புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் கிராமம்,  செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி, பழனி இவரது மகள் செல்வி வயது-12, (இருவர் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
தேர்தல் விதி முறைகளை மீறவில்லை :  தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கடிதம்
ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது புதிய திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளித்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு
கோத்தபாய ராஜபக்சே இந்திய அதிகாரிகளுடன் ரகசியமாக பேசியது என்ன?
 
இலங்கையில் சமீபத்தில் காமன்வெல்த் மாநாடு நடந்தது.  அதில் கலந்துகொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.  போர்க்குற்றம்
புலிகளுக்கு 10 ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்தனர்!- நீதிமன்றில் முன்னாள் போராளி சாட்சியம்
தமக்கும் வேறு சிலருக்கும் பத்து ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்ததாக, அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் தொடர்புடையவரென குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்வியை சந்திக்கும் பார்சிலோனா அணி

லயனல் மெஸி விளையாடாத நிலையில் பார்சிலோனா அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.லா லிகா கால்பந்தாட்ட போட்டியொன்றில் அத்திலட்டிக் பில்பஃபாவோ அணி 1 – 0
நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
மன்மோகன் சிங்கின் யாழ். வருகையை எதிர்க்கும் ஐ.தே.க: அழைப்பு உயிரோடு தான் இருக்கிறது என்கிறார் ப.சிதம்பரம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அழையா விருந்தாளியாக யாழ்ப்பாணம் வரவிருப்பதாக ஐ.தே. கட்சி வெளியிட்ட கருத்துக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கிலிருந்து வெளியேறிய மக்களைச் சந்தித்தார் ஐ.நா விசேட பிரதிநிதி
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி சலோகா பொயனி, வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது.எதிர்வரும் டிச 6ம், 7ம், 8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக
 சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தால் பொட்டு அம்மானுடன் நெருங்கியவர் எனப்பட்ட வங்கி முகாமையாளர்  வாதத்தால் விடுதலை
புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மானுடன் தொடர்பு உள்ளதாக பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பிரபல தனியார் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர், சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து
ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்: முதலமைச்சர் மற்றும் ஆளுனரை சந்தித்து பேச்சு- வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் நிலையை அறிந்து கொள்ள ஐநா அதிகாரி இலங்கை சென்றுள்ளார்!
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் ஒட்டுமொத்த நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
கொழும்பில் அரைநிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாததை கண்டித்து இன்று கொழும்பில் விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
ஏற்காடு இடைத்தேர்தல் : முதன் முதலில் ‘நோட்டா‘
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) மரணம் அடைந்ததையொட்டி, அத் தொகுதிக்கு நாளை(புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில்  மாலை
நடிகை அனுராதா மீது தொழிலதிபர் பண மோசடி புகார்
வில்லாபுரம் அன்புடன் வரவேற்கிறது, புடிச்சா புளியங்கொம்பு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அனுராதா.  இவர் மீது  சென்னை வேளச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதரன்
நடிகைகள் லிசிபிரியதர்ஷன், ஸ்ரீபிரியா இருவரும் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.  செய்தியாளர்கள் இம்மனு குறித்த விவரம் கேட்டபோது,  அவர்கள் இருவரும் எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டனர்.
ஏற்காடு இடைத்தேர்தல் : பிரசாரம் ஓய்ந்தது நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) மரணம் அடைந்ததையொட்டி, அத் தொகுதிக்கு நாளை(புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.   நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் 
கேப்டன் டிவி நிருபர்கள் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் : புகாரை வாங்க போலீஸ் அதிகாரிகள் மறுப்பு
கேப்டன் டிவி நிருபர்கள் லாவன்யா,  சதீஷ்.  இவர்கள் மீது இன்று  சென்னை மதுரவாயலில் அதிமுக பகுதி செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.  தாக்குதலில் பலத்த காயமுயற்ற நிருபர்கள்
என்னை பதவியிலிருந்து நீக்க, நாமல் ராஜபக்ச, வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை!- பி.பீ. ஜெயசுந்தர
நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை என நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் பணம் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது: ஜீ.எல்.பீரிஸ்
சொந்த நாடுகளில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக தமது இருப்பை கருதி சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை கொடுத்து வருவதாககவும் இதற்கு பதிலாக இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக அந்த நாடுகளின் மதிப்பீடு நியாயமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம்

பெண்ணொருவரை கொலை செய்த குற்றத்திற்காக பதுளை மேல் நீதிமன்றம் தேயிலை தோட்ட கங்காணியான தமிழர் ஒருவருக்கு இன்று மரணத் தண்டனை விதித்துள்ளது.
பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தை சேர்ந்த வேலு சிவ சந்திரபோஸ் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா வருமாறு அழைப்பு
நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிந்திய செய்தி 
இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை?

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலையில் இங்கிலாந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில், வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து இங்கிலாந்து பொருளாதார தடைவிதிக்கும் திட்டம் இருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியுள்ளது. இதன் மூலமாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. 

சிங்களவர்கள் எதிர்ப்பு இதனிடையே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கைக்கு எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை அரசின் ஆதரவு அமைப்பான ‘இங்கிலாந்து இலங்கையர் ஒன்றியம்’ என்ற அமைப்பு நேற்று மனு வழங்கியது. அதில், பிரதமர் டேவிட் கேமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் இங்கிலாந்தில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

மேலும், இங்கிலாந்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரிகிறது.

ad

ad