-
19 டிச., 2023
கப்பல்கள் மீதான ஹுதிகளின் தாக்குதல்களும் ஹுதிகளைத் தாக்கத் தயாராகும் அமெரிக்காவும்
யாழ். குடாநாட்டில் இரவிரவாக கொட்டித் தீர்த்த மழை
வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. இரவிரவாக மழை கொட்டிக் கொண்டிருந்தது. இன்று காலை 6.30 தொடக்கம் 7.30 வரை மிக கனமழை பெய்துள்ளது. இதனால் வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
கடும் தாக்குதலால் அதிரும் காசா: 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல்! [Monday 2023-12-18 16:00]
இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருவதுடன் , ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரம் பேரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச் சென்றுள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், இஸ்ரேல் தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை |
கனடாவில் டெஸ்லா கார்களில் ஏற்பட்டுள்ள கோளாறு
கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் ஒன்றான டெஸ்லா கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 193000 டெஸ்லா ரக கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது |
தரமற்ற மருந்து இறக்குமதி - சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார் |
நாடு முழுவதும் ஒரே நாளில் தேடுதல் - 2121 பேர் கைது
நாட்டில் நேற்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 2020 ஆண்களும், 101 பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் |
தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்! [Monday 2023-12-18 17:00]
இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் |