புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2011



























அராலி-வேலணை கடற்பாலத்தை விரைவில் அமைக்கக் கோரிக்கை
 வலிகாமத்தையும் தீவகத்தையும் இணைக்கும் அராலி வேலணை கடற்பாலத்தை விரைவில் அமைத்து பிரதேச அபிவிருத்தியை ஏற்படுத்து மாறு வேலணை வர்த்தக சங்கத் தலைவர் க.ஜெயச் சந்திரமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலணைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் தொடர்பாகத் தெரிவிக்கப் பட்டது.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:
இந்த விடயம் தொடர்பாகக் கடந்த 5 வருடமாகத் தெரிவிக்கப் பட்டு வருகிறது.
2011இல் இந்தத் திட்டத் துக்காக 52 மில்லியன் ரூபா ஒதுக்குவதாகத் தெரிவிக்கப் பட்டபோதும் இதுவரை இதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவில்லை.
இதுதொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலி. மேற்கு, வேலணைப் பிரதேச செயலர்கள், அரச அதிபர் ஆகியோருக்கு கடந்த காலங்களில் எண்ணக்கருக்கள் முன்வைக்கப்பட்டன என்று  கூறினார்.
இதுதொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்:
இந்தத் திட்டத்துக்கு பெருந் தொகை நிதி தேவையாக உள்ளது. 
2011 அல்லது 2012 இல் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பெரிய அபிவிருத்தியாக இது மேற்கொள்ளப்படும். என்றார்.
வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் மணல் அகழ்வு இடம்பெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.
நாகர்கோயில் மணலை இந்தப் பகுதி மக்கள் பெறுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
நயினாதீவு, புங்குடுதீவு, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்குப் பிரதேச சபை பவுசர் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது.
எனினும்  மேலதிகமான நீரை வழங்குவதற்கு ஏனைய நிறு வனங்களின் ஊடாக பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வேலணைப் பிரதேச செயலர் மு.நந்தகோபாலன் கூறினார்.
தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின்  சிரேஷ்ட பொறுப்பதிகாரி எஸ்.ரவீந்திரா கூறுகையில்:
குடிதண்ணீர் வழங்கல் திட்டத்தை விரைவுபடுத்த வேலணைப் பிரதேச சபை காணி வழங்கு வதாகத் தெரிவித்தது. இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் 20 லட்சம் ரூபா திட்டம் நகர்த்தப் பட முடியாத நிலையில் உள்ளது என்று கூறினார்.


புத்தரின் அவதாரங்களைச் சித்திரிக்கும் 28 சிலைகளும் பலாலியில் பிரதிஷ்டை
news
 பலாலியில் உள்ள யாழ். மாவட்ட பாதுகாப்புப்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள விகாரையில் புத்தபெருமானின் 28 அவதாரங்களையும் எடுத்துவிளக்கும் 28 புத்தர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.2600 ஆவது புத்த ஜெயந்தி தினத்தையொட்டி இந்தச் சிலைகள் விமானம் மூலம் பலாலிக்கு எடுத்துவரப்பட்டு அங்குள்ள விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பலாலிப் படைத் தலைமையகம் தெரிவித்தது.

பலாலி இராணுவத் தலைமையகத்தில் விகாரையை அண்டிய அரச மரம் ஒன்றைச் சுற்றி ஏழு பக்க வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்ட இடத்திலேயே அவை வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் நான்கு புத்தர் சிலைகள் வீதம் வைக்கப்பட்டுள்ளன.2600 ஆவது புத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்கவின் சிந்தனையின் பிரகாரமே 28 புத்தர் சிலைகள் கொண்ட விகாரை அமைக்கப்பட்டுள்ளது.புத்த  பகவானின் 28 அவதாரங்களையும் வெளிப்படுத்தும் விதமாகவே 28 புத்தர் சிலைகள் அந்த அவதாரங்களின் பெயர்களுடன் அங்கு வைக்கப்பட்டுள்ளன.வெண்ணிறத்தினாலான அந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் ஓர் அடி உயரமானவை ஆகும். இந்தச் சிலைகள் அனைத்தும் அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. அவை வேறு எங்கும் எடுத்துச் செல்லப்படமாட்டா.இங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகளில் 18 சிலைகள் யாழ். மாவட்டத்திலுள்ள படைத்தளபதிகளாலும் ஏனைய 10 சிலைகள் படைத் தலைமையகங்களாலும் வழங்கப்பட்டவை. இது குறித்த விவரக் குறிப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவுக்கல்லில் தீட்டப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவல்களை எமது செய்தியாளரிடம் பலாலி ஊடகப் பிரிவின் அதிகாரி ஒருவர் விவரித்தார்.  
                     

