இலங்கை கடற்படைக்கு இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்தது. இந்தியாவின் சுதந்திர தினமான இன்று அந்த விமானம், இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் இணைந்து, கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார் |
-
15 ஆக., 2022
டோர்னியர் -228' விமானத்தை இலங்கையிடம் வழங்கியது இந்தியா
ரஷ்யாவின் கொடூர திட்டம்: நூற்றுக்கணக்கானோர் தப்பியோட்டம்!
உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யர்கள் கொடூர திட்டத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளூர் மக்கள் வெளியிட்ட தகவலில், ரஷ்ய தரப்பு மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் |
அமெரிக்காவின் நடவடிக்கையால் கடும் கோபத்திற்கு ஆளான சீனா!
அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் குழு தீவு நாடான தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தனது போர் பயிற்சியை தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்டர் எட் மார்கி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தைவான் தலைநகர் தைபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி சாய் இங்-வெனைச் சந்தித்தனர் |