புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2022

ஒரு நாள் முழுக்க அசைவ உணவுகளை தவிர்க்கவிருக்கும் சுவிஸ்

www.pungudutivuswiss.com

உலக சைவ தினமாக கொண்டாடப்படும் அக்டோபர் 1-ஆம் திகதி சுவிட்சர்லாந்து ஒரு நாள் முழுக்க சைவ உணவுக்கு மாற உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதற்காகவும், பூமியைக் காப்பாற்ற உதவுவதற்காகவும், சுவிட்சர்லாந்து அக்டோபர் 1-ஆம் திகதி Swisstainable சைவ தினத்தன்று, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே உண்ணவுள்ளது.

உலக சைவ தினமாக கொண்டாடப்படும் அக்டோபர் 1-ஆம் திகதி சுவிட்சர்லாந்து ஒரு நாள் முழுக்க சைவ உணவுக்கு மாற உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதற்காகவும், பூமியைக் காப்பாற்ற உதவுவதற்காகவும், சுவிட்சர்லாந்து அக்டோபர் 1-ஆம் திகதி Swisstainable சைவ தினத்தன்று, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே உண்ணவுள்ளது.

மலேசியாவில் விடுதலைப் புலிகளைத் தடைப்படியலிருந்து நீக்குவது தொடர்பன மேன்முறையீடு தள்ளுபடி

www.pungudutivuswiss.com

மகிந்த வீட்டில் சரஸ்வதி பூசை: சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்பு

www.pungudutivuswiss.co

ஆஸ்ரேலியாவில் சைபர் தாக்குதல்: சுமார் 10 மில்லியன் பேரின் தரவுகள் திருடப்பட்டன!!

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
விதைக்கப்பட்டது செந்தாழனின் உடல்!


தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார்.

சாவடைந்த செந்தாழன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக 2001ம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடக்கம் 2009 மே 18 வரை தாயகத்திலும், புலம் பெயர் தேசத்திலும் விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடியவர்.

சாவடைந்த  செந்தாழன் அவர்கள் தாயகத்தில் மணிவண்ணன் பயிற்சிப் பாசறை, ஜொனி அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, பட்டய அறிவியற் கல்லூரி, அனைத்துலகத் தொடர்பகம், கேணல் கிட்டு அரசறிவியற் கல்லூரி போன்றபல பகுதிகளில் பயிற்சி பெற்று, 2006ம் ஆண்டு ரஷ்ய மொழி ஆற்றும் அரசறிவியல் படிப்பதற்காக ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2009ம் ஆண்டு வரை ரஷ்யாவில் தனது பணியை மேற்கொண்டு வந்தார்.

புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்த செந்தாழன் அவர்கள் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் கடந்த 12 வருடங்களாக வாழ்ந்து. தாய் நாட்டிற்காகவும் கடமை செய்து வந்ததுடன் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகர் வாழ் மக்களுடனும் அன்பைப் பேணி வந்துள்ளார்.

இவரது இறுதி வணக்க நிகழ்வுகள் 24.09.2022 அன்று  Crématorium de la Robertsau,15 RUE DE L'ILL ,67000 STRASBOURG ,(ROBERTSAU) அங்கு நடைபெற்றிருந்தது. இறுதி வணக்க நிகழ்வில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் வாழ் தமிழ் மக்களும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர்களும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும்  அமைப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் உரையாற்றியிருந்தார். அத்துடன் சக போராளிகளும் நினைவுரையை ஆற்றியிருந்தனர்.

செந்தாழன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு ஸ்ராஸ்பூர்க் வாழ் மக்களின் கண்ணீரால் நிறைந்திருந்தது.

இவரது வித்துடல் 26.09.2022 அன்று Cimetiére Nord, 15 RUE DE L'ILL ,67000 STRASBOURG (ROBERTSAU) துயிலும் இல்லத்தில் தேசிய கொடி போர்த்தி விதைக்கப்பட்டது.


தேசிய சபையில் இரண்டு குழுக்களை அமைக்க முடிவு! [Friday 2022-09-30 07:00]

www.pungudutivuswiss.com


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த சந்திப்பு  இடம்பெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது

நினைவேந்தல் வழக்கில் இருந்து நிரோஷ் விடுவிப்பு!

www.pungudutivuswiss.com


கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது.