தேசிய விருதை பார்வதியம்மாளுக்கு சமர்ப்பித்த இயக்குநர்.
news
இந்திய தேசிய விருதிற்காக கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக் காற்று திரைப்படம்  தெரிவாகியுள்ளது. அவ் விருதினை மறைந்த பார்வதியம்மாளுக்கு சமர்ப்பணம் செய்யப் போவதாக இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

தனது திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கப்ப பெற்றதை அடுத்து அவர் கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலம் கைவிட்ட மனிதர்களின் வாழ்க்கையினை மையமாக கொண்டு தமிழர்களின் வாழ்க்கையினை அப்படியே பதிவு செய்தமைக்காக இந்த விருது கிடைத்துள்ளதாக தெரிவித்த இயக்குநர் சீனுராமசாமி இந்த விருதினை எனது அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதியம்மாளுக்கும் சமர்ப்பிக்கின்றேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அளவில் தயாராகி வெளிவரும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தெரிவு செய்து இந்திய அரசின் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்கள் இயக்குநகரம் சார்பில் இவ் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.இவ்வாறு கடந்த ஆண்டு தாயராகி வெளிவந்த படங்களின் அடிப்படையில் தமிழ் மொழியில் வெளிவந்த படங்களில் சிறந்த படமாக இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய தென் மேற்கு பருவக்காற்று திரைப்படம் தெரிவாகியுள்ளது.

இலங்கையின் பதிலுக்காக காத்திருக்கிறார் பான் கீ மூன்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-22 08:51:38| யாழ்ப்பாணம்]
ban-ki-moonஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தொடர்ந்தும் காத்திருப்பதாக அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங் கை அரசாங்கம் உத்தியோக பூர்வ பதில் அளிக்கும் என தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எவ்வாறெனினும் யுத்தக் குற்றச்செயல் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு இலங்கையை சார்ந்ததென ஐக்கிய நாடுகள் அமைப்பு அறி வித்துள்ளது. உரிய அதிகாரம் இன்றி விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையை வலியுறுத்தாது.குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்தவேண்டும் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். நிபுணர் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.இலங்கையின் உத்தியோகபூர்வபதி லை எதிர் பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப் பிட்டுள்ளார்.

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்தபடி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த்தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்துவிட்டது.
அடடா ஒரு ‘ஃப்ளோல’ சொல்லி மாட்டிக்கிட்டேனே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து தனது நிலைமையை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டுவிடத் துடித்தார்.

ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால். அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் ராமச்சந்திராவில் ரஜினி சிகிச்சைக்குச் சேர்ந்துவிட, இந்த முறை எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் சமீபத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளார் வடிவேலு. நல்லவேளை அங்கு பெரிய அளவு ரசிகர் கூட்டமில்லை.
நேராக உள்ளே போனவர், ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்க, நிர்வாகம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவுக்குப் பிறகு, ரஜினியைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. பல விஐபிக்கள் வாசலோடு நிறுத்தப்பட்டனர். லதா ரஜினியிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர். ஆனால் வடிவேலுவுக்கோ லதாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. போன வேகத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி திரும்பினாராம் வடிவேலு.

முதல்வர் ஜெயலலிதா நேரில் அஞ்சலி - படங்கள்





இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் மரியம் பிச்சைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். தனி விமானம் மூலம் திருச்சி சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மரியம் பிச்சையின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.



