விளம்பரம்

ad

21 செப்., 2012


LIVE SCORE
England 196/5 (20/20 ov)
Afghanistan 75/9 (16.3/20 ov)

New Zealand 191/3 (20/20 ov)
Bangladesh 132/8 (20.0/20 ov)
New Zealand won by 59 runs
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் 4வது டி20 உலகக் கிண்ணத் தொடரின் 5வது லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இன்று மோதின.

உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்;
ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாம்; கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக்கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும்,

தமிழகத்திற்கு வந்த சிங்களர்கள் - தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
19.09.2012 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தின் பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை எதிர்த்து யுத்தம் விரும்பா புத்தன் பூமியில் ரத்தம் குடித்த

திரும்பிப் போ திரும்பிப் போ சிங்கள இனவெறியன் இராஜபக்சேவே திரும்பிப் போ :
திருமாவளவன் ஆர்ப்பாட்டம் 
மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைக் கண்டித்தும், 

செய்தி 0 8மஹிந்த ராஜபக்‌ஷ மத்திய பிரதேச விழாவில் பாங்கேற்பு! வைகோ கைது! சாகர் சிறையில் அடைப்பு!
மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப்பிரதேச எல்லையில் தமது கட்சியினருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட அக்கட்சித் தொண்டர்கள் 750 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்கா 10 விக்கட்டுகளினால் வெற்றி - மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே
டுவென்டி- 20 உலக கிண்ண போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள தென் ஆப்ரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

    சுவிட்சர்லாந்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா 

                   '''பண் உடைந்து போன  கடலாள் '''

எங்கள் மண்ணின் படைப்பாளி பாலகணேசனின் கவிதை ஓலை 
உங்கள்  உள்ளத்து    உணர்வை      உரக்க   கொடுக்க   ஓர்   வேளை  

சுவிஸ் பீல் நகரத்தில் எதிர்வரும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு


   இடம். Buendenweg 21,2503 Biel ,Switzerland .  T.P. No 079 398 28 19 ,  032 365 32 40


                                                      அன்போடு வரவேற்கும் பீல் மதி 


ராஜபக்சே வருகையை எதிர்த்து ரயில் மறியல் (படங்கள்)
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் தமிழ்நாதன், பெரியரசு ஆகியோர் தலைமையில் திருச்சி ரயில்வே ஜென்ஷனில் உள்ள 3வது பிளாட் பாரத்தில் ரயில் மறிய-ல் ஈடுபட்டனர். ரயில் மறிய-ல் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கமலா ரணதுங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமீர் அலிக்கு தேசியப் பட்டியலில் இடம்கொடுத்து பிரதியமைச்சர் பதவியொன்றினை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த ராஜினாமா

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் சற்றுமுன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு ஐ.நா. தலைமையக காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக மறுபடி குடியேற முடியாமை காரணமாக வலிகாமம் மற்றும் சாம்பூர் பகுதிகளின் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள்,


பிரிட்டனில் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் மீது கட்டுநாயக்கவில் விசாரணை
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரணாப், மன்மோகனுடன் மகிந்த சந்திப்பு!- மன்மோகன் தனது இல்லத்தில் இரவு விருந்தளித்தார்
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்தார்.
.மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை நீதிமன்றத்தின் மேல் ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்
லங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய போத்தலுடன்  ஏறி நின்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்

கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு விடுக்கப்படும் சவால்: துரைரெட்ணம்
கிழக்கு மாகாண சபையில் புதிதாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்

மத்திய பிரதேச எல்லையில் வைகோ இரவிரவாக தரையில் அமர்ந்து போராட்டம்! சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்கிறது!
[ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 06:18.03 AM GMT ]
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்தச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய பிரதேச எல்லையில் தொண்டர்களுடன் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று இரவிலிருந்து தரையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார்.
மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ள ராஜபக்ச நேற்று டெல்லி வந்துவிட்டார்.
இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.
இதற்காக, அவர் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 17-ம் தேதி சென்னையில் இருந்து 21 பஸ்களில் சாஞ்சி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று வைகோவும், அவருடன் சென்ற 750 தொண்டர்களும் மத்திய பிரதேச எல்லையான பட்சிரோலி நகரை சென்றடைந்தனர்.
ஆனால் பாதுகாப்பு கருதி அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 க்கும் அதிகமான பொலிஸார் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள்.
நாங்கள் இந்திய குடிமக்களா இல்லையா? எங்களை தடுத்து நிறுத்திவிட்டு கொலைகாரன் ராஜபக்சவை வரவேற்கிறீர்களா..? என்று கோசத்துடன் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ, நடுரோட்டில் அமர்ந்தபடியே தனது போராட்டத்தை இரவு முழுவதும் தொடர்ந்தார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வைகோவின் போராட்டத்துக்கு பட்சிரோலி பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாம் இணைப்பு
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடுரோட்டில் தூங்கி, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராடும் வைகோ!
ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநில எல்லையில் நடுரோட்டில் அமர்ந்து வைகோ போராட்டம் மேற்கொண்டுள்ளார். விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, தற்போது சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய தொடக்க விழாவில் பங்கேற்க டில்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.
இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கூறினர். மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தொடர்பு கொண்டு, போராட்ட முடிவைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கோரிக்கை வைத்தார்.