உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார் |
யாழ் மாநகர சபையில் நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு நாளைய தினம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில் - இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன சொலமன் சிறில் ,இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் இம்மானுவேல் ஆனோலட் முதல்வர் தெரிவுக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டது