போர்க்குற்ற அறிக்கை தயாரிக்க அரசாங்கமே உதவியது! புதுக்கதை சொல்லும் சரத் பொன்சேகா

E-mailஅச்சிடுகPDF
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற அறிக்கை தயாரிப்பதற்கு அரசாங்கமே நிபுணர்குழுவினருக்கு தகவல் வழங்கியது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றில் சாட்சியமளித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற அறிக்கை தயாரிப்பதற்கு அரசாங்கமே நிபுணர்குழுவிற்கு தகவல் வழங்கியுள்ளது என்பதை ஐ.நா செயலாளர் பான் கீ மூன் ஊடாக அறியக்கிடைத்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்ச்சியின் ஒரு கட்டமாகவே தன்னை சிறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஒலிபெருக்கி மூலம் சரத் பொன்சேகாவிற்கு சாட்சியமளிக்க ஏற்பாடு செய்து கொடுக்கும்போது மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா குற்றவாளிகள் பக்கம் நிற்காது, குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளுடன் நிற்க வேண்டும்!

E-mailஅச்சிடுகPDF
இந்தியாவானது குற்றவாளிகளின் பக்கம் நிற்காது, குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்ஆசியா பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவைத் தளமாகக் கொண்ட த ஏஜ் என்ற பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பத்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளர். இலங்கை தொடர்பில் இந்தியா தனது கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குற்றவாளிகளின் பக்கம் நிற்காது, குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளுடன் இணைந்து இந்தியா செயற்படவேண்டும்.

அதில் இருந்து இந்தியா பின்வாங்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகளுக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவுகளை வழங்கவேண்டும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபையும் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு முழுமையான ஆதரவுகளை வழங்குவதுடன், அனைத்துலக விசாரணைக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தது.

இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய எட்டு நடவடிக்கைகளை முன்வைத்துள்ள மன்னிப்புச்சபை, அதிலொன்றான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் கீழ் இலங்கையைக் கொண்டுவந்து, அவர்களை அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 12.10 மணிக்கு அவைக்கு வந்தார். அவரை தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவர்களது கட்சி துண்டு அணிந்து வந்தனர். 
அமைச்சர்களின் இருக்கைக்கு கூட்டணி தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் விஜயகாந்த் அமர்ந்தார். அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள் பதவி ஏற்றதை தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பதவி ஏற்றனர்.
இதில் மு.க.ஸ்டாலின் கடைசியாக அழைக்கப்பட்டு பதவி ஏற்றார். அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் பலியானதை தொடர்ந்து அவரது உடல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதையடுத்து அவருக்கு பின்னால் காரில் வந்த அமைச்சர் சிவபதியும் திருச்சிக்கு சென்றார். எனவே அமைச்சர் சிவபதி இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை.

மாணவர்களுக்கு இந்த ஆண்டே இலவச லேப்டாப் 
தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட விளார் ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ப்போது பொதுமக்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்டு அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது,
’’ஒரத்தநாடு தொகுதியில் விளார் ஊராட்சியில் தான் எனக்கு அதிக வாக்குகள் அளித்துள்ளீர்கள். உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்ய பாடுபடுவேன்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 7 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். 20 கிலோ இலவச அரிசி, படித்த, படிக்காத பெண்களுக்கு தாலிக்கு அரை பவுன் தங்கம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.


இலவச அரிசி ஜூன் 1ம் தேதி முதல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களு க்கும் இலவச லேப்டாப் இந்த ஆண்டே வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கிரை ண்டர், மிக்ஸி, மின் விசிறி போன்றவை வழங்குவது தொடர்பாக அதிகாரி, அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தலில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தினமும் அமைச்சர்களை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்’’என்று தெரிவித்தார்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார் கனிமொழி.    தனது மகள்
கனிமொழியை சந்திக்க கலைஞர் இன்று டெல்லி சென்றார்.
அவர் இன்று மாலை திகார் சிறையில் கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது  மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
கனிமொழியுடன் சிறிது நேரம் கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து விடைபெற்றார்.











‘’விடுதலை’’க்கு தடையா? : ஜெ.வுக்கு கி. வீரமணி கண்டனம்
திராவிட இயக்கப் போர் வாளான “விடுதலை” நாள் ஏட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு   “விடுதலை” ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

’’தமிழர்களின் “கெசட்” என்றால் அது “விடுதலை” என்பது சுவர் எழுத்தாகும்.


நம் ஆயுதம் “விடுதலை” என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார்.
 தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் “விடுதலை” என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

“ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்;  இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாய்க் கிடக்கிறாய். வீரனாய் விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய் பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடு இருந்தநீ, இன்று செங்கை ஏந்திக் சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே! என்று கூறி விளக்கமும், விழிப்பும் உண்டாக்கி வருகின்றது ‘விடுதலை’.”

“இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம் என்று மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது. ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?” (திராவிட நாடு 27.6.1948) என்று “விடுதலை” சார்பில் நின்று விவேகக் குண்டுகளை  வீசினார் அண்ணா. 













M
 (அந்தப் பத்திரிக்கை தயாநிதியின் மாமனார் குடும்பத்துடையது).தனக்குத் தலைமைப் பதவி கிடைக்காது, உருப்படியாக இருந்த தொ தொ மந்திரிப் பதவியும் கையைவிட்டுப் போனதால் ஆத்திரம்!அதனால் கட்சி உருப்படாது என கூறியிருப்பார்! பிறகு தயாளு கோஷ்டியை ஏமாற்ற சிவசங்கரன் வழியாக கல் டிவி துவக்க 25 கோடியை முதல் கடனாக அளித்த்ததும் மாறனே! பிறகு ராசாவை மாட்டிவிட அதே சிவா வழியாக(S.Tel)தனக்கும் ஸ்பெக்ட்ரம் வேண்டும் என வழக்குப் போட்டு, ஊழல் வெளிவரக் காரணமாய் இருந்ததும் வேறு யாரும் அல்ல!இப்போது கட்சி அழியப்போகிறது என்பதால் இப்போது ஜெயாவிடம் சரணமடைய தனது உறவினர் பத்திரிக்கையை பயன்படுத்துகிராரோ என்ற சந்தேகம் வருகிறது!( NB . ஜெயா பதவியேறபை சன் டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது).பதவிக்காகவும் பணத்துக்காகவும் எதுவும் செய்யும் பிறவி! 
By மணி 
5/23/2011 2:31:00 P

திமுக தோல்வி அடையும் என்பதை முன்கூட்டியே கணித்த தயாநிதி மாறன்: விக்கிலீக்ஸ்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார் கனிமொழி.    தனது மகள்
கனிமொழியை சந்திக்க கலைஞர் இன்று டெல்லி சென்றார்.
அவர் இன்று மாலை திகார் சிறையில் கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது  மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

கனிமொழியுடன் சிறிது நேரம் கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து விடைபெற்றார்.

கனிமொழியுடன் அழகிரி மனைவி காந்தி சந்திப்பு




ரஜினி நலம்பெற வேண்டி  பாரதிராஜா தலைமையில்
 500 இயக்குநர்கள் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா  தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில்,பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார்,வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார்,ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன்,

ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முகசுந்தரம், சசிமோகன், மேலும் பல இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்கள்,செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


கூட்டம் ஆரம்பம் ஆகி, தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும், இயக்குநர்கள்,சங்க பொது செயலாளர் ஆர்.கே.செல்வமணி, எழுந்து பேசினார்.
’’நமது  கலைகுடும்பத்தின் மூத்த சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நலம் பெற்று உடன் வீடு திரும்ப நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்" என்று அறிவித்தார். உடன் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.



First Published : 23 May 2011 04:25:07 PM IST


புதுதில்லி, மே.23: 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரியின் மனைவி காந்தி இன்று தில்லி நீதிமன்றத்தில் சந்தித்தார்.
இன்று காலை தில்லி வந்த காந்தி, தனது மகன் துரை தயாநிதி உள்ளிட்ட சிலருடன் பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தார். காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார்.
எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார்.
இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அவரது பேரன் ஆதித்யாவுடன் அமர்ந்திருந்தார்.
பின்னர் கனிமொழிக்கும், ராசாத்தி அம்மாளுக்கும் இடையே காந்தி அமர்ந்தார். சிறிதுநேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து கருணாநிதியின் குடும்பத்தினர் அவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
First Published : 23 May 2011 10:53:05 AM IST