இலங்கை வாக்கெடுப்பை கோரும்!

www.pungudutivuswiss.com

[Friday 2022-09-30 08:00]


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நியாயமற்ற தீர்மானம் தொடர்பில்  இலங்கை வாக்கெடுப்பை கோரும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நியாயமற்ற தீர்மானம் தொடர்பில் இலங்கை வாக்கெடுப்பை கோரும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் என்றுமே சமூகத்தின் மீதான பற்றுறுதியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாற்றுப் பாதையில் பல சம்பவங்கள் அதற்குச் சான்று.
www.pungudutivuswiss.com
ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களையும் தட்டிச்செல்லும் பிரதேசங்கள்..!!
🥇🥈🥉
💢முல்லைத்தீவு மாவட்டம்
👉கஞ்சா -
1ம் இடம் - கரைதுறைப்பற்று
2ம் இடம் - துணுக்காய்
3ம் இடம் - வெலிஓயா
👉ஹெரோயின் -

29 செப்., 2022

தென்னிலங்கை அரசியல் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்! கோட்டபாயவுக்கு அமைச்சு பதவி

www.pungudutivuswiss.comரம

தென்னிலங்கை அரசியல் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்! கோட்டபாயவுக்கு அமைச்சு பதவி | Sri Lanka Political Issues Gotabaya Minister

பிரிட்டனுக்கு வரும் GAS-குழாய்க்கும் பெரும் ஆபத்து : யார் வெடி வைப்பார்கள் என்று தெரியவில்லை

www.pungudutivuswiss.com

பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள்நிர்ணய கலந்துரையாடல்!

www.pungudutivuswiss.com

தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணயத்தை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணயத்தை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது

மோடியுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராய்ந்த ரணில்

www.pungudutivuswiss.com


இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் பட்டினி

www.pungudutivuswiss.com



தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சுகாசுக்கு ஜனநாயகப் போராளிகள் பதிலடி

www.pungudutivuswiss.com


எந்தவொரு போராளிகளைப்பற்றி கதைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எவ்வித அருகதையும் இல்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு போராளிகளைப்பற்றி கதைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எவ்வித அருகதையும் இல்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்

28 செப்., 2022

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்கிறார் சட்டமா அதிபர்

www.pungudutivuswiss.com

அரசியலமைப்புக்கு அமைய, அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது என்றும் அதில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அரசியலமைப்புக்கு அமைய, அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது என்றும் அதில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்

பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளுக்கு விரைவில் பிணை கோரும் மனுக்க

www.pungudutivuswiss.com



பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ய இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தயாராகி வருகின்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ய இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தயாராகி வருகின்றது

கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்

www.pungudutivuswiss.com


பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம். முடிந்தால் இதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் சவால் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம். முடிந்தால் இதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் சவால் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் தீவிபத்து - 60 வீடுகள் நாசம்!

www.pungudutivuswiss.com


கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை பகுதியில்  ஏற்பட்ட தீப்பரவலில் 60 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.
கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 60 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

26 செப்., 2022

தேசிய பேரவையில் கூட்டமைப்பு இணையாது!

www.pungudutivuswiss.com


தேசிய இனப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!

www.pungudutivuswiss.com


சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமையை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாக கண்டித்துள்ளது.

சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமையை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாக கண்டித்துள்ளது.

திலீபன் நினைவிடத்தில் முன்னணியினர் அராஜகம்

www.pungudutivuswiss.com


தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்

ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் பலி, 21 பேர் காயம்!

www.pungudutivuswiss.com

மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் இஷெவ்ஸ்க் நகரில் சுமார் 1,000 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் ஏழு குழந்தைகளும் அடங்குவர்.

மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் இஷெவ்ஸ்க் நகரில் சுமார் 1,000 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் ஏழு குழந்தைகளும் அடங்குவர்

23 செப்., 2022

La Courneuve : இலங்கைச் சேர்ந்த இருவர் மீது கத்திக்குத்து! - ஒருவர் பலி..!

www.pungudutivuswiss.com

கே.பியை கைது செய்யும் போது அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்யமுடியவில்லை..! நாமல் கருணாரத்ன கேள்வி

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும்,

உள்ளே ஒன்றுக்குள் ஒன்று

www.pungudutivuswiss.com!

