புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013



போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி இலங்கை தமிழர் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை: சவேந்திர சில்வா

இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கோரி, 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தவொரு இலங்கை தமிழரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை


சுஷந்திகாவுக்கு ஆலோசகர் பதவி!

ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றை பெற்றுக்கொடுத்த  முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை சுஷந்திகா ஜயசிங்கவுக்கு  விளையாட்டுத்துறை அமைச்சில்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் சந்திரிக்கா விரைவில் பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  குமாரதுங்க பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கொம்பனித்தெரு கொள்ளை சம்பவம்: 3 பொலிஸார் உட்பட 7 பேர் கைது

கொம்னித்தெரு பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது


மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த சுப்பிரமணியன்சுவாமியின் உருவப்படம் எரிப்பு!- திருச்சியில் பரபரப்பு
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் திருச்சியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

யுத்தக் குற்றமும் கறியும்!- ஈழம் –சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற நூலின் ஆசிரியர் பிரான்சிஸ் ஹாரிசன்
ஆயிரக்கணக்கில் மக்களைப் பலியெடுத்த மிகவும் ஆக்ரோஷமான இனப் பிரச்சினையைப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிடுதல் என்பது அமைதியான வாழ்க்கையொன்றைத் தேடும் பாதையல்ல.

''அன்ஸ்பீக்கபிள் ட்ரூத்'' என்ற பெயரில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. திரட்டிய ஆதாரம்!
இலையுதிர் காலம், வசந்தகாலம் போல் ஜெனீவா காலம் என்ற புதிய காலத்தை தமிழர் வாழ்வில் இணைத்திருக்கிறது ஈழப் படுகொலை.

வவுனியா உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று மக்களுக்கு உதவாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட

போராட்டத்தைக் கைவிடக் கோரும் கலைஞர் : எழுச்சியை தடுக்க முனைவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!


இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று

எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!


மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத
சுதந்திர தினமா? அடிமை இனமா?(புதுக்கவிதை)அ.பகீரதன்
தமிழ்க்குடிகள்,
இருட்டறையில் இருந்து 
தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு
புனர்வாழ்வுப் பொய்யர்கள் 
வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்
பெண் எனும் பெருஞ்செல்வம்
சத்திரத்தில் சாமியார்
சமையலறையில் மாமியார்
உலகில் உன்னைவிட பாவியார்
உனக்குஏனம்மா இன்னுமொரு பாரதியார்

இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்மானத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! இந்திய காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி அதிரடி
ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், இந்தியா என்ன நிலை எடுக்கப்போகிறது என்பதை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இந்த நிலையில்

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைபு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிப்ப
இலங்கை தொடர்பில் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள  பிரேரணையின் வரைபு ஜெனீவாவில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெசட் இணையத்தளம்

ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள்! - முன்னாள் போராளி விநாயகம் அறிக்கை
விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் என ஒரு அறிவிப்பை முன்னாள் போராளியான விநாயகம் அவர்கள் மின்னஞ்சல் வழியாக வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் பெறப்பட்ட 14 லட்சம் கையெழுத்துக்களை இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் மனித உரிமைகளுக்கான அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மனாபன் வெள்ளியன்று புதுதில்லியில் ஓப்படைத்தார்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.BBC
இந்த வரைவுத் தீர்மானம் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய நடவடிக்கைத் திட்டமும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக எழுந்த பாரிய
தெல்லிப்பழை ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்தது உண்மை; ஒப்புக் கொண்டது பொலிஸ் தரப்பு
தெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன, மற்றும் காங்கேசன்துறை
பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம் வடபகுதியில் உள்ளமை உறுதியானது; அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்
இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களோ, நலன்புரி நிலையங்கள் என்றோ எதுவும் இல்லை என்று இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், அரசின் உயர்நிலை ஊழியர்கள் இருவர் அது தொடர்பான உண்மை நிலையைப் போட்டுடைத்துள்ளனர்.

சாதாரண போர்க்குற்றம் அல்ல, இனப்படுகொலை: சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்றுஉள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



இந்தியாவைப் பகைத்து இலங்கையால் எதுவும் செய்ய முடியாது : ஐ. தே. க.


இலங்கைக்கு எதிரான சர்வதேச தீர்மானங்களை எதிர்கொள்ள அரசாங்கம் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கையால் ஒருபோதும் முன்னோக்

ரயில், விமானங்களை ரத்து செய்துடெஸோ’வின் பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கலைஞர்
டெஸோ நடத்துவதாக அறிவித்திருக்கும் மார்ச் 12 வேலை நிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.

ஜம்மு காஷ்மீர் :மலைப்பாதையில்  பஸ் கவிழ்ந்து 15 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று, மலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 15 பேர் பலியாயினர்

யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி
யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது தொடரப்பட்டு வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக இன்று யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உ. ஸ்ராலின் (வயது24) என்ற இளம் பத்திரிகையாளரே தாக்கப்பட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேச மன்னிப்புச்சபை மன்மோகன் சிங்கிடம் மனு கையளிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்தரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்துமாறுகோரி, 14 லட்சம் இந்தியர்கள் கையெழுத்திட்ட மனுவை டெல்லியில் பிரதமர்

கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்
-----------------------------------------------------------
ஈழத் தமிழரைப் படுகொலை செய்த இராஜபக்சே அரசை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சார்ந்த மீனவச் சகோதரர் மணி அவர்களது இல்லத்திற்குப் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று (08.03.2013 வெள்ளிக்கிழமை காலை) சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி வீர வணக்கம் செலுத்தினார். மணி அவர்களின் துணைவியார், இரண்டு புதல்வர்கள், ஒரு புதல்வி, தாயார் உள்ளிட்ட உறவினர்களிடம் இரங்கல் தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடன் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, கடலூர் மாவட்டச் செயலாளர் என்.இராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க. சோமு, தேர்தல் பணிச் செயலாளர் ந. மனோகரன், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ். மோகன், கடலூர் ஒன்றியச் செயலாளர் குணசீலன் மற்றும் ஏ.கே. சேகர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் சென்றிருந்தனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

ஈழத் தமிழரைப் படுகொலை செய்த இராஜபக்சே அரசை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சார்ந்த மீனவச் சகோதரர் மணி அவர்களது இல்லத்திற்குப் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ

ad

ad