புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2013

தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி வீரப்பன் கூட்டாளிகள் மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்புநாளை அவர்கள் தூக்கிலிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 1993–ம் ஆண்டு ஏப்ரல் 9–ந் தேதி மேட்டூர் அருகே பாலாறு என்ற இடத்தில் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில்

இரா­ணுவக்­ கட்­ட­ளைத் தள­­பதி மஹி­ந்த ஹத்­து­ரு­சிங்க இரா­ணுவச் செயற்­பா­டு­க­ளுக்கு அப்பால் இர­க­சி­ய­மாக ஆயு­தக்­கு­ழுவை நடத்­தி­ வ­ரு­­வ­தாகச் சந்­தே­கிக்­கின்றேன் என பிர­தான எதிர்கட்­சி­யான ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்தில் தெரி­வித்­தார்.
வலி.வ­டக்கு மக்கள் நடத்­திய உண்­ணா­வி­ரதப் போரா­ட்­டத்தில் இரா­ணு­வத்­தினர் நடந்­­துகொண்ட விதம் சிங்­க­ள மக்கள் உள்ளிட்ட முழு இலங்­கை­ய­ருக்­கும் அப­கீ­ர்த்­தியை

முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர்


இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.
யாழ்.புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் சண்டை நடப்பது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. அதே போன்று நேற்று இரவு இருவருக்கும் இடையில் ஆரம்பமாகிய சண்டை இன்று அதிகலைவரை நீடித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது ஒன்றரை வயது மற்றும் 6 மாதக் குழந்தையையும் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சித்துள்ளார்.
இதன் போது குறித்த இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளது. எனினும் தண்ணீரில் தத்தளித்த அக் குழந்தைகளின் தாய் மனம் மாறி அங்கிருந்து கற்பாறை ஒன்றினை பிடித்து உயிர் தப்பியுள்ளார்.
இரு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமான குழந்தைகளின் தந்தையும் தாயும் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சண்டேலீடர் செய்தியாளர் மீது துப்பாக்கிச்சூடு! உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு!

இலங்கையின் சண்டே லீடர் ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் பாராஸ் சௌகாட்டலி (Faraz Shaukatally) வெள்ளிக்கிழமை நள்ளிரவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையை வரவேற்கின்றோம்: மன்னிப்புச் சபை
இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற ஐ. நா. சபையின் மனித உரிமைப் பேரவையின்

வவுனியா புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் தோழியாக தமிழினி
வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கலைஞரின் முக நூலில் இருந்து எனது முகநூலு க்கு வந்த செய்தி 


விக்கிபீடியா என்ற மாபெரும் தேடல் தளத்தில் என்னால் எழுதபட்டுள்ள கட்டுரைய இங்கே தருகின்றோம்
நன்றி விக்கிபீடியாhttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D#.E0.AE.87.E0.AE.AF.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.A9.E0.AE.B0.E0.AF.8D

மாறுதடம் திரைப்படத்தின் இயக்குனர் சக.ரமணன் பற்றி சில வரிகள்  


                                                  சத்தியநாதன் ரமணதாஸ்
ஈழத்தின்  மாவட்டத்தின் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட ரமணன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமானிய மகா

