புதன், அக்டோபர் 31, 2012


நீலம் புயல் : திருச்செந்தூர், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
 மாற்றுப்பாதையில் இயக்கம் 
'நீலம்' புயல் - கடந்த 3 நாட்களாக மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிசேகம் -காணொளி 
m
கோத்தாவிடம் கேள்விகளால் வேள்வி செய்த ரஞ்சன் மத்தாய்
13 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து அண்மையில் டில்லி சென்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் எனத் தெரியவருகிறது.
கடந்தவாரம் புதுடில்லி சென்ற கோத்தபாய அங்கு உயர்மட்ட இந்திய அதிகாரிகளுடன், பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுகளை நடத்தியிருந்தார்.
யாழில் நடைபெறும் வேலைத்திட்டங்களுக்கு இராணுவமும் பொலிஸாரும் ஒத்துழைப்பு தருகின்றனராம்; புகழாரம் சூட்டுகிறார் அரச அதிபர்
2012ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 26 மாணவர்களுக்கு பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் எம்முடன் இணைந்தே செயற்படுகின்றனர்
இராணுவத்தினரை சகோதரர்களாகப் பார்க்கிறார்களாம் தமிழர்கள்; கஷ்டப்பட்டு கண்டு பிடித்தார் முதல்வர்
நடப்பாண்டில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
ஒரு காலத்தில் தமிழர்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த சூழல் மாறி இன்று எம்முடன் இணைந்த சகோதாரர்களாக ஒன்றிப் பிணைந்து வாழும் காலம் உருவாகி விட்டது என யாழ். மாநகர சபை முதல்வர்
வடக்கில் தொடர்ந்து அடை மழை தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்
வடக்கில் அடை மழை தொடர்வதனால் தாழ்ந்த நிலப் பகுதிகள் வெள்ளத்தினால் மூடப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றக் கிராமங்கள் பலவற்றில் குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்ததனாலும் காற்றினால் கூரைகள் பறந்து, கூரை விரிப்புகள் காற்றினால் அள்ளிச் செல்லப்பட்டதனாலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு அருகில் உள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன. 
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள்
இன்று நள்ளிரவு முதல் வானொலி பண்பலைகளில் மாற்றம்
இன்று நள்ளிரவு தொடக்கம அனைத்து வானொலி பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் மாற்றப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ஆணைக்குழு தெரிவிக்கையில்,45 வரையான பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளின் அதிர்வெண்களை மாற்றி அமைப்பதுடன் மேற்படி 45 பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் 87.5 தொடக்கம் 108 வரையான மெஹா ஹேட்ஸ் வீச்சில் ஒலிபரப்பு செய்யப்படும்.
உடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யவும் : ஜனாதிபதி உத்தரவு
நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மூன்று சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.கடந்த நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக அதிகரித்த மழை வெள்ளம் ஏற்பட்டதனால் இக்குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலக்கேணிகுளம் மற்றும் பாலக்கட்டு குளம் என்பனவும் திருகோணமலை வடக்கில் உள்ள வெகட்வெற்றிவேவ என்னும் குளமுமே உடைப்பெடுத்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குளங்கள் மிகவும் அண்மையில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்
அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை அரசாங்கம் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
நிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று மூழ்கி விபத்துக்குள்ளாகியது. 

இதில் 22 பேர் பயணித்த நிலையில் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான ஒற்றை டி20 போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக தாமதித்து ஆரம்பித்திருந்தது.

வன்னியை ஆண்ட கடைசி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு தினமான இன்று புதன்கிழமை நினைவு தினம் மக்களின் வெளிநடப்புக்கு மத்தியியல் இடம்பெற்றது.
நகரசபை தலைவர் ஐ.கனகையா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர் மாலை மாலை அணிவித்தனர். 
மீன்பிடி தொழிலுக்காகச் சென்று கடலில் சுமார் 62 நாட்கள் தத்தளித்த ஐந்து மீனவர்கள் நேற்று முல்லைத்தீவு கடற்பரப்பின் நாயாறு பகுதியில் கரை திரும்பியுள்ளனர்.
 டந்த எட்டாம் மாதம் நீர்கொழும்பு கடற்பரப்பின் ஊடாக  ஐந்து மீனவர்களும் கடலுக்குச் சென்றுள்ளனர். 
றித்த படகு 62 நாட்களுக்குப் பின் கரையொதுங்கியுள்ளதுடன் ஐந்து மீனவர்களும் உயிருடன் கரை
ஐக்கிய நாடுகள் சபையில் வியாழக்கிழமை இலங்கை சூழல் குறித்து மூன்றரை மணி நேர விவாதம் நடக்கும்மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 ஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்தது ஏன்?
ராஜீவ் கொலை! கருணாநிதி விசாரிக்கப்படாதது ஏன்? தலைமை விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு!
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள இவ்வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர் திமுக கூட்டத்தை கருணாநிதி ரத்து செய்தது என் என்பது குறித்து அவரிடம்


யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.
சமூகத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் புரட்சிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாறி விடுகின்றன. அப்படியானதொரு புதுமையான சமுதாய மாற்றத்தையும் சமூகவியல் பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.

