www.pungudutivuswiss.com


வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு துறைசார் மேற்பார்வை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை ‘புலிகள், பயங்கரவாதிகள்” என ஆளுந்தரப்பு உறுப்பினர்களினால்  விமர்சிக்கப்பட்டதை அடுத்து,  தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள்   கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு துறைசார் மேற்பார்வை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை ‘புலிகள், பயங்கரவாதிகள்” என ஆளுந்தரப்பு உறுப்பினர்களினால் விமர்சிக்கப்பட்டதை அடுத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இலங்கை–கனடா நட்புறவு சங்கத் தலைவராக சுரேன் - பொருளாளராக சிறிதரன்!

www.pungudutivuswiss.com

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்

ஜனநாயகம், மனித உரிமைகளுக்கு குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லை

www.pungudutivuswiss.com


ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பலமான சமூகம் என்பன தொடர்பாகத் தாம் குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லையென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜுலி ச்சுங்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி செயலாளராக இருந்த அவர், இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பலமான சமூகம் என்பன தொடர்பாகத் தாம் குரல் எழுப்ப பின்னிற்க போவதில்லையென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜுலி ச்சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவி செயலாளராக இருந்த அவர், இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

22 அக்., 2021

8 அரசியல் கைதிகளையும் வடக்கு கிழக்கு சிறைகளுக்கு மாற்ற உத்தரவு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

20 அக்., 2021

புலனாய்வாளர்களைக் கொண்டு ஆசிரியர்களை அச்சுறுத்தும் அரசு!

www.pungudutivuswiss.com


அதிபர்கள், ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தைப் புலனாய்வாளர்களைக் கொண்டு அரசு அச்சுறுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த மோசமான செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்  என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதிபர்கள், ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தைப் புலனாய்வாளர்களைக் கொண்டு அரசு அச்சுறுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த மோசமான செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

முதலமைச்சர் வேட்பாளராக சமிந்திராணி கிரியெல்ல?

www.pungudutivuswiss.com


மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்திராணி கிரியெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்திராணி கிரியெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

19 அக்., 2021

16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடக்கம்

www.pungudutivuswiss.com
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

18 அக்., 2021

நிசாந்தனை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி!

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிசாந்தனை விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைத்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணை ஒன்றிற்கான வாக்குமூலத்தை வழங்க கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக சுவீகரன் நிசாந்தன் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிசாந்தனை விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைத்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணை ஒன்றிற்கான வாக்குமூலத்தை வழங்க கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக சுவீகரன் நிசாந்தன் கூறியுள்ளார்.

அறிமுகமாகிறது நடத்துநர் இல்லாத பேருந்துகள்!

www.pungudutivuswiss.com


இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்து நடத்துனர்களுக்கு பதிலாக டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது நடத்துனர்களை நியமிக்க பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்து நடத்துனர்களுக்கு பதிலாக டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது நடத்துனர்களை நியமிக்க பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்

வடக்கில் புத்திசாலிகள் முந்தப் போகிறார்கள்!- உசுப்பேற்றுகிறார் தெற்கு ஆளுநர்.

www.pungudutivuswiss.com


தெற்கில் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது, வடக்கிலுள்ள ஆசிரியர்கள்
அங்குள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றமையால் எதிர்காலத்தில் வடக்கில் புத்திசாலிகள்
அதிகரிக்கும் அதேவேளை, தெற்கில் புத்திசாலிகளுக்கு ஏற்படும் பற்றாக்குறைக்கு ஆசிரியர்களே பொறுப்பு கூற வேண்டும் என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

தெற்கில் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது, வடக்கிலுள்ள ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றமையால் எதிர்காலத்தில் வடக்கில் புத்திசாலிகள் அதிகரிக்கும் அதேவேளை, தெற்கில் புத்திசாலிகளுக்கு ஏற்படும் பற்றாக்குறைக்கு ஆசிரியர்களே பொறுப்பு கூற வேண்டும் என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்

17 அக்., 2021

சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை நேற்று அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி

www.pungudutivuswiss.com
இலங்கை மத்திய வங்கி கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன்(Keerthi Tennakoon)

தமிழரசு படகு பயணம் முல்லை-பருத்தித்துறை முடிந்தது!

www.pungudutivuswiss.com


மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் தமிழரசுக்கட்சி  ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தில் முடிவுற்றது

 

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த  கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது.

 

இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டதிருத்ததின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது. 

