புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2011
கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

First Published : 18 May 2011 02:36:51 AM IST

Last Updated : 18 May 2011 09:31:31 AM IST
மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.
 "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
 தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
 "பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
 ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.
 1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.
 எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
 1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.
 ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
 காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
 காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.
 ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
 தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.
 இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!
 கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.
 நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.
 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
 1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
 பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
 1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
 அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.
 தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.
 அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
 நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?
 தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?
 இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?
 முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!
 உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.
 திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.
 ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.
 உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.
 மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?
 கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.
 அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.
 பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.
 தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?
 ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?
 ""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
 கருமமே கட்டளைக் கல்''                                                                                     கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்த சாமியார் கைது

உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷார் நகரைச் சேர்ந்த சாமியார், சாது வினோத் என்கிற விஸ்வந்த்ரானந்த். கல்லூரி மாணவி ஒருவர், உடல் நலக்குறைவு காரணமாக அந்த சாமியாரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றார்.
ஆனால், நோயை குணப்படுத்துவதாகக் கூறி, கடந்த 10 மாதங்களாக அந்த மாணவியை சாமியார் கற்பழித்து வந்தார். மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ படங்களையும் அவர் எடுத்து வைத்திருந்தார்.


இதுபற்றிய புகாரின் பேரில் சாமியார் சாது வினோத் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறினார்.

ஆனால், இந்த தகவலை மாணவி மறுத்தார். இதே போல், அவரிடம் சிகிச்சை பெற வந்த மற்றொரு பெண்ணையும் சாமியார் கற்பழித்து இருந்தது தெரியவந்தது.
 பொய் வாக்குமூலம் அளிக்க ரஞ்சிதாவுக்கு ரூ 20 கோடி: நித்யானந்தா புகார்

First Published : 18 May 2011 01:09:23 PM IST

Last Updated : 18 May 2011 02:37:02 PM IST
திருவண்ணாமலை, மே.18: தனக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க ரூ 20 கோடியும், எம்எல்ஏ சீட்டும் தருவதாக நடிகை ரஞ்சிதாவிடம் பேரம் பேசியுள்ளதாக நித்யானந்தா புகார் கூறினார்.
இதுதொடர்பாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. நான் இருப்பதாக வெளியிடப்பட்ட சிடியும் போலியானது.
அந்த சிடியைக் காட்டி என் பக்தர்களிடம் பணம் பறித்தவர்களை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டுவேன்.
என் மீது வழக்கு போட்டவர்கள், ரஞ்சிதாவிடம் எனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். அதற்காக ரூ 20 கோடியும், எம்எல்ஏ சீட்டும் தருவதாக பேரம் பேசி உள்ளனர். ரஞ்சிதா அதற்கு உடன்பட மறுத்துவிட்டார். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய் என்பதை நிரூபித்துவிட்டு தமிழகம் முழுவதும் மக்களிடம் நியாயம் கேட்டு பாதயாத்திரை செல்வேன்.
மத பிரசாரகர்கள் மீதும், ஆன்மிகவாதிகள் மீதும் பொய் பிரசாரம் செய்தவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். நாத்திகத்தின் காரணமாக போதை, மன அழுத்தம், இறப்பு போன்றவை ஏற்படும். இது தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது.
இவ்வாறு நித்யானந்தா தெரிவித்தார்.
நெதர்லாந்தில் வாழும் யாழ்ப்பாணத்து இளவரசன்

E-mailஅச்சிடுகPDF
இலங்கையில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முடிக்கு உரிய இளவரசர் நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகின்றார்.

இவர்தான் இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜா. 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இவரின் மூதாதையர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள்.

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளின் ராஜ வம்சம் முதலாம் குலங்கை செகராசசேகரனுடன் ஆரம்பிக்கின்றது. அரசதானியாக நல்லூர் இருந்து வந்து உள்ளது.

யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரால் 1621 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. ஆனால் ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சம் இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மூலமாக இன்று வரை நிலைபெற்று நிற்கின்றது.யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளின் வாரிசாக பிரகடனம் செய்துகொண்டார் இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜா.யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்து இளவரசர் என்பதற்கான ஆதாரங்கள், சான்றுகள் ஆகியவற்றை வைத்திருக்கின்றார்.

