-
25 அக்., 2023
பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்குள் மட்டுப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எந்த தீர்வும் கிட்டாது!
பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வும் கிட்டாது. மாறாக இவ்விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதன் மூலமே பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
சம்பந்தன் பதவி துறக்க வேண்டும்!- ஆப்பு வைத்தார் சுமந்திரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு நடைமுறை அரசியலில் பங்களிப்புச் செய்ய முடியாதிருப்பதனால் அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார் |
திருகோணமலையை பௌத்த மயப்படுத்த துரித நடவடிக்கை!
திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட கால திட்டம். இப்பொழுது அது துரித கதியில் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். |
முல்லைத்தீவில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைப்பு! - கணவன் கைது
முல்லைத்தீவு - நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சடலம் மீட்கப்பட்டுள்ளது |
ஆலயத்தில் பொங்கல் வைத்த மூதாட்டி வாகனம் மோதி மரணம்!
யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் பலியானர். நீர்வேலி, இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதியது |