புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

சிங்கள அரசு உரிமை தர மறுத்தால் 10 வயதிலிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆயுதம் பற்றி சிந்திப்பதை தடுக்க முடியாது: சி.சிறீதரன்
தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை
பயங்கரவாத புலனாய்வு பொலிசாரால் ஒன்றரை மணிநேரம் விசாரிக்கப்பட்டார் அரியநேத்திரன் எம் பி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இன்று பயங்கரவாத தடுப்பு புலானாய்வுத் துறை அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் - 2013


தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ) வழங்கப்பட்ட மக்கள் ஆணை !

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. இம் மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.
தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை இடைநிறுத்தியது சுவிஸ் 
 புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. 
 
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. 
 
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவின் அணுகுமுறை! எதிர்பார்ப்பில் மறுமலர்ச்சியினர்!

விருதுநகரில் அண்ணா பிறந்த நாள் மாநாட்டை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்துகிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணியினை நான்கு முறை பார்வையிட்டிருக்கிறார் வைகோ. 
தூத்துக்குடி விமானத்தில் தீப்பற்றியது! 2 எம்.எல்.ஏ.க்கள் தப்பினர்!
தூத்துக்குடியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அவசர அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். இதில், 2 எம்எல்ஏக்கள் உட்பட 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தமிழக முதல்வரின் வீட்டுக்கருகில் சுற்றித் திரிந்த இலங்கைப் பெண்: பொலிஸார் விசாரணை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கருகில் சுற்றித் திரிந்த இலங்கைப் பெண்ணொருவரை பாதுகாப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புலிகளின் தளபதி பால்ராஜின் உறவினர் மகசின் சிறையில் மரணம்! கொலை என மனைவி சந்தேகம்
கொழும்பு மகசின் சிறையில் இருந்து நேற்று முன்தினம் தொலைபேசியில் சகஜமாகப் பேசிய தமிழ் அரசியல் கைதி ஒருவர் இறந்துவிட்டதாக நேற்று திங்கட்கிழமை காலை தெரிவிக்கப்பட்ட தகவலால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தம்புள்ளை காளி கோயிலின் விக்கிரகத்தை உடைத்தெறிந்த பிக்குகள்
தம்புள்ளையில் உள்ள காளி கோயிலின் மூலவிக்கிரகம் நேற்று இரவு பௌத்த அடிப்படைவாதிகளால் எடுத்துச் செல்லப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளது.உடைக்கப்பட்ட விக்கிரமகத்தின் பாகங்கள் வேறு இடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வேழமாலிதனும் பொன்காந்தனும் பொலிசாருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க மறுப்பு! சட்டத்தரணி தவராசா நீதிமன்றில் காட்டம்
2013ம் ஆண்டு தை மாதம் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனின், செயளாலரான பொன்காந்தனும்


தமிழ் இனத்தை விற்று பிளைக்கிறார் டக்ளஸ்; மாவை. எம்.பி. சாடல் 
தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார்.

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு செல்வார்களானால் இனவாதிகளும் அரசாங்கமுமே பொறுப்பு! த.தே.கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாட்டு கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தையும் மீள உருவாக்குவதற்கு நினைக்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் பூரண சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றினையே நாம் கேட்டிருக்கிறோம்.
முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன்!- தவராசாவுக்கு விக்னேஸ்வரன் சவால்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் என்று தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
23 வயது பெண், 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்
23 வயதான பெண் ஒருவர், 15 வயதான சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹிகஹாலந்த என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

177 கி.மீ. புளோரிடா கடலை நீந்தி 64 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை
177 கி.மீ. புளோரிடா கடலை நீந்தி 64 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை


அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார்.  

177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த
சுவிஸ் வீரர் பெடரர் அமெரிக்க  ஓபன் டென்னிஸ்  அரைக் காலிறுதிஆட்டதில் தோற்று வெளியேற்றம் .ஸ்பெயின் வீரர்டொம்மி   ரோப்ரோடோ இடம் 6.7,3-6, 4-6 என்றரீதியில் தோல்வி கண்டு வெளியேறி உள்ளார் 
எழுச்சிப்பாடகர் சாந்தன்  இப்போது கூட்டமைப்பு மேடைகளில் இசை மழை பொழிகிறார் 

தமிழீழ விடுதி எழுச்சி பாடகனாக இருந்து சிறை சென்று மீண்ட புங்குடுதீவை சேர்ந்த பிரபல பாடகர் எஸ் ஜி சாந்தன் சிலகாலமாக அரச துப்பாக்கி கலாசாரதில்கட்டுண்டு கிடந்தநிலை போய் இப்போதெல்லாம் கூட்டமைப்பின் பிரசாரத்துக்கு துணையாக இருந்துவருகிறார் .அண்மையில் கூட கூட்டமைப்பின் பிரசாரதுக்கென ஒரு கீதமொன்றினைப் பாடி இருந்தமை குறிப்பிடத் தக்கது