வித்தியாலயத்திலும் உயர்கல்வியை புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் கற்றார் .மிக இளம் வயதில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த இவர் மேலதிக கல்வியை சுவிசில் பெற்ற பின்னர் இசையில் நாட்டம் கொண்டு வயலின் இசைக்கருவியை முறைப்படி கற்று தேறினார் .பின்னர் கலைத்துறைக்குள் புகுந்து பல சாதனைகளை புரட்டி போட்டார் .நாடக கலையை அறிந்து தெரிந்து கொள்ள அவா கொண்டு புறப்பட்டவர் இன்று சுவிசில் மட்டுமல்ல ஐரோப்பா எங்கணும் சிறந்த நாடக வாதி என்ற முத்திரையை பதித்துள்ளார் .பழைய தமிழ் நாடக முறைமைகளை மாற்றி புரட்சி செய்தார்.மேற்கத்தைய நவீன நாடகவியலை முறைப்படி  கற்க ஆரம்பித்தார்,காட்சிப்படுத்தல் ,ஒப்பனை மேம்படுத்தல் ,மேடை அலங்காரம் ,எளிமையான வழிமுறைகள் ,பின்னணி இசைப்படுத்தல் .நவீன ஒளி அசைவு தோற்றுவாய் ,என் அத்தனை புதுமைகளையும் புகுத்தி தமிழ் நாடக உலகை மேம்படுத்தினார்.இவற்றுக்கு துணையாக நடக்க காவலர் தாசியஸ் அன்டன் பொன்ராஜ் பாஸ்கரன் போன்றோரை ஒருங்கிணைத்து நாடகப் பாசறைகளை ஏற்படுத்தினார் அங்கே  பல புதிய நடிகர்களை  உள்வாங்கி  பயிற்சி பட்டறைகளில் மெருகேற்றினார்.அத்தோடு நாட்டு கூத்து.ஓரங்க நாடகம் ,இசைவழி நாடகம் தெருவழி நாடகம் என பலவகை கலைப்படைப்புகளை பிரசவித்தார்.ஜெனீவ ஐ நா  சபை முன்றல்பேரணிகள்  போன்ற தாயக நிகழ்வுகளை தனது தமிழுணர்வு மிக்க படைப்புக்களால்  காலத்துக்கேற்ற கலை வெளிப்பாடுகளினால் எழுச்சிப் படுத்தினார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு  ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக நீண்ட  காலம் செயல் படும் ரமணன் அதன் நிகழ்வுகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்ற முன்னின்றவர் .ஒன்றியத்தின் மேடைகளிலும் பண்டாரவன்னியன் என்ற சரித்திர நாடகத்தையும் அந்த ஆல மரத்தடியில் என்ற இலட்சிய நாடகத்தையும் அரங்கேற்றினார்புங்கைய்யூர் எஸ் ரமணன் என்னும் புனைபெயரில் இவரது நாடகங்கள் ஏராளம்  ஐரோப்பா எங்கணும் மேடையேறி உள்ளன முக்கியமாக மேட் இன் ஸ்ரீலங்கா .இக்கு அக்கு பச்சை போன்றவை குறிப்பிடத்தக்கன.குறும்பட முழு திரைப்பட தயாரிப்பு  இயக்கம் நடிப்பு என்பவற்றிலும் உள் நுழைந்த ரமணன் பூப்பெய்தும் காலம் என்னும் சிறந்த திரைப்படத்தை உருவாக்கி இருந்தார் .இன்னும் தமிழக  திரைப்படமான அஜித்தின் அசல் என்ற படத்திலும் நடித்துள்ளார் .பல நடிகர்களை இவர் பட்டை தீட்டி உருவாக்கிய பெருமைக்குரியவர்.இவரது செவ்விகள் படைப்புகளை ஒலிபரப்பாத  ஒளிபரப்பாத  எழுதாத தொலக்காட்சிகள் வானொலிகள் ஊடகங்கள் இல்லை எனலாம்

ஆக்கம்-சிவ-சந்திரபாலன்
_________________________________________________________________________________
இவர் நடித்து அல்லது இயக்கி மேடையேறிய படைப்புகள் 
நாடகங்கள் 
-------------------
மேட் இன் ஸ்ரீலங்கா 
சீர்கேடுகள் 
வீட்டில வில்லங்கம் 
இக்கு அக்கு பச்சை 
வெளிக்கிடடி மீனாட்சி 
பெத்தாலும் பெத்தேனடா 
நான் ஒரு கரப்பான் பூச்சி 
பண்டார  வன்னியன்   
அம்மையே அப்பா 
கடலம்மா 


மலையம்மா 
எரிமலை பூக்கள்
வில்லுப்பாட்டு
அந்த ஆல மரத்தடியிலே 
---------------------
புத்திமான் பலமாவான் 
சுவிஸ் திரைப்படம்
-------------------------- 
டாரியோ எம் 
மாட்லி இன் லவ் 
டெலிட்ராமா
--------------------
வணக்கம் 
சுவிஸ் தொலக்காட்சி விவரணப்படம் 
-----------------------------------------------------
இன்றைய ஈழம்  எஸ் எப் 1 தொலைக்காட்சி 


 நாட்டுக்கூத்துகள் 
வீரன் வில்லியம்ஸ் தெல்
காத்தவராயன் 

குறும்படங்கள் 
முடிவல்ல 
பூப்பெய்தும் காலம் 
தமிழக திரைப்படம் 
அசல் (நடிகர்)
மன்மதன் அம்பு (தொழில் நுட்பம் )

புங்குடுதீவில் இளம்பெண் பச்சிளம் குழந்தைகளை கிணற்றில் எரிந்து கொலை .அவரது தற்கொலை முயற்சி தோல்வி 

புங்குடுதீவில் இந்த இளம்பெண்  தனது கணவனோடு கோவித்து கொண்டு தனது 6 மாத,18 மத குழந்தைகளை  கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை  செய்ய முயன்றுள்ளார்..குழந்தைகள் இறந்து விட  அவர்  மட்டும் ஒரு கல்லில் பிடித்தவாறு தப்பித்து கொண்டார் . காவல்துறையினர் இவரையும் இவரது கணவரையும் கைது செய்துள்ளனர் 

ad

ad