புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

Australia 350/6 (50 ov)
India 351/4 (49.3 ov)
அவசர செய்தி ..காவல் துறையின் அஜாக்கிரதையால் ஒரு மாணவனின் உயிர் போக போகிறது ... 
திருச்சி அருகேயுள்ள கிராமத்த சேர்ந்த மணி என்ற ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவர் சென்னையில் நண்பர்களுடன் தங்கி தரமணியில் உள்ள அரசாங்க பாலிடெக்னிகில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அவர் வீடு வீடாக பால் பாக்கெட் கொடுக்கும் தொழிலை பகுதி நேரமாக செய்து வந்தார் அதற்கு சம்பளமாக கிடைக்கும் 4000 ரூபாயில் தனது படிப்பு செலவுகளை கவனித்து கொண்டு ஊரில் இரண்டு தங்கைகளையும் படிக்க வைத்து வருகிறார் ..அவர் நேற்று அதிகாலை பால் பாக்கெட்களை எடுத்து செல்லும்போது உரக்க கலக்கத்தில் அதி வேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியதில் ஒரு கால் துண்டாகி விட்டது உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிர் காக்க நண்பர்களின் உதவியால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது முதல் தவணையாக 50 ஆயிரம் செலுத்தபட்டும் இன்று மேலும் இரண்டு லட்சம் கட்டுங்கள் இல்லையேல் சிகிச்சையை நிறுத்துவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறி விட்டது அரசாங்க மருத்துவமனைற்கு கூட்டி கொண்டு செல்கிறோம் என கூறியும் மருத்துவமனை நிர்வாகம் பணம் கட்டிவிட்டு அழைத்து செல்லுங்கள் என கூறி வருகின்றனர் ..அவரது பெற்றோர்களோ கல் உடைக்கும் கூலி தொழிலாளிகள் அவர்களால் அவ்வளவு பணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர் ..மேற் சிகிச்சையும் நிறுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் காவல் துறையும் எந்த உதவியும் செய்யவில்லை ..தமிழக முதல்வரால் மட்டுமே இந்த ஏழை மாணவனின் உயிர் காக்க இயலும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த பதிவு ..என்னால் இயன்ற அளவு நிதி [20000] உதவி அளித்து விட்டேன் ..யாராவது முதல்வரின் கவனத்திற்கு செய்தியை எடுத்து சென்று ஏழை மாணவனின் உயிர் காக்க உதவுங்கள் தொடர்பு எண்-7401137366
சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் மெஸ்சி,ரொனால்டோ ,நெய்மார் 
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் நட்சத்திர வீரர்கள் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுல்), நெய்மார் (பிரேசில்) உள்பட 23 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். விருது விவரம் ஜனவரி 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
6-வது ஒரு நாள் கிரிக்கெட்: பெய்லி- வாட்சன் சதத்தால் ஆஸி. 350 ரன் குவிப்பு
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 6-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வின்பின் நான்காண்டுகள் - புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைகிறார்களா?/தமிழ் கார்டியன் 

சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோருவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதே தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முக்கிய திட்டமாக காணப்படுகிறது.
பொதுநலவாய மாநாடு ; தீவிர ஆலோசனையில் மன்மோகன் 
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்  தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சுயாட்சி மூல­மான தீர்­வுக்கு இந்­தியா உதவ வேண்டும்

இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், அதேபோன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் இலங்கையினால் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும்.
இளவரசர் சார்ள்ஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு லண்டனில் வரவேற்பு நிகழ்வு
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோரின் இலங்கை மற்றும் இந்திய விஜயத்தை முன்னிட்டு அவர்களுக்கு லண்டனில் வாழ்த்து வரவேற்பு நிகழ்வொன்று ஏற்படு செய்யப்பட்டிருந்தது.
கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்கக் கோரி சேலத்தில் தீப்பந்தத் தாக்குதல்.B B C 
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி இன்று புதன் அதிகாலை சேலத்தில் வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் சிலர் தீப்பந்தத்தை வீசி எறிந்தனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு தென் கொரியா உதவும்: விக்னேஸ்வரனிடம் தென் கொரியத் தூதுவர் உறுதி
இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
வலி. வடக்கில் வீடுகள் இடிக்கப்பட்டமை உள்நாட்டு பிரச்சினை! முதலமைச்சருடனான சந்திப்பின் பின் அமெரிக்க தூதுவர்.
வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.

பாலியல் புகார் கொடுத்ததால் ஆசிரியை உயிரோடு எரிப்பு:குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என முதல்வர் உறுதி
ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டம் காசிபூர் அரசு ஆரம்ப பள்ளியில் பணிபுரியும் 27 வயது ஆசிரியையிடம் கல்வித்துறை ஆய்வாளர் தந்தசேனா தவறாக நடந்துள்ளார். 
ஒரே மேடையில் மன்மோகன் சிங், நரேந்திர மோடி பங்கேற்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் படேல் அருங்காட்சியம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திர மோடியும் பங்கேற்றனர். 
இந்த விழாவில் பேசிய மோடி, படேலை பற்றியும் அவரது கொள்கைகளை
ஜாமீனில் வெளியே வந்த ரவுடி கழுத்தறுத்துக் கொலை: முதல்வர் வீட்டின் அருகே கொலை நடந்ததால் பரபரப்பு
புதுச்சேரியில் முதல் அமைச்சர் ரங்கசாமியின் வீட்டின் அருகில் ரவுடி ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: தொப்புள் கொடியுடன் போட்டு விட்டுச் சென்றது யார்?
அருப்புக்கோட்டை சாலியர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு யாரோ இந்த குழந்தையை
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நவ.21க்கு ஒத்திவைப்பு: பெங்களூரு சிறப்பு கோர்ட்
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 30.10.2013 புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று சிறப்பு
10வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்கிறார்
 


கடந்த இரண்டு ஆண்டுகளில் 10வது முறையாக தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார் முதல் அமைச்சர் ஜெயலலிதா,

ஜெ. வழக்கிற்கு புதிய நீதிபதி!
ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி முடிகவுடர் மாற்றப்பட்டார். புதிய நீதிபதியாக மைக்கேல் டிக்குன்னா நியமிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 கோத்தாவின் கருத்து நகைப்பிற்குரியது; சுரேஷ் பிரேமச்சந்திரன் 
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும்
பந்து தலையில் தாக்கியதால் தென்னாபிரிக்க உள்ளூர் கிரிக்கெட் வீரர் டெரின் ரண்டால் களத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஜோகன்ஸ்பேர்க் நகரில்ல நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 
யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களில் ஐவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பேரெழுச்சியுடன் திரண்ட கனடியத் தமிழர்கள்: வரலாறாக படையெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

கனடா அரசு கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் குளிரையும் பொருட்படுத்தாது இன்று பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர்.


தம்புள்ள பத்திரகாளியம்மன் கோயில் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது! மக்கள் கவலைBBC
மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெற முடியாது: ராஜபக்ச திட்டவட்டம்
இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தி வருகின்றனர்.

ad

ad