இவர் 1961 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில் பிறந்தவர்.2003 ஆம் ஆண்டு தொடக்கம் அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நடத்தி வருகின்றார். உலகத்தின் அரச குடும்பத்தினர் பலருடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகின்றார்.
தூதுவிடும் சோனியாவைத் துரத்தி அடியுங்கள்! - சிலிர்த்துக் கிளம்பும் சீமான்
[ புதன்கிழமை, 18 மே 2011, 02:45.44 AM GMT ]
''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு காங்கிரஸை அறைவேன். எங்களின் உரு அறுத்த காங்கிரஸைக் கருவறுப்பேன்!'' - திருப்பி அடித்த சீமானின் வெறிகொண்ட வேகம் காங்கிரஸ் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 63 தொகுதிகளில், 5 தொகுதிகளில் மட்டுமே தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கரையேறி இருக்கிறது காங்கிரஸ்!!
இது தனிப்பட்ட சீமானுக்கோ, 'நாம் தமிழர்’ கட்சிக்கு மட்டுமோ, கிடைத்த வெற்றி அல்ல. தமிழர் என்கிற இனத்துக்கும், இன மானத்துக்கும் கிடைத்த வெற்றி. இருட்டு, திருட்டு என எண்ண முடியாத அளவுக்கு இங்கே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்... ஈழத் துயரமும் இந்தியக் கடல் எல்லையில் மீனவர்கள் பட்ட துயரமுமே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைத் துரத்தி அடித்திருக்கிறது! என்கிறார் சீமான்.
''ஸ்பெக்ட்ரம் என்கிற ஒற்றை வார்த்தைதான் தி.மு.க. கூட்டணியை இந்த அளவுக்கு வீழ்த்தியதாகச் சொல்கிறார்களே?''
கிடையாது! ஸ்பெக்ட்ரம் பிரசாரத்தையும் தாண்டி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. 'ஈழத் தமிழர் படுகொலையும் சீமானின் பரப்புரையும்தான் ஒரே நாளில் புதுச்சேரி அரசியலைப் புரட்டிப்போட்டது!’ என புதுவை முதல்வர் ரங்கசாமி சொல்லி இருக்கிறார். ஈழத்தை நாசம் செய்த காங்கிரஸோடு கூட்டணிவைக்க இனி எந்தக் கட்சியும் முன்வராது. அப்படியே கூட்டணி வைத்தாலும், ஈரக்குலையில் தீப்பிடித்தவனாக இருக்கும் தமிழன் அவர்களை நசுக்கி எறியத் தயங்க மாட்டான்! தோற்றவர்களுக்கு மட்டும் அல்ல... வென்றவர்களுக்கும் இந்தப் பாடம் பொருந்தும். 'ஈழம் குறித்த அரசியல் எல்லாம் இனி எடுபடாது’ என்கிற வார்த்தைகளை மேற்கொண்டு தமிழகத்தில் எவரும் உச்சரிக்க முடியாது!
''வெற்றிக்குப் பிறகு ஈழம் குறித்து பேசிய ஜெய​லலிதா, 'மத்திய அரசால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்’ எனச் சொல்லி இருக்கிறார். இதைத்​​தானே முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சொன்னார்?''
ஜெயலலிதா மீது நாங்கள் எவ்வித எதிர்பார்ப்பையும் வைக்கவில்லை. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு. அதற்காக இந்திய ராணுவத்தை அனுப்பிவைக்கவும் தயங்க மாட்டேன்!’ எனச் சொன்னவர் ஜெயலலிதா. உடனே, 'இது ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம்!’ எனப் பலரும் கூச்சல் கிளப்பினார்கள். இந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈழம் குறித்து அவர் பெரிதாகப் பேசாதது உண்மை. ஆனால், வாக்குப் பதிவுக்குப் பிறகு, 'ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக நிறுத்த இந்தியா முன்வர வேண்டும்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இவற்றைச் செய்யாவிட்டால், போரை நடத்தியதே இந்தியாதான் என்கிற குற்றச்சாட்டை நம்ப வேண்டி இருக்கும்!’ என உரக்கச் சொன்னார் ஜெயலலிதா. அபரிமித வெற்றியை அடைந்தபோதும், 'ஈழ விடிவுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்!’ என்றும், 'ராஜபக்ஷேவின் போர்க் குற்றம் கண்டிக்கப்பட வேண்டியது!’ என்றும் ஜெ. சொன்னார். சட்டமன்றத்தில் இதனையே முதல் தீர்மானமாக அவர் இயற்றினால், புதை மணலாகப் புழுங்கிச் சாகும் தமிழ் மக்களின் வாழ்வில் முதல் மழை விழுந்ததுபோல் இருக்கும்!''
''காங்கிரஸை மூர்க்கமாக எதிர்ப்பவர் நீங்கள். ஆனால், ஜெ. வெற்றி பெற்ற உடனேயே சோனியா டீ பார்ட்டிக்கு அழைத்திருக்கிறாரே?''
மரியாதை ரீதியான அழைப்பு. ஆனாலும், காங்கிரஸைத் தமிழ் மக்கள் துடைத்து வீசி இருக்​கிறார்கள் என்பது தமிழகத்தின் புதிய முதல்வருக்கு நன்றாகத் தெரியும். இன்றைய நிலையில் அ.தி.மு.க-வுக்கு சோனியாவின் தயவு தேவையே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸைத் தவிர்த்து​விட்டே, பல இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. வலை விரிப்பதும் ஈரல் குலை அறுப்பதும், சோனியாவின் வழக்கமான வேலைதான். இத்தகைய அழைப்புகளை எல்லாம் விரட்டி அடித்து, ஈழத் தமிழர்களின் விடிவுக்கான அழுத்தத்தை ஜெ. கொடுக்க வேண்டும்!
''தமிழ் உணர்வாளர்கள் பலர் மீது முந்தைய ஜெய​லலிதா அரசில் நடவடிக்கை பாய்ந்தது... இப்போது உங்களை நோக்கியும் அத்தகைய அதிரடிகள் பாய்ந்தால்...?''
எதுவாக இருந்தாலும் மகிழ்வோடு எதிர்கொள்வோம். கடந்த ஒன்றரை வருடங்களில் ஐந்து முறை சிறைக்குள் என்னைத் தள்ளியது தி.மு.க. அந்த சிறைவாசம் என்னை சிதைக்கவா செய்தது? உணர்வுகளையும் உத்வேகத்தையும் விதைக்கவே செய்தது. மக்களுக்கான போராட்டங்களை ஓர் அரசு நசுக்குகிறது என்றால், அது மக்கள் விரோத அரசு என்றுதானே அர்த்தம். எல்லாவற்றையும் தாண்டி, 'ஜெ. நல்லாட்சி தருவார்’ என நம்பலாமே!
''முதியவர் என்றும் பாராமல் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையாக முழங்கி, அவரை நோகடித்துவிட்டோமே என்கிற வருத்தம் இருக்கிறதா?''
அவர் பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும்... என்னைப்போன்ற தமிழ்ப் பிள்ளைகள்தான் அவரைத் தலையில் வைத்துக்கொண்டாடினோம். கண் முன்னே நடந்த அத்தனைத் துயரங்களையும், ஆட்சிக்காகவும் கட்சிக்காகவும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்​ததை மன்னிக்கவே முடியாது!