 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறீதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

16 அக்., 2021

4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை

www.pungudutivuswiss.com
ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னைஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

15 அக்., 2021

இலங்கை விவகாரத்தை பொதுச் சபையில் விபரித்தார் பச்லெட்! [Friday 2021-10-15 08:00]

www.pungudutivuswiss.com



இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்களிலும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறல் சார்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்குமான நடவடிக்கைகள் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்களிலும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறல் சார்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்குமான நடவடிக்கைகள் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்

13 அக்., 2021

யாழ். வைத்தியசாலையில் கனேடிய தூதுவர்

www.pungudutivuswiss.com


இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன்  நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று, தற்போதைய வைத்திய சேவைகள் மற்றும் கோவிட் தொற்று நிலைமைகள் பற்றி வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார். அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியக கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டுள்ளார்.

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று, தற்போதைய வைத்திய சேவைகள் மற்றும் கோவிட் தொற்று நிலைமைகள் பற்றி வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார். அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியக கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டுள்ளார்

புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் யார்?

www.pungudutivuswiss.com


போர் முடிந்த பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை  காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

போர் முடிந்த பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்

12 அக்., 2021

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகள், தேமுதிக, காங்கிரஸ் வெற்றி நிலவரம்

www.pungudutivuswiss.com
56 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: திமுக, அதிமுக வெற்றி நிலவரம்பட மூலாதாரம்,

இந்திய துணைத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று  பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது

வடக்கு ஆளுநர் யார்? - வெடித்தது குழப்பம்.

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாண ஆளுநர் பதவி தொடர்பாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.  வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். எனினும், கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வட மாகாண ஆளுநரான பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் பதவி தொடர்பாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். எனினும், கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வட மாகாண ஆளுநரான பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டிருந்தார்

11 அக்., 2021

பலாலிக்கான விமான சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது

வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப் பிரமாணம்! Top News

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

காகிதங்களின் இறக்குமதிக்கும் தடை?- பத்திரிகைகள் முடங்கும் ஆபத்து.

www.pungudutivuswiss.com


பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு தொழிற்துறைக்கு அவசியமான காகிதங்களை இறக்குமதி செய்வதற்கு  கடும் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காகித இறக்குமதியை அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியலில் சேர்த்து இவ்வாறு கடும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் நிதி அமைச்சு கலந்துரையாடி வருவதாக நம்பகரமாக அறிய முடிகிறது.

பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு தொழிற்துறைக்கு அவசியமான காகிதங்களை இறக்குமதி செய்வதற்கு கடும் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காகித இறக்குமதியை அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியலில் சேர்த்து இவ்வாறு கடும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் நிதி அமைச்சு கலந்துரையாடி வருவதாக நம்பகரமாக அறிய முடிகிறது.

விரைவில் புதிய அரசியலமைப்பு , புதிய தேர்தல் முறைமை! [Monday 2021-10-11 07:00]

www.pungudutivuswiss.com



நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

லண்டனில் உள்ள நிரூபமாவை இன்டர் போல் மூலம் அழைத்து வர நடவடிக்கை! [Monday 2021-10-11 07:00]

www.pungudutivuswiss.com



பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும்,   லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 அக்., 2021

அவரது சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் தப்பித்து ஓடிய நிலையில்கேபி மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு

www.pungudutivuswiss.com
கோத்தபாயவின் பாதுகாப்பிலுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள்

லண்டனில் £2,000 பவுண்டுகளால் அதிகரித்துள்ள GAS BILL: மின்சார BILL : எங்கே கொண்டு போய் விடப் போகிறது என்று தெரியவில்லை ?

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் 1ம் திகதி அக்டோபர் மாதத்தோடு, வீட்டில் பாவிக்கும் கேஸ் மற்றும் மின்சாரத்தின் விலை சுமார் 20% விகிதத்தால்

இணுவில் ஆயுதமுனை கொள்ளை - மேலும் மூவர் கைது

www.pungudutivuswiss.com



இணுவில்  பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தி 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தி 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

பெலாரஸ் எல்லையில் இலங்கையரின் சடலம்!

www.pungudutivuswiss.com

பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில்  கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது

அடுத்த வருட தொடக்கத்தில் தேர்தலை நடத்த இணக்கம்!

www.pungudutivuswiss.com



மாகாணசபைத் தேர்தலை  விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம்- கனேடிய தூதுவரிடம் பீரிஸ் தீவிர கரிசனை!

www.pungudutivuswiss.com


ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார்

திருக்குமரன் நடேசன் மூலம் மகிந்தவுக்கு பணத்தை கொடுத்த சீன நிறுவனங்கள்!

www.pungudutivuswiss.com


சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

7 அக்., 2021

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு -வெளியானது அறிவிப்பு

www.pungudutivuswiss.com
க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

நிருபமா எங்களுடன் இல்லை

www.pungudutivuswiss.com


எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறை, அரசியல் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறை, அரசியல் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் நிரூபமா ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ நிரூபமா ராஜபக்ச எனது சகோதரியாக உள்ளார். எனினும் அரசியல் ரீதியாக அவர் எம்முடன் இல்லை. அவர் கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் தலைவர் சிறிசேனவுடன் இருந்தார்.

