இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுவூட்ட அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. |
-
14 செப்., 2022
பலவீனமான வரைவுத் தீர்மானம்!- சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் பரிந்துரையும் இல்லை.
தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்க வேண்டாம்!
தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார் |
ஐசிசியிடம் பாரப்படுத்துமாறு கனேடியப் பிரதமரிடம் கோரிக்கை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர் |
வலுவான புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்! [Wednesday 2022-09-14 08:00]
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன |