-
19 ஜூன், 2019
கல்முனை போராட்டத்தில் இணைந்தார் கோடீஸ்! குழப்புவதற்காக அங்கு ரயர்கள் எரியூட்டப்பட்டன!
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் : கூட்டம் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில்சென்ற அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. கூட்டத்தில் பங்கேற்கவில்லை
மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தேசிய
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்
இங்கிலாந்தின் பிரதமரான தெரசா மே பதவி விலகியதையடுத்து அடுத்து யார் பிரதமர் என்ற நிலையில், அதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, தற்போது இரண்டாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு
நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான
குடாநாட்டு வாள்வெட்டுகள் - 11 சந்தேக நபர்கள் கைது
கொக்குவில், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டனர். அவர்கள் 10 பேரையும் வரும் ஜூலை முதலாம் திகதி வரை
ஸஹ்ரான் குறித்த கேள்விகளுக்கு அமைதி காத்த முன்னாள் பொலிஸ் அதிகாரி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர நேற்று சாட்சியம் அளித்தார்.
கூட்டமைப்பு எம்.பிக்கள் வராததால் முக்கிய கூட்டம் ரத்து!
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் அகூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பாகவும் ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கூடி ஆராய இருந்தது. எனினும், இந்தக் கூட்டம் நடைபெறவில்லை
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டடம்!
பருத்தித்துறை பிரதேச செயலக புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு கனடாவில் வாழும் பழைய மாணவர் எஸ் எம் மோகனபாலன் கணனிகளை (Computers) அன்பளிப்பு செய்துள்ளார்
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு 10.06.2019 ந்திகதி 06 கணனிகள் (Hp Desktop PC: Intel core i5, 500GB Ram, 500GB Hard Drive, Windows 10) பாடசாலை அதிபர் திருமதி.சி.இராசரெத்தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேற்படி கணனிகளை கமலாம்பிகை ம வி பழைய மாணவரும், கனடா முன்னணி தொழிலதிபருமான திரு.மார்க்கண்டு மோகனபாலன் (உரிமையாளர்: TechSource Computer Liquidators) அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு, அன்னாரின் சமூகபற்றினையும், மண் சார்ந்த செயற்பாட்டினையும் பாராட்டி உள்ளார்கள்
இக்கணனிகளை கனடாவில் Aero Courier எனும் பொதிகள் அனுப்பும் நிறுவனத்தை நடாத்தி வருபவரும், கமலாம்பிகை ம வி . பழைய மாணவருமான திரு.இராசமாணிக்கம் சத்தியகுமார் அவர்கள் அனுப்புகிற செலவை பொறுப்பெடுத்து இலவசமாக உதவியுள்ளார். இருவருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)