புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2014

போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களே எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்றனர்!- விக்ரமபாகு
மன்னார், திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்டு வருகின்ற மனிதப் புதைகுழி விவகாரம்  குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

மன்னார், திருக்கேதீஸ்வரம்  பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும்  மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீது கொடுந்தாக்குதல் : நெடுமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 20.12. 2013 அன்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறையினர் ஈழ ஆதரவுத் தமிழின
மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர், மு.க. அழகிரி 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி :-

தி.மு.க. வும், தே.மு.தி.க. வும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்துள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, அந்தக் கூட்டணி உருவாகி அதன் காரணமாக
சுவிசில் வாகன ஓட்டுனர்களுக்கென  புதிய சட்ட விதிகள் இரண்டு இந்த வருடம் முதல் அமுலாகியுள்ளன 
இதன்படி பின்வரும்சட்டவிதிகள் புதிதாக சேர்ந்துள்ளன  முதலாவது -வாகனங்களில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் சாதாரண  ஒளிவிளக்குகள் கட்டாயம் எரிய விட  வேண்டும் .மற்றையது - வாகனம் ஓடும்போது மது அருந்தி இருக்க கூடாது.அதாவது இதுவரை 0.8 வேதம் வரை  மதுவின் தாக்கம் உடம்பில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி இனி முற்றிலுமாக  அந்த வீதம்  இன்றி இருக்க வேண்டும் என  விதி தொடக்கி இருக்கிறது .இந்த இரண்டு சட்டங்களும் மிகவுமபத்தானவை ஆகும் .சாரதிகள்  கவனித்து நடக்க வேண்டும் 1.எப்போதும் வாகனங்களில் ஒளிவிளக்குகள் எரிய வேண்டும் 2.ஓட்டிகள் முற்றிலும் மது அருந்தாமல் இருக்க வேண்டும் 

ad

ad