Last Updated : 23 May 2011 11:11:33 AM IST
புதுதில்லி, மே.23: சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி, 2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழி கைது என திமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இதெல்லாம் நடக்கும் என அக்கட்சியின் மத்திய அமைச்சர் ஒருவர் முன்கூட்டியே கணித்துள்ளார்.
இதுகுறித்த அமெரிக்க தூதரகத்தின் கேபிளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
திமுக தோல்வி அடையும் என்பதை 2008-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறன் கணித்துள்ளார்.
திமுக மீது படிந்துள்ள ஊழல் கறையை அகற்றாவிட்டால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மாறன் தெரிவித்துள்ளார்.
மாறன் இவ்வாறு கூறியதாக அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அந்நாட்டின் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் தகவல் அளித்துள்ளார்.
அதிகாரத்துக்கு வருபவர்கள் கவனத்தை இழந்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என தயாநிதி மாறன், டேவிட் ஹூப்பரிடம் தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க கேபிளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்புலிகளின் பாணியில் பாக். விமானத் தளம் மீது தாக்குதல்!

E-mailஅச்சிடுகPDF
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுராதபுரம் தாக்குதல் பாணியில் தலிபான் இயக்க தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கராச்சி நகரத்தில் அமைந்து இருக்கும் விமானப் படைத் தளம் ஒன்றின் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கரும்புலிகளின் பாணியில் 15 தீவிரவாதிகள் வரை விமானப் படைத் தளத்துக்குள் ஊடுருவிச் சென்றனர்.

பின் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தனர். மறைந்து இருந்து தாக்குதல்களை ஆரம்பித்தனர். அமெரிக்காவின் வான்வழிக் கண்காணிப்பு விமானம் ஒன்றை அழித்தனர்.



ஏவுகணைகளை சுட்டனர். பதில் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டு இருந்த கமாண்டோக்களோடு சண்டையிட்டனர்.

இவ்விமான தளம் விமானப் படையினர், கடல் படையினர் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.



தீவிரவாதிகளின் தாக்குதல் சுமார் எட்டு மணித்தியாலங்கள் வரை தாக்குதல் நீடித்து இருக்கின்றது. இத்தாக்குதலில் கடல் படையினர் ஐவர் கொல்லப்பட்டமையுடன் கடல் படையினர் ஒன்பது பேர் காயப்பட்டு உள்ளனர்.

விமானப் படைத் தளத்தில் இருந்த கட்டிடங்களில் ஒன்றையேனும் தீவிரவாதிகள் கைப்பற்றி இருக்கின்றனர். ஊடகங்களுக்கு கிடைத்து இருக்கும் தகவல்களின்படி ஏழு குண்டுவெடிப்புக்கள் நடததப்பட்டு இருக்கின்றன, பி - சி 03 ஓரியன் விமாங்கள் இரண்டு முற்றாக அழிக்கப்பட்டு இருக்கின்றன.

ஆயினும் படைத் தரப்புக்கு ஏற்பட்ட மொத்த இழப்புக்கள் சரியாக தெரியவில்லை.

காயப்பட்ட படையினரில் சிலர் அம்புலன்ஸ்கள் மூலமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



ஏராளமான அம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றன.

அல் குவைதா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழி வாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் போராளிகள் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை என்றும் அமெரிக்காவினுடனான பாகிஸ்தானின் நட்புக்கு இது நல்ல பாடமாக இருக்கும் என்றும் தலிபான் இயக்கப் பேச்சாளர் தெரிவித்து உள்ளார்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று பாகிஸ்தானிய அரசு அற்வித்து உள்ளது. தீவிரவாதிகளில் ஆறு பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர், நால்வர் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.



தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை மரணம்


தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார்.அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை, சென்னையில் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
திருச்சியில் இன்று காலை முத்துரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்னை திரும்பினார். திருச்சி பெரம்பலூர் மெயின்ரோடு, பாடாலூர் அருகே அவரது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அவரது கார் முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் மரியம் பிச்சை மரணம் அடைந்தார். 
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு அவர்களை எதிர்த்து போட்டியிட்டு 7,007 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மூன்று முறையாக எம்எல்ஏவுக்கு போட்டியிட்ட மரியம் பிச்சை, கடந்த சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனவர்.
பி.ஏ., வரலாறு பட்டதாரியான மரியம் பிச்சை திருச்சி சங்கிலியாண்டவுரத்தைச் சேர்ந்தவர். திரைப்பட வினியோகஸ்தராக இருந்த மரியம் பிச்சை திரையரங்கையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர். திருச்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மறைந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

ad

ad