வெளியே முட்டி மோதிக்கொண்டாலும் உள்ளே நட்புபாராட்டுவது அரசியல்வாதிகளது

ஜனவரியில் இடைநிறுத்தப்படுகிறது வடக்கிற்கான ரயில் சேவை

www.pungudutivuswiss.com

இந்தியாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதன்போது ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்கிற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

ஜோ பைடனைச் சந்தித்தார் அலி சப்ரி!

www.pungudutivuswiss.com

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 77 ஆவது அமர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் வைத்தே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 77 ஆவது அமர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் வைத்தே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார்.

நல்லூரில் ஞாயிறன்று உண்ணாநோன்பு! - நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அழைப்பு. [Friday 2022-09-23 09:00]

www.pungudutivuswiss.com


அனைத்து தமிழ் உறவுகளும் தியாக தீபம் திலீபனுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து வீர வணக்கத்தையும் அஞ்சலியையும்  செலுத்த வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து தமிழ் உறவுகளும் தியாக தீபம் திலீபனுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்த வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது

22 செப்., 2022

ஜெனீவா கவனயீர்ப்புப் போராட்டம்!

www.pungudutivuswiss.com 

குருந்தூர்மலை போராட்டத்தில் ஈடுபட்ட ரவிகரன், மயூரன் பொலிசாரால் கைது

www.pungudutivuswiss.com


குருந்தூர்மலையை காணி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்த ரவிகரன், மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருந்தூர்மலையை காணி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்த ரவிகரன், மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 செப்., 2022

BREAKING NEWS : 200 முஸ்லீம் காடையர்கள் சேர்ந்து சைவக் கோவிலை சுற்றி வளைத்தனர்- லண்டனில் பரபரப்பு

www.pungudutivuswiss.com

இலங்கை நிலவரம் - உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com



இலங்கையின் தற்போதைய நிலையை சீர்செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதி கடுமையானதாக அமையும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலையை சீர்செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதி கடுமையானதாக அமையும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

பொறுப்புக்கூற வேண்டியவர்களை கண்டறிய தெரிவுக்குழு - 34 எம்.பிக்கள் கோரிக்கை

www.pungudutivuswiss.com


நாடு எதிர்க்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற விசேட தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகபெரும தரப்பினர், தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் உறுப்பினர்கள், உட்பட பாராளுமன்றில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு எதிர்க்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற விசேட தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகபெரும தரப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், உட்பட பாராளுமன்றில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

www.pungudutivuswiss.comஅரசியல் கைதிகள் விடுதலை… ! ரணில்- சுபாஷ்கரன் மற்றும் பிரேம் சிவசாமி சந்திப்பில் தமிழர்களுக்கு கிடைக்க இருக்கும் பெரும் விடுதலைபிரித்தானிய மகாராணியாரின் இறுதிக் கிரிகையில் கலந்து கொள்ள, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன்

20 செப்., 2022

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் போராட்டம்!!

www.pungudutivuswiss.com

எங்கள் தலைவர் பிரபாகரன் ஐ. நா முன்றலில் இடிமுழக்கமாக முழங்கிகொண்டிருக்கும் தமிழர்கள்

www.pungudutivuswiss.comஜெனிவாவில் ஆரம்பித்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம்


இன்றைய  தினம் (19.09.2022 )   சுவிஸ், ஜெனிவா,ஐ. நா   ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில்   நடைபெற்றுக்கொண்டிருக்கும்   கவனயீர்ப்பு  போராட்டத்தில்  அனைத்து  தமிழர்களும்   ஒன்றிணைந்து  ஒருமித்த  குரலோடு தங்களின் கோரிக்கையை  சர்வதேசத்திடம்  எழுப்பிக்கொண்டுள்ளார்கள்   

19 செப்., 2022

அரசியல் தீர்வு சமஸ்டி கட்டமைப்பில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக இருக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com


அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

7 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த 14 வயதுச் சிறுவன்! - போதையில் தடுமாற்றம்.

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில்,  ஹெரோயினுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளார். அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில், ஹெரோயினுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளார். அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

www.pungudutivuswiss.com



தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான தாயகத்தில், காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான தாயகத்தில், காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது

புதிய வரைவு பிரேரணையின் உள்ளடக்கம் - தமிழ்க் கட்சிகள் அதிருப்தி!