இளையராஜா
 
இசை நிகழ்வும் மாவீரர்தின தமிழர் தேசிய நிகழ்வும் - கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கை.
 இசைஞானி இழையராஜாவினது நிகழ்வும் - நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தேசிய மாவீரர் தினம்  மற்றும் அதையொட்டிய மாவீரர்  வார அனுஷ்டிப்புகளும் கனேடிய தமிழர்கள் மத்தியில் மாறுபட்ட கருததுக்களையும் குழப்பங்களையும் ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமாக கனடியத் தமிழர் பேரவையினர் விளக்க அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர். 
திரு.பொன் பாலராஜன் அவர்கள் மீது அவதூறு

நேற்று சில ஊடகங்கள் வாயிலாக திரு.பொன் பாலராஜன் அவர்கள் மீது அவதூறு பூசும் வண்ணம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் அபிமானிகளூம் இதற்கு எதிராக வேதனையையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்துக்கு 5.5 டி.எம்.சி., தண்ணீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவு

 டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்பு ஆணைய கூட்டத்தில், தமிழகத்துக்கு 5.5. டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பெட்ரோல் குண்டு வீசியதில் 5 பேர் மரணம்? : 
மதுரையில் பெரும் பதட்டம்

தேவர் ஜெயந்தி தொடர்பாக பரமக்குடியில் நேற்று மூன்று பேர் கொல்லப்பட்டனர். 
இதையடுத்து  தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு, நேற்று இரவு மதுரை திரும்பிக்கொண்டிருந்த வாகனத்தை மறித்தனர் சிலர்.   மதுரை சிந்தாமணி அருகில்

அன்பான தமிழ் மக்களே!  :
 கனடியத் தமிழர் பேரவையின் அவசர அறிவிப்பு

 தமிழர்கள் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று செய்திகள் வெளியாகின.
கொட்டும் மழையில் தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் முற்றுகை போராட்டம்
விஜயகாந்த் மீது எப்.ஐ.ஆர். : ரகசிய உத்தரவு - 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் போலீஸ் அனுமதி இன்றி கொட்டும் மழையில் முற்றுகைப்போராட்டங்களை நடத்த கூடிவருகின்றனர்.

அனகை முருகேசன் கைது : விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா?

பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் தேமுதிகவின் எம்.எல்.ஏ.  அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தும் கைது செய்யப்படுவாரா என்று பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.

இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார்கள் 
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!


இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க

இளையராஜா இசை நிகழ்ச்சி ரத்தாகும் : சீமான் உறுதி

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் அடுத்த மாதம் நடக்க இருந்தது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர். 

தேமுதிகவில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் 
அதிமுக பக்கம் வருகிறார்களா?: பரபரப்பு பேட்டி
 
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் முன் ஜாமீன் கேட்டு மனு
பத்திரிகையாளருடன் மோதல் வழக்கு : 

முதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது பற்றி சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம் கடந்த சனிக்கிழமை அன்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது விஜயகாந்துக்கும், நிருபர்களுக்கும்

கனடாவில் மீண்டும் நிலநடுக்கம்

கனடா நாட்டிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7.7. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஹவாய் தீவை சுனாமி தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால்

தமிழ்நாட்டை நீலம் புயல் தாக்குமா?
 
வங்ககடலில் அந்தமான் அருகே 3 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதுமேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வந்தது. நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) மாறியது.

டெசோ தீர்மானங்களுடன் ஸ்டாலின், டி,ஆர் பாலு ஆகியோர் இன்று மாலை ஐநா பயணம்!
இலங்கைத் தமிழர்களின் நலனை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம்  தி.மு.க. வினால்  நிறைவேற்றப்பட்ட டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர்

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் வீடியோ இணைப்புபாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் இளம் பெண்கள்

இந்தோனேசிய தலைநகர் ஜாகர்தா அருகில் உள்ள டெபோக் நகரில் வசிக்கும் 14 வயது சிறுமியின் பேஸ்புக் நண்பர் ஒருவர், அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பேஸ்புக் மூலம் இந்தோனேசிய சிறுமிகளுக்கு வலை விரித்து, அவர்களை கடத்தி
]

அருண்பாண்டியனுக்கு சான்ஸெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே.. விஜயகாந்த் உருக்கமான புலம்பல்!


தேமுதிகவைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக மிகப் பெரிய அதிர்ச்சியில் உள்ளார் விஜயகாந்த். அவருடன் 50 வருடமாக நெருங்கிப் பழகிய நண்பர் சுந்தரராஜனும், நீண்ட காலம் திரையுலகில் நெருக்கமானவராக இருந்து வந்த அருண் பாண்டியனும்

ஜெனிவாவில் இலங்கையை கேள்விக்குள்ளாக்க சர்வதேச குழுக்களிடமிருந்து கடும் அழுத்தங்கள்! பிரட் அடம்ஸ்

இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பாக இலங்கையை கேள்விக்கு உள்ளாக்க அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையை அரசாங்கங்கள் ஓர் அரங்கமாக பயன்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற

விடுதலைப் புலிகள் சார்பில் வாதிடுவதற்கு சுவிஸ் தமிழருக்கு தீர்ப்பாயம் அனுமதி


நேற்று முன்தினமும், நேற்றும் கொடைக்கானலில் தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது தொடர்பான வழக்கில் வாதாடுவதற்கு, சுவிற்சர்லாந்தில் உள்ள அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவருக்கு நீதிபதி