சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை பொறுப்புக்கூற செய்வதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்த வேண்டும் என கோரி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கனுக்கு அனுப்பிவைத்துள்ளனர் |
-
23 செப்., 2023
அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்! - காங்கிரஸ் உறுப்பினர்கள் பிளிங்கனுக்கு கடிதம்.
20 நாட்களில் 75,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அசாத் மௌலானா புதிய அறிக்கை!
சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர் ஆசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் |
நான் வழங்கிய பீல்ட் மார்ஷல் பதவியை பொன்சேகா வெட்கமின்றி பயன்படுத்துகிறார்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்த போது தனிப்பட்ட ஒரு கோப்பையும் வழங்கி, இதனை யாருக்கும் வழங்க வேண்டாம் என தெரிவித்திருந்தது. அந்த கோப்பில் இருக்கும் விடயம் என்ன என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் |
முஸ்லிம்களின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை! [Saturday 2023-09-23 07:00]
பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் 200 அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் சஹ்ரான் கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். |
ஐஎஸ் அமைப்பினரை பிள்ளையான் இனம்காட்ட வேண்டும்!
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்றும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிக்கும் விடயம் உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார். |