போரைத் தடுக்க முன்​வராவிட்டாலும், முத்துக்குமார் தொடங்கி எத்தனையோ இளங்குருத்துகள் தெருவில் இறங்கிய போராட்டங்களை ஒடுக்காமலாவது இருந்து இருக்கலாம்.
தன் குடும்பத்துக்காக அவர் இன்றைக்கு இழந்த ஆட்சியை, தமிழ்க் குடும்பங்களுக்காக அன்றைக்கே இழந்திருந்தால், வரலாறு அவரை வணங்கி இருக்கும். ஈழக் கோரங்களைத் தடுக்க எதையுமே செய்யாத அவர், கனிமொழி கைதைத் தடுக்க உயர்நிலைக் குழுவைக் கூட்டி, 'என் துணைவியின் வீட்டுக்குப் போய் மூன்று நாட்களாகிவிட்டது!’ எனக் கலங்கினார்.
வீட்டுக்குப் போய் மூன்று நாட்கள் ஆனதற்காக வருந்தியவர், எம் மக்கள் நாட்டுக்குப் போய் 30 வருடங்களாகிவிட்டதை நினைக்கத் தவறிவிட்டாரே!
நன்றி: ஜூனியர் விகடன்                                                                                                                                 2009 மே மாதம் இறுதி நாட்கள் - பேரூழிப் பேரழிவு நடந்து இரண்டாண்டாகிறது
[ புதன்கிழமை, 18 மே 2011, 08:24.41 AM GMT ]
2009 மே மாதம்., இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. உலகமே பார்த்துக் கொண்டிருக்க ஒரு இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அழிவுக்கு முதல் மூன்றாம் நாள் பலர் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கியை ஏந்தியவர்களும் எல்லாவற்றையும் இழந்த மக்களும் திசையறியாது நிர்க்கதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் யாராலும் மறக்க முடியாத மே மாதம். கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து வந்த யுத்தம் உக்கிரமடைந்து கொண்டிருந்த காலம். கொத்துக் குண்டுகளும் விமானங்களும் எறிகணைகளும் துப்பாக்கிளும் பேசிய காலம். எங்கள் காலத்தில் தான் அந்தப் பேரூழி நடந்தது. அந்த பேரூழி நடந்து முடிந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. இப்பொழுதும் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத கொடுமையான நாட்களாக வன்னிப் போரின் இறுதி நாட்கள் மிக உக்கிரமாய் எரிகின்றன.
ஈழத்தில் நடந்தது என்ன என்பது உலகத்திற்கே தெரியும். ஈழத்தில் மக்கள் ஏன் போராடினார்கள், போராளிகள் ஏன் துப்பாக்கி ஏந்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அறுபதாண்டு கால அரசியல் போராட்டமும் முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டமும் ஈழப் போராட்டத்திற்கு வழங்கிய கனதி என்பது நான்காம் நட்ட ஈழப் போராட்டத்தில் மிக பிரமாண்டமாக வளர்ந்திருந்தது.
தமிழ் மக்கள் காலம் காலமாக வாழந்து வந்த நிலப்பகுதி, அவர்களுக்குரிய அதிகாரங்கள், தங்களை நிர்ணயிக்கிற உரிமை என்று அடிப்படையான உணர்வுகளிலிருந்து ஈழப் போராட்டம் வெடித்தது. ஆனால் ஒரு போராட்டத்தை அதன் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டிருப்பது என்பது மக்களின் மனங்களில் பல விம்பங்களை உருவாக்கியிருக்கின்றன.
ஒரு குழந்தையை கொன்று போடுவதைப் போல, அழகான பளபளப்பான ஒரு கனவைக் கொன்று போடுவதைப்போல, தளைத்து கிளை பரப்பிய ஒரு உயிரை கொன்று போடுவதைப் போல ஈழப் போராட்டம் கொன்றழிக்கப்பட்டது. உலகம் இதை எப்பொழுதோ எதிர்பார்த்திருந்தது. உலகம் இதை எப்பொழுதோ திட்டமிட்டிருந்தது.
இரத்தத்திற்கும் சதைகளுக்கும் அலையும் பெரு அதிகார உலகம் இப்படித்தான் ஒடுக்கப்படுகிற மக்களின் போராட்டக் களங்களை உருமாற்றி சிதைத்து விடுகின்றன. ஏன் இந்த மக்கள் போராடினார்கள் என்பதை உலகம் தெளிவாக அறிந்திருந்த பொழுதும் ஏன் இந்த மக்கள் அழிக்கப்படக்கூடாது என்பதை நிகழ்த்திக் காட்டிருக்கிறார்கள்.
எரியும் அந்த நாட்களில் எமது மக்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் அவலக் குரல் எழுப்பினார்கள். இரத்தமும் சதையுமாக சிவப்பு நிலமாக மாறிக்கொண்டிருந்த தாய் நிலத்திலிருந்தும் புலம்பெயர்ந்த நிலத்திலிருந்தும் தாய் தமிழகத்திலிருந்தும் எத்தனை விதமாக இன அழிப்பு யுத்தத்தை நிறுத்தும்படி எமது மக்கள் கோரிக்கை விடுத்தார்கள். தங்களை எரித்து சாம்பாலாக்கியபடி கோரிக்கை வைத்தார்கள். உண்ணா விரதம் இருந்தார்கள். தெருக்களில் இறக்கி மாபெரும் போராட்டங்களை நடத்தினார்கள். எல்லோருக்கும் அறிக்கை கொடுத்தார்கள். கடிதம் எழுதினார்கள். காயப்பட்டு குற்றியிராகக் கிடந்து கொண்டு பலர் அழுதழுது கேட்டார்கள். காப்பாற்றுங்கள் என்று. யார் வந்தார்கள் எங்களை காப்பாற்றுவதற்கு? இந்தியா இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்த நிலங்களைப் பார்வையிட வந்தது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பேதமற்ற வகையில் ஒழிக்கப்பட்டார்கள். குறிப்பிட்ட நிலப் பகுதி ஒன்றுக்குள் பல லட்சம் மக்கள் குவிந்து தவித்தார்கள். பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவிக்கப்பட்டு யுத்த வலயங்களாக்கப்பட்டன. உணவில்லை, மருந்தில்லை, இருக்க இடமில்லை என்று அலைந்தார்கள். பதுங்குகுழிகளை வெட்டிக் களைத்துப் போய் ஓடினார்கள். உறவுகளை பலிகொடுத்து உறவுகளை தொலைத்து அலைந்தார்கள். யாருக்குக் கேட்கவில்லை இந்த மக்களின் அவலக்குரல். உலகமெங்கும் பெரும் சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. குழந்தைகளின் கதறல் நிலத்திற்கடியிலிருந்து ஒலித்தது. இரத்தம் முகங்களில் வழியும் மக்களின் குரல் ஒலித்தது. ஈழத் தமிழ் மக்கள் மீது இரக்கமற்ற வகையில் போரை தொடர்ந்து திணித்து சிங்கள மேலாதிக்கத்தை அரசாங்கம் நிலை நிறுத்த கொன்றழித்த மக்களுக்கு என்ன நீதி கிடைத்திருக்கிறது?
போராளிகள் மீது உலகமே இணைந்து யுத்தத்தை தொடுத்து அவர்களை நிலை குலைய வைத்தது. சரணடையுங்கள் என்று சொல்லி நிராயுதபாணிகளை கொன்றழித்தார்கள். பெண் போராளிகளை புணர்ந்து கொன்றார்கள். போராளிகளை, சிறுவர்களை, பெண்களை சித்திரவதை செய்தார்கள். எத்தனை போரை முகவரி தெரியாமல் புதைத்து விட்டார்கள்? இந்தக் கணக்குகளுக்கு எல்லாம் என்ன தீர்வு? யார் அதை தரப் போகிறார்கள்? யுத்தகளத்தில் போராளிகளை வெள்ளைக் கொடி ஏந்தியவாறு வரச் சொல்லி அறிவிக்கப்பட்டு சரணடைந்தவர்கள் கொன்றழிக்கப்பட்ட இரகசியங்கள் இன்னும் அம்பலமாகின்றன. பலர் இன்று வரை காணாமல் போயிருக்கிறார்கள். என்ன நடந்தது என்ற தகவல் தெரியாது உறவுகள் அலைகின்றார்கள்.