அண்ணா பிறந்தநாள் : சிறைவாசிகளை விடுவிக்க வைகோ கோரிக்கை

அண்ணா பிறந்த நாளையொட்டி, சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ நடவடிக்கையை தடுக்குமாறு சிரிய அரசு ஐ.நாவிடம் வலியுறுத்து

கடும் நடவடிக்கைக்கு அரபு லீக் அழுத்தம்
சிரியா மீதான யுத்த செயற்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சிரிய அரசு ஐ. நா. சபையை கேட்டுள்ளது. ஆனால் சிரிய அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரபு லீக், சர்வதேச சமூகத்தையு

ஆசியக் கிண்ண ஹொக்கிப் போட்டி: தென்கொரிய அணி சம்பியன்

ஆசியக் கிண்ண ஹொக்கிப் போட்டியில் இறுதிப் போட்டியில் 4 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி நடப்புச் சம்பியனாக தென்கொரிய அணி வெற்றி பெற்றது.

தாய்லாந்து மெய்வல்லுனர் போட்டி; இலங்கை வீரர்கள் பங்கேற்பு

தாய்லாந்தில் இன்று 03ம் திகதி முதல் 06 வரை நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொள்வதற்காக எட்டு வீர வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்
கச்சத்தீவை திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் : ஜி.கே.வாசன் 
தமிழர்களுக்கு விரோதமான செயலில் தொடர்ந்து ஈடுபடும் இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவை  திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவத்துள்ளார்.

அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் அவுஸ்திரேலிய பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை குறித்த சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

யாழில் சட்டவிரோத ஆயதங்களின் பாவனை அதிகரிப்பு : கபே அமைப்பு குற்றச்சாட்டு

வன்செயலற்ற தேர்தல் ஒன்றை யாழ். மாவட்டத்தில் நடத்த எதிர்பார்ப்பதாயின் சட்டவிரோதமாகவும், அனுமதியுடனும் வைத்திருக்கின்ற ஆயுதங்கள் அனைத்தும் கையளிக்கப்படவேண்டும்

மீண்டுமொரு போராட்டத்தை நாம் தூண்டவில்லை: விமலின் கருத்துக்கு சுரேஷ் எம்.பி. கண்டனம்

வடக்கில் பிரிவினைவாதத்தைத் தூண்டி எதிர்காலத்தில் மீண்டுமொரு போராட்டத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அவருடைய அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அமைச்சர்களுமே

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும்: கனிமொழி

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் 194 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதாக
முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயற்பட்டமைக்கு தமிழ் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிப்பு
இலங்கையில் பௌத்த பேரினவாத செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்
களுத்துறைச் சிறையில் தமிழ் அரசியல் கைதி மரணம்: அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலென ஆனந்த சங்கரி கண்டனம்
களுத்துறைச் சிறைச்சாலையில் இன்று காலை உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான பிரான்ஸிஸ் நெல்சனின் மரணத்திற்கு சிறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலே காரணம் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழில் மாணவிகளின் எதிர்காலத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கைகள் அதிகரிப்பு
பாடசாலை மாணவிகளின் எதிர்காலத்தையும் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தையும் திட்டமிட்டு சீரழிக்கும் நடவடிக்கைகள் யாழ். கோட்டைப் பகுதியில் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் மூலம் பலமுறைகள்
ஆளும் கூட்டணியிலிருந்து விலகப் போவதில்லை! மகிந்தவே எமது அரச தலைவர்: ரவூப் ஹக்கீம்
அரசாங்கத்தையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவையும் வலுவிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் நேற்று இடம்பெற்றுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன் ஊர்ப் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ தீர்வாக அமையும்!- அரசாங்கம்
சர்வதேசம் இலங்கை மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ என்ற தீர்வை பயன்படுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் பெற்ற ஆசிரியை கைது! புத்தளத்தில் சம்பவம்
போலி ஆவணங்களை தயாரித்து வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாவை கடனாக பெற்ற ஆசிரியை ஒருவரை புத்தளம் பிரிவு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
பதவி இல்லாத நேரத்தில் வெளியேறும் துரோகிகள் : அழகிரி ஆவேசம்
திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் மாரி என்பவரது இல்லத்திருமணம் மதுரையில் நடை பெற்றது.   முன்னாள் அமைச்சர் மு.க.ஆகிரி இத்திருமணத்திற்கு தலைமை
நரேந்திர தபோல்கர் படுகொலைக்கு எதிரான கண்டன கூட்டம்
மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திரா தபோல்கர் படுகொலையைக் கண்டித்தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். 
தமிழக மக்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டதா? :  கலைஞர்
உணவு பாதுகாப்பு சட்டத்தைத்  ஆதரித்தது குறித்து திமுக தலைவர் கலைஞர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காதல் கணவனை மீட்டு கொடுங்கள் : இளம்பெண் கலெக்டரிடம்  மனு 
   புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டை கிராமத்தைச் சேந்த இளம்பெண் பாண்டிச் செல்வி(22) என்பவர் திங்கள் கிழமை இரவு 7 மணிக்கு புதுக்கோட்டை  மனு மாவட்ட

ad

ad