புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2011

ஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 ! திமுக கூட்டணி 92 !

ஜூனியர் விகடன் தேர்தல் முடிவுகள்!
அதிமுக கூட்டணி 141 இடங்களிலும் திமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.இந்த இதழ கருத்து கணிப்பு என்று ஏதும் நடத்தவில்லை. ஆனால், தனது நிருபர் குழுவின் கணிப்பை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 141:

இதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 105 இடங்களிலும், தேமுதிக 17 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் என மொத்தம் 141 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும்,

இந்தக் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிடும் 7 இடங்களிலும் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 92:

திமுக கூட்டணியில் திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களி்லும், பாமக 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் என மொத்தம் 92 இடங்களில் முன்னணியி்ல் உள்ளதாகவும்,

இந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னணிக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் 5 இடங்களிலும் தோற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை இரு கூட்டணிகளும் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், (141+92=233) இன்னும் ஒரு தொகுதி குறித்து அதில் விவரம் இல்லை.

-தட்ஸ் தமிழ் ! 
சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும்இ அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.

நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10இ 11இ 12இ 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1இ170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண்இ பெண்களிடம் சரிபாதியாகஇ படித்தவர்கள்இ பாமரர்இ கிராமத்தினர்இ நகர்ப்புறத்தினர்இ தொழிலாளர்கள்இ அரசு ஊழியர்கள்இ தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர்இ சொந்தத் தொழில் செய்வோர்இ மாணவர்கள்இ வீட்டுவேலை செய்வோர்இ இல்லத்தரசிகள்இ மகளிர் சுய உதவிக் குழுவினர்இ வியபாரம் செய்வோர்இ சொந்த விவசாயம் செய்வோர்இ விவசாயக் கூலிகள்இ கூலி வேலை செய்வோர்இ உயர் நிலை பணியாளர்கள்இ வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள்இ பெண்கள் சரிபாதி அளவிலும்இ வயதளவில் 18-25இ 25-40இ 40-55இ 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்டஇ பிற்படுத்தப்பட்டஇ மிகவும் பிற்படுத்தப்பட்டஇ தாழ்த்தப்பட்டஇ மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும்இ 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுகஇ அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

திமுக கூட்டண் 140-அதிமுக கூட்டணி 94:

இதன் விவரங்களை கடந்த 3 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டது. அதன்படிஇ திமுக கூட்டணிக்கு மொத்தம் 140 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

திமுகவுக்கு 90 இடங்கள்:

திமுக கூட்டணியில் திமுகவுக்கு 90 இடங்களும்இ காங்கிரசுக்கு 24 இடங்களும்இ பாமகவுக்கு 17 இடங்களும்இ விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 இடங்களும்இ இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 இடங்களும்இ கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 1 இடமும்இ ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 இடமும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு மொத்தத்தில் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுகவுக்கு 74 இடங்கள்:

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 74 இடங்களும்இ தேமுதிகவுக்கு 8 இடங்களும்இ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும்இ இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும்இ மனித நேய மக்கள் கட்சிக்கு 1 இடமுநம்இ சமத்துவ மக்கள் கட்சிக்கு 1 இடமும்இ கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள் கிடைக்கும் என்று நக்கீரன் கூறியுள்ளது.
நன்றி-தற்ஸ்தமிழ்.கொம்
முரண்பாடான கருத்துக் கணிப்புக்கள்.பத்திரிகைகளின் நிலைப்பாட்டை தேர்தல் முடிவுகளாகச் சொல்கின்றன.இந்த முறை மிகவும் குழப்பமான முடிவுகள் கிடைக்கலாம்.தொங்கு சட்டசபை உருவாகலாம்.சிறிய கட்சிகளை கிள்ளுக்கீரையாக நினைப்பவர்கள் அவர்களின் தயவை நாடலாம்.எல்லாவற்றையும் விட தேர்தலின் பின் அணி மாறும் கூத்துக்களுக்கும் இடம் இருக்கும்.மொத்தத்தில் மக்களை வைத்து காமடி கீமடி நடத்தப் போகிறார்கள். 

விளம்பரம்

ad

ad