அதனால் உறவு வேறு அரசியல் வேறு. அதே நேரத்தில் அவர் நடேசனை மணந்துள்ளார். திருமணத்தால் கிடைப்பவை தொடர்பில் நம்மால் என்ன செய்ய முடியும்?

1990 - 1998 வரை இவர்கள் பணம் சம்பாதித்து வியாபாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யார் இருந்தார்கள் என்பதை ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிக்கா ஆகியோரிடம் கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

6 அக்., 2021

9 மாவட்டங்களில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது.

பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தமைக்கு ஒரே காரணம் இது தான்!

www.pungudutivuswiss.com

விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார்

யாழ். நகரில் அதிக மழை வீழ்ச்சி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்

திட்டமிட்டு பழிவாங்கிய பிரான்ஸ்: பேராபத்தில் பிரித்தானியா

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவுக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை ஃபிரான்ஸ் அரசு தடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்க ஆதாரங்களின்படி, ஐரோப்பிய நாடான ஹொலாந்தில் உள்ள ஹாலிக்ஸ் தளத்திலிருந்து பிரித்தானியாவுக்கு வந்து சேரவேண்டுய தடுப்பூசிகளை பிரான்ஸ் தடுத்தது.

பிரித்தானியாவுக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை ஃபிரான்ஸ் அரசு தடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்க ஆதாரங்களின்படி, ஐரோப்பிய நாடான ஹொலாந்தில் உள்ள ஹாலிக்ஸ் தளத்திலிருந்து பிரித்தானியாவுக்கு வந்து சேரவேண்டுய தடுப்பூசிகளை பிரான்ஸ் தடுத்தது

ஒன்ராறியோவில் பலரை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய துயர சம்பவம்!

www.pungudutivuswiss.com

ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் லைல் தெரு மற்றும் கிங் தெரு பகுதியில் இருந்து 911 இலக்கத்தை தொடர்பு கொண்டு குழந்தை தவறி விழுந்தது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் லைல் தெரு மற்றும் கிங் தெரு பகுதியில் இருந்து 911 இலக்கத்தை தொடர்பு கொண்டு குழந்தை தவறி விழுந்தது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்

பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட எரிபொருள் விலை!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் பெட்ரோலின் தற்போதைய விலை லிட்டருக்கு 1.36 பவுண்டை எட்டியுள்ளதால், இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச விலை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதால், அங்கு லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பெட்ரோலின் தற்போதைய விலை லிட்டருக்கு 1.36 பவுண்டை எட்டியுள்ளதால், இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச விலை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதால், அங்கு லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

5 அக்., 2021

பிரச்சினைகளுக்கு உள்நாட்டுக்குள் தீர்வு!

www.pungudutivuswiss.com


வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த   ஜனநாயக நாடாக விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக முறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த ஜனநாயக நாடாக விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக முறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்

டில்லி செல்கிறது கூட்டமைப்பு

www.pungudutivuswiss.com



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம் என்று இந்திய வெளிவிவகார செயலாளர்  ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில்  நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம் என்று இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்

13 அமுலாக்கம், மாகாண சபை தேர்தலை வலியுறுத்தினார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

www.pungudutivuswiss.com


13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக  முழுமையாக அதிகார பகிர்வை நோக்கி செல்வதும், தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற இதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர்  ஹர்ச வர்தன் ஸ்ரிங்க்லா தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முழுமையாக அதிகார பகிர்வை நோக்கி செல்வதும், தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற இதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ச வர்தன் ஸ்ரிங்க்லா தெரிவித்துள்ளார்

தடையை மீறி விவசாயிகளை சந்திக்க சென்ற பிரியங்கா கைது!

www.pungudutivuswiss.com

உத்தரபிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேசவ்பிரசாத் மவுரியா நேற்று லக்கீம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர் பூர் என்ற கிராமத்தில் நடப்பதாக இருந்த விழாவில் கலந்து கொள்ள இருந்தார். அந்த விழாவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவும் பங்கேற்க இருந்தார்.

உத்தரபிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேசவ்பிரசாத் மவுரியா நேற்று லக்கீம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர் பூர் என்ற கிராமத்தில் நடப்பதாக இருந்த விழாவில் கலந்து கொள்ள இருந்தார். அந்த விழாவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவும்

ad

ad