வன்னிப் போரின் இறுதி நாட்களில் இறுதி யுத்த களம் சிறிய மைதானமாகிக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை கோரி யுத்தத்தை நிறுத்தி சரணடைய விரும்பினார்கள். எஞ்சிய மக்களை காப்பாற்ற அவலக் குலர் எழுப்பினார்கள். ஆனால் இறுதி வரை யுத்தமாடி மக்களையும் போராளிகளையும் கொன்று மாபெரும் யுத்த வெற்றி ஒன்றை அறிவிக்க அரசாங்கம் விடாப்படியாய் நின்றது. இறுதி நாட்களில் கட்டம் கட்டமாக கொல்லப்பட்டவர்களின் பெயர்களை அறிவித்து. சிங்கள மக்களிடத்தில் வன்னிப் போரில் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் அரசியலாகி களிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களின் வீழ்ச்சியையும் தமிழர் நிலத்தின் வீழ்ச்சியையும் அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
வன்னி யுத்தகளம் என்பது போர்க்குற்றங்கள் நிறைந்த களமாகி குரூரமானது. இரக்கமற்ற வகையில் இலங்கை இராணுவப் படைகள் தமிழ் மக்களையும் போராளிகளையும் கொன்றது. கொல்லப்பட்ட பிணங்களையும் கிழித்து மகிழ்ந்தது. காயங்களை கடித்து சுவைத்தது. யுத்த தர்மங்களை மீறி, வெளிப்படையான பிரச்சாரங்களை மீறி மிக இரகசியமாக இலங்கை இராணுவப் படைகள் தமது ஜனாதிபதியின் அனுமதியில் தமது தளபதிகளின் கட்டளையில் பல்லாயிரம் ஈழத்து மக்களை கொன்றழித்த களமாகி இரத்தம் நனைந்த நாட்களாய் கொதிக்கின்றன. சுற்றிச் சுற்றி அப்பாவி மக்களையும் மாபெரும் போராட்டத்தையும் மிகக் கொடூரமாக கொன்றழித்த களம் என்கிற மறக்க முடியாத துயரத்தை தந்திருக்கிறது.
சங்ககாலப் போரை படித்திருக்கிறோம். சோழர்களின் போரை படித்திருக்கிறோம். முதலாம், இரண்டாம் உலகப் போரைப் பற்றி புகைப்படங்களில் பார்த்திருக்கிறோம். படித்திருக்கிறோம். போராடத் தொடங்கிய காலம் முதல் விமானங்களும் குண்டுகளும் துப்பாக்கிகளும் இராணுவ வண்டிகளும் ஈழத் தமிழர்களின் வாழக்கையை அச்சுறுத்தி வந்திருக்கின்றன.
ஆனால் எல்லோரும் பார்த்திருக்க யுத்த பேரூழி எங்கள் மண்ணில் நடந்தது. சிங்கள அரசு நிகழ்த்திய போரை ஈழத்து மக்கள் கடந்திருக்கிறார்கள். ஊழிப் பேரழிவு எங்கள் மண்ணில் நடந்தது. ஈழத் தமிழர்களின் நெஞ்சில் மே மாதம் பொறுக்க முடியாத சோகத்தை, அரசியல் வெறுமையை, வரலாற்றுத் துயரத்தை வழங்கிய நாட்களாகவும காலமாகவும் இடராகிறது. ஈழ துக்க தினமான இந்த நாட்கள் உலகத் தமிழர்கள் அனைவரிடத்திலும் நடந்த யுத்தப் பேரூழிக்கு எதிரான போராட்டத்தையும் ஊழிப் பேரழிவில் இறந்தவர்களுக்கு என்ன அஞ்சலி செய்ய வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தி நிற்கின்றன.
கிளிநொச்சியிலிருந்து கபிலன்                                                                                                                        இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடு உலகில் வலுக்கிறது
[ புதன்கிழமை, 18 மே 2011, 02:11.46 AM GMT ]
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிரான போக்கு உலக அரங்கில் அதிகரித்து வருகிறது. அந்த அறிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ள போதும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தே பெரும்பாலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆதரவு
இதுவரையில் சீனா, ரஷ்யா, மாலைதீவு ஆகிய நாடுகள் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றித் தலையிட்டுக் குழப்பக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டது ஐ.நா. அறிக்கையே கிடையாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
அறிக்கை ஏன் இப்போது விடப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மாலைதீவு ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்ப்பு
உலகெங்கும் 35க்கும் மேற்பட்ட நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்துள்ளதுடன் இலங்கை அதனடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு வரப்பிரசாதம் என்று தெரிவித்துள்ளது பிரான்ஸ். இலங்கை அதிகாரிகள் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் அது கேட்டுள்ளது.
அறிக்கை தொடர்பில் ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுமாறு ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு சரிவரச் செயற்படுத்தாவிட்டால் அனைத்துலக விசாரணை அவசியம் என்கிறது நியூஸிலாந்து. போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை விசாரித்தே ஆகவேண்டும் என்கிறது நோர்வே.
நிபுணர் குழு அறிக்கையைச் சாதகமான முறையில் பரிசீலிக்கும்படி இலங்கையை ஊக்குவிப்பதாகக் கூறுகிறது பிரிட்டன்.
அமெரிக்காவோ, இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றுகிறதா என்பதையே முதலில் கவனிக்கிறோம் என்கிறது.
சுவிற்சர்லாந்து நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ளது.
27 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய நாடாளுமன்றம், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கையைக் கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று இறுதியில் இந்தியாவும் வலியுறுத்தியுள்ளது.
எனினும் இந்தியாவுக்குள்ளே, பிரதான கட்சிகளான பாரதீய ஜனதாக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக, விடுலைச் சிறுத்தைகள், மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி போன்றனவும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளன.

