புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

 மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அரசாங்கம்; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு 
அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.

    டெஸ்ட் அரங்கில் சங்ககரா 34-வது சதம் இலங்கை அபார தொடக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் சங்ககரா சதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 34-வது சதம் இதுவாகும். இதன் மூலம், சர்வதேச டெஸ்டில் 34 சதம் அடித்த சுனில் கவாஸ்கர்

பிரணாப்பை பிரதமர் ஆக்க மறுத்த சோனியா: மோடி

பாஜக பிரதமர்  வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. அதில் மோடி பேசியதாவது:
மருத்துவர் சிவமோகன்-இராணுவம் வாய்த்தர்க்கம்!- முல்லை. வற்றாப்பளையில் சம்பவம்
வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை நடத்த தயாராகி வருகின்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற இராணுவப்புலனாய்வாளர்களால்
போரின் பின்னர் புதைத்த மனித எச்சங்களை அழித்த இராணுவம்-புதிய வீடியோ.
போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடாவில் பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்களை  அழைக்கும் விசா திட்டத்துக்கான எண்ணிக்கை எல்லை இப்போது நிறைந்து விட்டதால் அந்த முறை தற்போதைக்கு மூடப் பட்டுள்ளது 
Chris Alexander
அண்மையில் சில வாரங்களுக்;கு முன்பாக பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ரோரைக் கனடாவிற்குள் குடியேற அழைக்கம் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டமானது 2014ம் ஆண்டிற்கான நிர்ணயத் தொகையை எட்டிவிட்டதெனவு
மதுபோதையில்  மணமகன்: அட்சதை போட வந்தவர் மணமகனாகி மணப்பெண்ணை  கைப்பற்றினார் 

சேலம் மாவட்டத்தில் குடிகார மாப்பிள்ளையை தூக்கி வீசிய மணமகளுக்கு திருமணத்திற்கு வந்திருந்த நபர் ஒருவரோடு திருமணம் நடந்துள்ளது.
ஜெயலிதாவின் சாபத்துக்கு உள்ளான  விஜயகாந்த் தனிமரமாக நிற்க போகிறாரா ?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தேமுதிக உருவெடுத்தது. அ தி மு க வை எடுத்த எடுப்பிலேயே சட்டப் பேரவையில் எதிர்க்க புறபட்டு இப்போது  ,அ தி மு க இன் சாபத்துக்கு உள்ளாகி விட்டது போல தனிமரமாக நிற்ற்கும் நிலை .
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் 2500 கோடி ரூபா
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் என 2500 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.2013ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுக்கான நிதியாண்டுகளுக்கான வருடாந்த நட்டம் 25000 கோடி ரூபாவாக இருக்கும் என சிவில் விமான சேவை அமைச்சர்
 இலங்கை முதல் இனிங்ஸில் 587 ஓட்டங்கள் : சங்ககார முச்சதம் 
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 587 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்; சாட்சியப்பதிவுகள் குறித்தும் கலந்துரையாடல் 
யாழ். மாவட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
 இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை; அவுஸ்திரேலியா அறிவிப்பு 
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அழகிரியை சந்திக்கிறார் ஸ்டாலின்
திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 9ம் தேதி மதுரை செல்கிறார்.  அன்றைய தினம் மதுரையில் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்கிறார் ஸ்டாலின்.
 துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டி?
தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பணம் கட்டி விருப்ப மனு பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம் 2 தொகுதிகளையும் தக்கவைக்க தி.மு.க. மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரி விலக்கு கேட்டுவழக்கு:  ஐகோர்ட் நோட்டீஸ்

‘ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
’’நடிகர் உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தயாரித்து உள்ளோம். இந்த
தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், அதிமுக புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. 
இதுதொடர்பாக அதிமுக தலைமை

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கனிமொழி-சரத்குமார்  திடீர் சந்திப்பு
மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழியை, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீர் வாபஸ்
கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றுவந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீரென நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அடுத்தகட்டப் போராட்டம் குறித்து இம் மாதம் 9-ஆம் தேதி முடிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள
பஞ்சாப் பொற்கோயில் மீதான தாக்குதல் - பிரித்தானியாவுக்கு தொடர்பு

1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.
இலங்கையின் மனித உரிமைமீறல்: சர்வதேச மன்னிப்பு சபைக்குச் சென்ற கமலேஸ் சர்மா
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதல்தடவையாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாலில் செட்டியை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது
படையினரின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சியில் அரசாங்கம்! தடயங்கள் அழிக்கப்படுவதாக அறிக்கை
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற  போர்க்குற்றங்களுக்கு  இலங்கை அரச படையினரே பொறுப்பு என்றும், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்த தீர்மானம் தோல்வி
அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்தத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள அமெரிக்க பிராந்திய இராணுவ முகாமின் ஒரு குழுவினை வன்னியில் நிலைநிறுத்த வட மாகாணசபை நிர்வாகம் முயற்சித்துள்ளது.
பலூனின் சுதந்திரம்-ஆக்கம்: அ.பகீரதன்

காற்றடைக்கப்பட்ட பலூன் 
ஊசிக்காக காத்துக் கிடக்கிறது….

