அவுஸ்திரேலியாவில், பல்லின மக்களின் ஒன்றுபட்ட வாழ்வுக்கு உழைத்தபுங்குடுதீவைப் பிறப்பிடமாக கொண்ட தமிழனுக்கு விருது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பல்லினக் கலாச்சாரங்கள் இணைந்து வாழ்வதற்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகின்ற, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான விருதுகள் மாநில பல்கலாச்சாரா ஆணைக்குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மிகவும் மதிப்புக்குரிய இவ்விருதினை இலங்கை புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட அவூஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ள டாக்டர் கதிரவேலு சிவகுமாரன் அவர்கட்கு கிடைத்துள்ளமை இலங்கையர்கட்கு பெருமை சேர்த்துள்ளது.