"மே18" – தமிழினத்தின் மீது நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை!

E-mailஅச்சிடுகPDF
இந்த உலக வரலாற்றில் 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாக ஈழத்தில் தமிழினத்தில் மேல் நடைபெற்று மே18ல் முடிவடைந்த இனப்படுகொலையே பதிவாகியுள்ளது.

தமிழினத்தின் மேல் நடைபெற்ற இந்த இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளியாக சிறிலங்கா அரசு இனங்காணப்பட்டுள்ள நிலையில் பங்காளிகள் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர்.

உரிமைக்காகவும் தமது பாதுகாப்பிற்காகவும் தமது சுதந்திரத்திற்காகவும் போராட ஒரு இனத்திற்கு முழுஉரிமையும் சட்டத்தின்பாபல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமது பிராந்திய வல்லாதிக்கங்களை உறுதிப்படுத்துவதற்காய் தமிழின படுகொலையை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசிற்கு முழு உந்து சக்தியாக இருந்தது இந்த தலைமறைவாக இருக்கும் பங்காளிகளே.

தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமிழின படுகொலைப்பங்காளிகள் இன்னமும் வெளிப்படையாக இனங்காட்டப்படவில்லை என்பது தான் உண்மை.

மாவிலாற்றில் தொடங்கப்பட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எதிரியாலும் பிராந்திய வல்லாதிக்கங்களாலும் நகர்த்தப்ட்ட ராஜதந்திரங்களும் தமிழ் இனத்திற்கு எதிரான போரிற்கு அவர்கள் செய்த ஊக்கிவிப்பும் சாதாரணமானவையல்ல.

மனிதாபிமான போர் என்று வாய்கூசாமல் சிங்கள அரசால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இனஅழிப்பு போரை இந்த வேளையில் அதன் உண்மையை நிலையை வெளிப்படுத்துவதற்கு போதிய அளவு ஆதாரங்கள் இருந்தும் பிராந்திய வல்லாதிக்கத்தின் இருப்புக்கருதி பல வல்லரசு நாடுகள் மௌனமாக இருப்பதன் பின்னணி தமிழினப்படுகொலைக்கான போரில் அவர்களுக்கிருக்கும் முக்கியத்துவமே.

இந்த நிலையில் தமிழர்களாகிய நாங்கள் சிந்தித்து செயற்படவேண்டும். கொலையாளியை முதலில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும்.

அதன் பின் பங்காளிகளின் பொய் முகமூடிகள் தானாகவே கிழிக்கப்படும்.

இனப்படுகொலை என்றால் என்ன? 

இனப்படுகொலை நடாத்திய அரசை எப்படி சட்டத்தின் முன் கையாளலாம்? என்ற தெளிவான சிந்தனை எமக்கு இருக்கவேண்டும்.

ஒரு தேசிய இனம், வகுப்பு, மதம் சார்ந்தோரை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்யப்படும் அத்தனை வன்செயலும் இனப்படுகொலை என்ற வட்டத்திற்குள் அடங்கும்.

இந்த வன்செயல் எப்படிப்பட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்றில்லை எத்தனைபேர் பாதிக்கப்பட வேண்டும் என்றில்லை, சாமாதான காலத்திலும் நடைபெறலாம் போர்க்காலத்திலும் இந்த வன்முறை நடைபெறலாம்.ஆக ஒரு இனக்குழுமத்தின் மேல் அந்த மக்களை அழிப்பதற்கு செய்யும் அத்தனை வன்முறைகளும் இனப்படுகொலை என்ற சட்ட சொல்லாடலினுள் தான் அடக்கப்படும்.

“உலக நீதிமன்று” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2007 பெப்ரவரி 26ம் நாள் பொஸ்னியா தொடர்பான தீர்ப்பின் 293, 294 பந்திகளில் இனப்படுகொலைக் (Genocide) குற்றத்திற்கு மில்லியன் கணக்கானோரை கொல்லவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது.

சிறேபிறேனிக்காவில் கொல்லப்பட்ட 7000 பொஸ்னிய முஸ்லிம்கள் இனப்படுகொலை குற்றமாக கணிப்பிடுவதற்கு போதுமானவர்கள் என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.

தமிழர் மீது நடந்த படுகொலைகள் இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சிங்கள அரசின் கைகளில் வழங்கப்பட்ட பின் படிப்படியாக தமிழர்களின் உரிமைப்பறிப்பும் தமிழர்கள் மீதான வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

50 களில் நடந்த கலவரங்களும் 83 காலப்பகுதிகளில் நடந்த கலவரங்களும் இனப்படுகொலையின் ஒரு அங்கமே.இந்த படுகொலைகளில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இது வரை வெளிவரவில்லை என்பதோடு அது சம்மந்தமாக நியாயமான விசாரணைகள் நடைபெறவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர இந்தி ராணுவத்தின் வருகையும் அதன்பின் இந்திய மற்றும் சிறிலங்கா ராணுவத்தாலும் பல வழிகளில் கொலைசெய்யப்ட்ட மக்கள் தொடர்பில் புள்ளிவிரங்களினூடான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்ட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த காலப்பகுதிளில் காணாமற்போன பல நூறு இளைஞர்கள் யுவதிகள் குறித்த தகவல்களும் இதுவரை இல்லை.இரண்டு அரசாங்களினால் தமிழ் இனக்குழுமத்தின் மீது நடாத்தப்ட்ட பல படுகொலைகளின் பின் தமிழர்கள் மீதான இன அழிப்பை சிறிலங்கா அரசு தனது கையில் எடுப்பதான செயற்பாடுகள் நடக்கின்றன.