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடைய முடியாது எனவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை முக்கிய குறைபாடு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடைய முடியாது எனவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை முக்கிய குறைபாடு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளன

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு 10 பேர் பலி

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18 செப்., 2022

www.pungudutivuswiss.com

உக்ரைனில் ஒரே இடத்தில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸியம் நகரை உக்ரைன் தன் வசம் கொண்டுவந்துள்ளது. கிழக்கு நகரமான இஸியத்தில் 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 440 உடல்கள்: கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ

உக்ரைனில் ஒரே இடத்தில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸியம் நகரை உக்ரைன் தன் வசம் கொண்டுவந்துள்ளது. கிழக்கு நகரமான இஸியத்தில் 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

17 செப்., 2022

யாழில் காதலன் தண்டித்ததால் இளம் ஆசிரியை ஒருவர் தற்கொலை.!

www.pungudutivuswiss.com

இருபாலையில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம்?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின்  ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்- இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இடைநிறுத்தப்பட்டது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!

www.pungudutivuswiss.com


மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசியல் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1373 கிலோ மீற்றர் தூரம்: எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு மின்சார விநியோகம்!

www.pungudutivuswiss.com

இத்தாலியில் வெள்ளம்: 10 பேர் பலி

www.pungudutivuswiss.com
மத்திய இத்தாலியைத் தாக்கிய கடுமையான புயல்களில் குறைந்தது பத்து பேர் இறந்துள்ளனர் மற்றும் நான்கு பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் -காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி

www.pungudutivuswiss.com

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் குறித்து கலந்துரையாடல் - இந்தியா மௌனம்!

www.pungudutivuswiss.com



சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் நேற்று நடைபெற்றுள்ளது

கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா


புகைப்படம் முடிந்தது:திரும்பும் டெலோ!

www.pungudutivuswiss.com

நோர்ட் ஸ்ட்ரீம் 2 இக்கு மாற்றீடாக பவர் ஆஃப் சைபீரியா 2!

www.pungudutivuswiss.com


அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் அடுத்து பதவியேற்கவுள்ள பத்து அமைச்சர்களில் சி.வி.விக்கினேஸவரனின் பெயருமுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மைத்திரியும் சந்தேக நபர்! - நீதிமன்றம் உத்தரவு.

www.pungudutivuswiss.com



ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது

டி20 உலக கோப்பை தொடர்: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு https://www.dailythanthi.com/Sports/Cricket/t20-world-cup-dasun-shanaka-led-sri-lanka-squad-announced-793676

www.pungudutivuswiss.com
ஆசிய கோப்பை சாம்பியன் அணியான இலங்கை அணி உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் விளையாட முதல் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கொழும்பு,

தற்போது நினைவேந்தலுக்கு முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள்?

www.pungudutivuswiss.com


தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்

14 செப்., 2022

பலவீனமான வரைவுத் தீர்மானம்!- சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் பரிந்துரையும் இல்லை.

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்க வேண்டாம்!

www.pungudutivuswiss.com


தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம்   என  ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார்.

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார்

ஐசிசியிடம் பாரப்படுத்துமாறு கனேடியப் பிரதமரிடம் கோரிக்கை!

www.pungudutivuswiss.com


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்

வலுவான புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்! [Wednesday 2022-09-14 08:00]

www.pungudutivuswiss.com

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன

13 செப்., 2022

ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் !! இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் !! - ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு!

www.pungudutivuswiss.com

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்

சுவிஸில் இருந்து நாடுகடத்தப்படுவோர் குறித்து வெளியாகியுள்ள மோசமான தகவல்கள்!

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள சிலர் மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று, ஜெனீவாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, கட்டித் தூக்கப்பட்டு படிகளில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள சிலர் மனிதாபிமானமற்ற வகையில், மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று, ஜெனீவாவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, கட்டித் தூக்கப்பட்டு படிகளில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு 7 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

www.pungudutivuswiss.comஅ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இலங்கை மீது ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் - மனித உரிமை அமைப்புகள்

www.pungudutivuswiss.com

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்! [Tuesday 2022-09-13 07:00]

www.pungudutivuswiss.com


ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில்  உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு வலியுறுத்தினர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு வலியுறுத்தினர்

5 அரசியல் கைதிகள் மயக்கம்! - மருத்துவமனையில் அனுமதி!

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்

13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை -சட்டமா அதிபருடன் முன்னணியினர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து வரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து வரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்

ad

ad