தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் நியூமகஜின் சிறைக்கு விஜயம்!
Published on April 7, 2011-7:39 pm · No Commentsநியூமகஜின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், பொன்.செல்வராசா ஆகியோரிடம் பார்வையிட்டனர்.
நியூ மகஜின் சிறைச்சாலையில் 142தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளை தாம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததுடன் அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் சென்று பார்வையிட வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தனர்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்புடன் இன்று நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளிலும் தாம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாக முடிக்குமாறும் குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை விரைவாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாம் அரசதரப்பை கோரியதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்