அதாவது தமிழர்கள் மீதான எல்லாவழியிலான இன அழிப்பையும் சிறிலங்கா அரசு முன்னின்று செய்ய அவர்களுக்கு பின்புல பலமான பங்காளிகள் இருக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மீதான சிறிலங்கா ராணுவத்தின் படையெடுப்பின் போது நடைபெற்ற மக்கள் அவலம் என்பது தெற்காசியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மக்கள் அவலம் என்று சொன்னால் மிகையாகாது.

யாழ்ப்பாணம் மீது செய்யப்ட்ட மாபெரும் படையெடுப்பில் மக்கள் ஆங்காங்கே செத்துவீழ்ந்தனர். பாடசாலைகள், தேவாலயங்கள், கோயில்கள், மக்கள் கூடும் இடங்கள் என எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசு குண்டுவீசி மக்களை கொன்று குவித்தது.

போதிய அளவு தொழினுட்ப வசதியின்மை, தொடர்பாடல் வசதியின்மையால் யாழ்ப்பாணத்தின் மீது செய்யப்பட்ட படையெடுப்பில் நடந்தேறிய இனப்படுகொலை பற்றிய தரவுகள் போதிய அளவு உலகத்திற்கு தெரியவரவில்லை.

கொலைசெய்யப்ட்டோர், காணாமல் போனோர், படுகாயமடைந்தோர் என எண்ணுக் கணக்கற்று தமிழர்கள் பாதிக்கப்ட்டனர்.

தமிழர்கள் மேல் நடந்தேறிய இனப்படுகொலைகளில் யாழ்ப்பாணத்தின் மீது சிறிலங்கா அரசு செய்த போரும் ஒன்று. இந்த நிலையில் தமிழ்ர்கள் மீதான முழுவீச்சுடனான இனப்படுகொலைக்கான போர் மீண்டும் மாவிலாற்றில் இருந்து ஆரம்பிப்பட்டது.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான போரில் மாத்திரம் 100000 ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காரணம் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் கொல்லப்பட்டவர்கள் குறித்த எல்லா தகவல்களும் தகவல்கள் சேகரிக்கும் குழுவினருக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

தவிர இந்த போரில் கொல்லப்ட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். அங்கங்களை இழந்தனர்.

காயமடைந்தவர்களையும் கடத்திக்கொன்ற சிறிலங்கா அரசு போர் முல்லைத்தீவுக்குள் குறுகிக்கிடந்த காலப்பகுதிகளில் கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவை சங்க உள்ளுர்பிரதிநிதிகளின் உதவியுடன் காயப்படும் ஒரு தொகுதியினர் திருகோணமலை புல்மோட்டைக்கும் மற்ற ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கும் அனுப்பப்ட்டனர்.

ஏராளமானோர் வெளியேற்றப்படுவதற்கான வாகன வசதியோ பாதுகாப்பு வசதியோ எதுவுமின்றி செத்துக் கொண்டே இருந்தனர்.

இந்த காலப்பகுதிகளில் காயமடைந்து வந்தவர்களையும் சிறிலங்கா அரசு தரம் பிரித்தது. வயது பாகுபாட்டில் தரம்பிரித்த அரசு பின் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்ற வகையில் தரம்பிரித்தது.

தரம் பிரிக்கப்ட்டவர்கள் மேலதிக சிகிச்சை என்ற பெயரில் அனுராதபுரம் மற்றும் சிங்கள பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்ட்டனர்.

அப்படி மாற்றப்ட்ட யாருமே அந்த காலப்பகுதிகளில் திரும்பிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயப்பட்டு வருபவர்களுடன் உறவினர்கள் பெரும்பாலும் வருவதில்லை. உறவினர்கள் வருவதற்கு வாகனத்தில் இடம் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

அப்படி யாருமற்று காயப்பட்டு வந்த உறவுகள் குறித்த தகவல்கள் யாருக்கும் தெரியாது. அதனால் சிங்கள அரசு கச்சிதமாக தனது படுகொலை நடாத்தியது.

காயப்பட்டு மக்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் சிறிலங்கா ராணுவம் வவுனியா பிரதேசத்தில் மணல் ஏற்றும் டிப்பர் உரிமையார்கள் சிலரை தமக்கு சில பொருட்கள் ஏற்றுவதற்கென்று அவர்களை அழைத்துச் சென்றனர்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் பின் இரவு நேரங்களில் காடுகளுக்கூடாக தமது டிப்பர் பயணித்ததாகவும் தாம் சொன்ன அவர்கள் தாம் வீடு திரும்பி டிப்பரை பார்த்த போது டிப்பரில் இருந்த மணலில் எல்லாம் ரத்தம் இருந்ததாக அந்த வாகன உரிமையாளர்கள் சொன்னார்கள்.

ஆக படுகொலை செய்யப்ட்ட பலர் காடுகளுக்குள் எரித்து அழிக்கப்ட்டுள்ளனர். தவிர சிறு காயப்பட்டு வந்த பலரின் அங்கங்கள் முழுமையாக அகற்றப்ட்டன.

வவுனியா மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அப்போது வெளிடப்பட்டபோதும் ஓரிரு நாட்களில் பலர் அந்த வைத்தியசாலைகளில் இருக்கவில்லை.

பலரை சிவில் உடையில் வந்து அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதை பார்த்தாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தார்கள். தமிழ் மக்கள் மீது நாடாத்தப்பட்ட இன அழிப்பின் உச்சக்கட்டம் இப்படி பல வழிகளிலும் நடந்தேறியிருக்கிறது.

முகாம்களின் நிலை எந்த வசதியுமற்று வெட்டவெளிப்பிரதேசத்தில் முட்கம்பிகளால் வேலியிடப்பட்டு முழுநேர ஆயுதப் படையினரின் பாதுகாப்புடன் மக்கள் அடைக்ப்பட்டனர்.