ஊசிகள் சில இன்னும்
தூண்டில் ஊசிகளாக 

புலம்பெயர் தமிழ் இன இளைய சமுதாயமே இதோ உங்களுக்கு ஓர் நற்செய்தி எண்கள் இணையத்தில் ஒரு செய்தியை நீங்கள் அழுத்திய பின்னர் வலப்பக்கத்தில் உள்ள மொழிபெயர்ப்பு அலகின் மூலம் உங்களுக்கு பரிச்சயமான வேறு மொழிகளில் இந்த செய்தியை மொழிபெயர்த்து படிக்க கூடிய வசதியை புதிதாக செய்துள்ளோம் உதாரணத்துக்கு அரபு ஆங்கிலம் பிரஞ்சு டொச் டச் ஹிந்தி ஆகிய மொழிகளின் ஆக்கம் இங்கே உள்ளன 
தந்தி தொலைக்காட்சி நடத்திய அடுத்த  இந்திய தேர்தல் பற்றிய  கருத்துக் கணிப்பு முடிவுகள் தமிழ்நாட்டில் பாரிய  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தமிழ்நாட்டில் அ தி மு க வுக்கும் இந்திய அளவில் நரேந்திர மோடிக்கும் பாரிய செல்வாக்கு அலை வீசுவதாக தகவல்

1. அடுத்த பிரதமர் யார் ?
       நரேந்திர மோடி  77 வீதம்
       ராகுல் காந்தி 17 வீதம்
ஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும்; வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை 
news

இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை இந்­தியா ஆத­ரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவ­து­மில்லை. மாறாக நீர்த்துப் போகச் செய்யும் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் 
news

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இது குறித்து சட்டப்பேரவையில் நேற்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தி

சங்கக்கார, மஹேலவின் இணைப்பாட்டத்தால் இலங்கை அணி வலுவான நிலையில்

குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் இணைப்பாட்டத்தின் மூலம் பங்களாதே'{டனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது.
சிட்டகொங்கில் நேற்று ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியல் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்த டெஸ்டில் இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயத்திற்கு உள்ளாகியிருக்கும் ரங்கன ஹேரத் மற்றும்
முஸ்லிம்களின் கொலை: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை

புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்

வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்தமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக் குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை
லா லிகா கால்பந்து ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை
அய்ரோப்பாவின் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டியின் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது அட்லெடிகோ வீரருடன் ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ மோதிக் கொண்டார். இதனால், ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப் பட்டது. இந்த ஆட்டம் 1-1
சந் தோஷ் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதி சுற்றில் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஆந்தி ராவை வீழ்த்தி முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சுதந்திரத்தை அனுபவிக்கும் வடக்கு மக்களை பலிக்கடாவாக்க சர்வதேச குழுக்கள் முயற்சி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
* வடக்கு மக்களின் மனித உரிமைகள் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட போது அதனை மீளப்பெற்றுக் கொடுக்க எவரும் முன்வரவில்லை
2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை: டிகேஎஸ் இளங்கோவன்
2ஜி வழக்கில் திமுக மீதான பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 
மேலும், வெளியிடப்பட்ட ஆதாரங்கள் 2ஜி வழக்கிற்கு

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு யாரும் தயாராக இல்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
சென்னை ஐ.சி.எப்.பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.சி.எப். அம்பேத்கர்நகரைச் சேர்ந்த சேரன் மகன் விக்னேஷ்குமார் (23). இவர் மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விக்னேஷ்குமாருக்கு மது அதிகமாக அருந்தும்
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பதில்:
இலங்கையின் 66வது சுதந்திர தினம் இன்று! பிரச்சினைகளுக்கு தீர்வு வராதா என்ற ஏக்கத்துடன் தமிழ் மக்கள்
இலங்கையின் 66 வது சுதந்திர தின விழா இன்று செவ்வாய்க்கிழமை கேகாலை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த 66வது சுதந்திர தின விழா "உலகம் முழுவதும் தாய் நாட்டை வெற்றி பெறுவதற்கு ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. 
இலங்கைக்கு எதிராக இந்தியா ஜெனீவாவில் தனிப்பிரேரணை கொண்டு வரவேண்டும்!- திமுக
இலங்கைக்கு எதிராக இந்தியா தனிப்பிரேரணை ஒன்றை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் கோரியுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற குழு
ராஜீவ் கொலை வழக்கு: மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர்.
காங்கிரஸை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும்: மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
இலங்கைக்கு சாதகமாகச் செயற்படும் காங்கிரஸ் கட்சியை  ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,
யாழ் மற்றும் வெலிக்கடை சிறையிலிருந்து 1242 கைதிகள் விடுதலை
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், யாழ். சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாததால் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணத்தை கட்ட முடியாததனால் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண் கைதி உட்பட 9 கைதிகளை
ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெற நடவடிக்கை
எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ad

ad