இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பில்
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது,
அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?
இதற்குப் பதிலளித்த கவிஞர்,
நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.
இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.