முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் |
-
19 மார்., 2024
விஸ்வமடுவில் குழந்தையைக் கொன்றதாக தாய் கைது!
தமிழ் எம்.பிக்களின் போராட்டம் - நாடாளுமன்றில் பதற்றம்!
சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று சபையில் போராட்டம் நடத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. |
உள்ளூராட்சி தேர்தலுக்கு பிறகே ஜனாதிபதி தேர்தல்!- என்கிறார் மஹிந்த
ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். |
பூவரசங்குளத்தில் பேருந்து சில்லில் சிக்கி முதியவர் மரணம்
வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார் |
வெடுக்குநாறிமலைக்கு 2 அதிகாரிகளை அனுப்பியது மனித உரிமைகள் ஆணைக்குழு
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை மறுநாள் கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது |
முதலில் ஜனாதிபதி தேர்தல்- தயாராகுமாறு ரணில் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது |