புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2011

நான் ஆசைப்பட்டது நடந்துவிட்டது :
நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.   இதில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறிவந்தேன்.


ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக என் தந்தை அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார். 
வாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்ததும்,  மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.   அவர்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் என பேட்டி அளித்தேன்.

என் ஆசையும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதான்.   நான் ஆசைப்பட்டது நடந்துவிட்டது’’ என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தோல்வி
 
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தோல்வி
சென்னை, மே. 13-
அ.தி.மு.க.வில் இருந்து பலர் கடந்த ஆண்டுகளில் விலகி தி.மு.க.வில் சேர்ந்தனர். அப்படி கட்சி மாறி வந்தவர்களில் கருப்பசாமி பாண்டியன், முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் போட்டியிட தி.மு.க.வில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் முத்துசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் சந்திரகுமார் போட்டியிட்டார். 2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் சந்திரகுமார் 6677 வாக்குகள் பெற்றார். முத்துசாமி 3698 ஓட்டுக்களுடன் தோல்வி முகத்தில் இருந்தார்.
அருப்புக்கோட்டை தொகுதியில் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் வைகை செல்வனிடம் தோல்வி அடையும் நிலையில் உள்ளார். அது போல தென்காசி தொகுதியில் கருப்பசாமி பாண்டியன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரிடம் தோல்வியை தழுவுகிறார்.
திருச்செந்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தார். தி.மு.க.வில் சேர்ந்த அவர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால் தற்போது அவர் தோல்வி முகத்தில் உள்ளார். அ.தி. மு.க. வேட்பாளர் மனோகரிடம் அவர் தோல்வியை தழுவுகிறார்.
வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த சேகர்பாபு சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. வில் சேர்ந்தார். அவர் மீண்டும் ராதாகிருஷ்ணன் தொகுதியில் தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து வெற்றிவேலை அ.தி.மு.க. நிறுத்தியது. இதனால் சென்னை முழுக்க ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி தேர்தல் முடிவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் முன்னிலை பெற்றார்.
சேகர்பாபுக்கு குறைந்த வாக்குகளே கிடைத்தன. இதனால் அவர் தோல்வியை தழுவி உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுக்கு மக்களிடம் தனி செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையில் அவரும் தோல்வியை தழுவினார்.

விளம்பரம்

ad

ad