தர்மபுரியில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இளவரசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனைக் கணக்கில் வைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கணக்கில் கொண்டும் அனுமதி குறித்து மாவட்ட ஆட்சியரே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் 144 தடை அமலில் உள்ளதால் திருமாவளவனுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.