வெளிமக்களின் நேரடித் தொடர்பை துண்டித்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தனிமைப்படுத்துவதில் சிறிலங்கா படையினர் முழுநேர கண்காணிப்பில் இருந்தனர்.

இராணுவ துணைக்குழுக்களின் உதவியுடன் இடம்பெர்ந்து வந்த மக்களை வடிகட்டிபிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா புலானாய்வுப் பிரிவினர் பகிரங்கமாக ஒலிபெருக்கிகளில் புலிகளின் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் சரணடையுமாறும் ஒரிரு நாட்களில் விசாரணை முடிந்துவிடும் என்றும் பின் அனைவரும் விடுவிக்கப்டுவர் என்றும் அறிவித்தனர்.

இதை நம்பிய மக்கள் மாணவர் முதலுதவிப் படையில் இருந்து எல்லைப்படைவரை அனைவரும் சரணடைந்தனர். ஏறத்தாள எல்லா இளைஞர் யுவதிகளுமே சிறிலங்கா புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு தம்மை பதிவு செய்தனர்.

தம்மை முதலே விடுதலைப்புலிகள் என இனம்காட்டிய ஒரு தொகுதியினரை சிறிலங்கா ராணுவம் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி வளாகத்தில் இருந்த முகாமில் அடைத்து வைத்திருந்தது.

மற்றய ஒரு தொகுதியினரை ரஜரட்ட பிரதேச காட்டுப்பகுதிக்கு சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் மாற்றியதாக அங்கிருந்த சில பொலிஸ் அதிகாரிகள் கூறினர் ஆனால் அப்படி மாற்றப்பட்டவர்களின் பெயர்விபரங்களோ எண்ணிக்கையோ யாருக்கும் தெரியாது.

தவிர முகாம்களில் தமது பெயரை பதிவு செய்தவர்களை கைது செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறை அதில் இனங்காணப்பட்ட சில ஆயிரக்கணக்கானோரை ரகசிய முகாம்களுக்கு மாற்றியதோடு மிகுதி ஆயிரக்கணக்கானோரை புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் சிறைவைத்தனர்.

இதில் ரகசிய முகாம்களுக்கு மாற்றப்ட்டவர்கள் குறித்த எந்த தகவல்களும் இப்போது இல்லை. இப்படி இடம்பெயர்ந்து வந்த மக்களை பல வழிகளில் பிரித்துவிட்டு தனது அழிப்பு வேலையை முடக்கிவிட்டது சிறிங்கா அரசு. விசாரணை என்ற பெயரில் இளைஞர் யுவதிகளை கைது செய்வதும் பின் “அவர்கள் கைது செய்யப்படவில்லை” “நாங்கள் அவர்களை காணவே இல்லையே” என்று சொல்வதுமாய் பல சம்பவங்கள் நடந்தேறியது இந்த முட்கம்பி முகாம்களில்.

முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வந்த நண்பனொருவனோடு பேசும் போது முகாமிற்குள் நடக்கும் பல வன்முறைகள் பற்றி சொன்னான்.

ஒரு நாள் இரவு கடும் வெட்கையாக இருந்ததால் தான் நீர்த்தொட்டியடிக்கு சென்றதாகவும் அப்போது இரண்டு கொட்டகைகள் கழித்து ஒரு கொட்டகையில் அழுகுரல் கேட்டதாகவும் தான் குளிக்கும் நீர்த்தொட்டியை மறைத்து கட்டப்பட்டிருந்த கிடுகுவேலிக்குள் ஒழிந்து நின்றதாகவும் அந்த நேரம் அந்த கொட்டகைக்குள் இருந்து ஒரு பெண்ணை ஆயுதம் தாங்கிய இரண்டு படையினர் கையை பிடித்து கொண்டு சென்றதாகவும் சொன்னான்.

ஆனால் கொண்டு செல்லப்பட்ட பெண் யார் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்று மற்றவர்களிடம் விசாரிக்க முடியாதெனவும் அப்படி விசாரித்தால் தனக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும் சொன்னான். இப்படி முகாம்களுக்குள் நடந்தேறிய பல வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளும் வெளி உலகிற்கு தெரியவரவில்லை.

ஒருதடவை சிறிலங்கா துணைராணுவக் குழுவொன்றால் முகாமிலிருந்து கூட்டிச்செல்லப்பட்ட இரண்டு தமிழ் பெண்கள் இரண்டு நாட்களின் பின் விடுவிக்கப்ட் நிலையில் அவர்கள் முகாமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்கள் இருவரையும் விசாரணை என்று அழைத்துச் சென்ற அந்த துணைராணுவக் குழு சிறிலங்கா புலனாய்வு படையதிகாரிகளுடன் இணைந்து அவர்களை கற்பழித்து அதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

இந்த தகவலை தமக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு சொல்லிவிட்டு தற்கொலை செய்துள்ளனர் அந்த யுவதிகள். நீதி கேட்டு முறையிட எந்த இடமும் இல்லாமலும் மீறி வெளியுலகத்திற்கு நடந்தஇ நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை வெளிப்படுத்தினால் அதனால் தமது குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தலாலும் பல உண்மைகள் வெளிப்படாமல் இந்த மக்களுக்குள் புதைந்து கிடக்கிறது.

போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைகளும் உலகத்தின் பார்வையும் சிறிலங்கா அரசானது ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தி முடித்துள்ள இனப்படு கொலையானது இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மேல் மேற்கொள்ளப்ட்ட மினப்பெரிய படுகொலை நிகழச்சி என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மாறிவருகிறது என்பதே இந்த ஜ.நா நிபுணர்குழு அறிக்கை.

உலகத்தின் ஓர் மூலையில் நடந்தேறிய மிகப்பெரிய படுகொலையின் ஆதாராங்களை திரட்டி பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் வெளியிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பியதில் சனல்4 மற்றும் அல்ஜசீரா ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது என்றே கூறலாம்.

கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்தியாவின் ஊடகங்களுக்கு தெரியாத பல உண்மைகளை இந்த ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு நடாத்திய படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

வெளி அழுத்தங்கங்கள் அதிகரிக்கவே பெயரளவில் ஜ.நா செயலாளரால் உருவாக்கப்ட்ட நிபுணர்குழு சில விடையங்களை மிக தெளிவாக ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டிருந்தது. பாரபட்சமற்று வெளிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையானது சிறிலங்காவிற்கு பலவழிகளிலும் அழுத்தத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த நிபுணர்குழு அறிக்கையானது முழுமையானதல்ல என்பதை தமிழர்கள் ஆகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் ஆரம்பமே. இந்த நல்ல ஆரம்பத்தினூடாக எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்கூய சந்தர்ப்பம் பிறந்துள்ளது.

போர்ப்பிரதேசத்தில் நடந்த சில குற்றங்களை மட்டுமே பேசியுள்ள நிபுணர்குழு அறிக்கை போர்க்காலங்களில் கைது செய்யப்ட்டவர்கள் காணமல் போனவர்கள் பற்றி பேசவேயில்லை என்றேபடுகிறது. ரகசிய முகாம்களில் சிறைவைக்கப்ட்டவர்கள் குறித்த வாதங்களை இந்த நிபுணர்குழு வைக்கவில்லை என்றே தெரிகிறது.

தவிர 40 000 ற்கும் அதிகமாவர்கள் இறுதிக்கட்ட போரில் கொல்லப்ட்டிருக்கலாம் என கூறியிருக்கும் நிபுணர்குழு அறிக்கை அதை இனப்படுகொலை என்ற சொல்லினூடாக வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியுள்ளது. பிராந்திய வல்லாதிக்கங்களின் மீது ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே “இனப்படுகொலை” என்ற சொல்லாடலை நிபுணர்குழு தவிர்த்திருப்பதாக தெரிகிறது.

மேற்குலகினால் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான ராஜதந்திர முரண்பாடுகள் மற்றும் போர்க்குற்ற நிலைப்பாடு தொடர்பான பனிப்போரும் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்தியா வெகுவாகவே நம்பி இருந்தது.

அதனால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்பாக எழுத்த அத்தனை அழுத்தங்களையும் போர்க்காலத்தில் சமாளித்து சிறிலங்காவின் இனப்படுகொலைப் போரை விரைவுபடுத்தியிருந்தது இந்தியா.

தனது முகவர்கள் ஊடாக தமிழினத்தின் மீதான போரை கண்காணித்து கொண்டிருந்த இந்தியா தொழினுட்ப மற்று சிறப்பு படைப்பிரிவின் உதவியையும் நேரடியாக சிறிலங்காவிற்கு வழங்கியிருந்தது. அது போக போர் தொடர்பான சில கட்டளைகளையும் தனது முகவர்களினூடாக சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கியிருந்தது.

இதன் வெளிப்பாடாகவே போர் முடிந்தவுடன் ஒரு செவ்வியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ “நாங்கள் இந்தியாவின் போரையே செய்து முடித்திருக்கிறோம்” என்று சொல்லியிருந்தார்.

இப்படி இந்தியாவின் மேற்பார்வையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை செய்து முடித்துவிட்ட சிறிலங்கா ராஜதந்திர ரீதியில் இந்தியாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. போர் முடிந்த கையுடன் போர்க்குற்றவாளி என்ற பெயரில் மகிந்தவை கூண்டில் ஏற்றிவிட்டு இலங்கையை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பெரிதும் தீர்மானித்திருந்ததாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள்.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் போர்க்குற்ற ஆதாரங்களைவிட பல போர்க்குற்ற ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருப்பதாகலுவம் சொல்லப்படுகிறது.

இந்திய அரசு சிறிலங்காவிற்கு போர்க்காலத்தில் வழங்கிய கட்டளைகள் அறிவுறுத்தல்கள் என்பவற்றை சிறிலங்கா அரசு வைத்திருப்பதாகவும் இந்திய அரசு சிறிலங்கா மீது போர்க்குற்ற குற்றச்சாட்டை வைக்குமிடத்து தமிழினப்படுகொலையில் இந்தியாவிற்கிருக்கும் பங்கை சிறிலங்கா வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தினாலையே இந்தியா இன்று சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படி இருப்பினும் ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்தியா தொடரந்து இருக்கவிரும்புமா என்பது சந்தேகத்திற்குரியதே.

சிறிலங்காவிற்கெதிரான போக்கை கடைப்பிடிக்காவிட்டாலும் சிறிலங்கா மீதான அழுத்தங்களுக்கெதிராய் இந்தியா செயற்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும. புலம்பெயர்தமிழர்களின் போராட்டங்களின் வெற்றியும் தொடரந்து செய்ய வேண்டியவையும் சிறிலங்கா மீது மேற்குலகத்தின் பார்வையை இயன்ற அளவு தெளிய வைத்ததோடு கடும் தொனியிலான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள வைத்ததில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பென்பது அழப்பரியது.

சிறிலங்கா அரசுக்கெதிரான பிரச்சாரங்கள் போர்க்குற்றங்களை சேகரித்து சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தமை அரசியல் அதிகாரிகளை தெளிவடைய வைத்தமை இப்படி புலம்பெயர் தமிழர்கள் இன்றுவரை செய்த போராட்டங்களின் ஒரு பலன்தான் இந்த ஜ.நா அறிக்கை என்று சொன்னால் மிகையாகாது.

இந்திய புலனாய்வு துறையினரின் கண்காணிப்பு சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இப்படி பல தடைகளை வென்று புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் நகர்ந்து இன்று ஜ.நா அறிக்கை வெளியிடக்கூடிய அழுத்தங்ளை பிரயோகிக்க கூடிய பெரும் சக்தியாக வளர்ந்து நிக்கிறது.

ஓன்றுபட்ட தமிழினமாய் புலம்பெயர்தமிழர்கள் ஒருங்கிணைந்து ராஜதந்திர ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அரசியல் ரீதியான விடுதலைக்கு தொடர்ந்து போராடுவதுதான் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்ட்ட இனப்படுகொலையில் படுகொலை செய்யப்ட் உறவுகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்.

ஓன்று திரண்ட மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் உணர்த்துவோம்…. தமிழினமாய் எல்லோரும் ஒன்றுபடுவோம் தமிழர்களே.

writeraathi@gmail.com 

ad

ad