புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2024

அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் ஜனாதிபதி- கொழும்பு அரசியலில் பரபரப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது

சனிக்கிழமைக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை சனிக்கிழமைக்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. வியாழ நடைபெறவிருக்கும் கூட்டம் ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டமே தவிர தேர்தல் தேதி குறித்து விவாதிக்கும் நோக்கம் இல்லை எனவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை சனிக்கிழமைக்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. வியாழ நடைபெறவிருக்கும் கூட்டம் ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டமே தவிர தேர்தல் தேதி குறித்து விவாதிக்கும் நோக்கம் இல்லை எனவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை! - உயர்நீதிமன்றம் அதிரடி.

www.pungudutivuswiss.com


தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

24 ஜூலை, 2024

மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலை வைத்திய அதிகாரியாக தரமிறக்கம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.

சஜித்தின் புதிய கூட்டணி - ஓகஸ்ட் 8 இல் கைச்சாத்து

www.pungudutivuswiss.com


அடுத்த தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கைச்சாத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அடுத்த தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கைச்சாத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்

மொட்டு கட்சியின் 12 மாவட்டத் தலைவர்கள் ரணில் வசம்

www.pungudutivuswiss.com


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அங்கு அவர்கள் முடிவு செய்தனர்.

அதற்காக அவர்கள் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 75 மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

23 ஜூலை, 2024

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கையின் 9 அம்சங்கள்

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகிய இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது

22 ஜூலை, 2024

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் - 15 பேர் கொண்ட குழு நியமனம்

www.pungudutivuswiss.com


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

முன்னணியின் எம்.பிக்களுக்கும் 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அபிவிருத்தி நிதியாக சுமார் 6 கோடி ரூபாவுக்கான ஒதுக்கீடு யாழ். மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அபிவிருத்தி நிதியாக சுமார் 6 கோடி ரூபாவுக்கான ஒதுக்கீடு யாழ். மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

வவுனியாவில் வாடகை வீட்டில் பாலியல் விடுதி!

www.pungudutivuswiss.com


வாடகை வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நான்கு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகை வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நான்கு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

செப்ரெம்பர் 21இல் ஜனாதிபதி தேர்தல்?

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது

கிளப் வசந்த கொலைக்கு உதவிய இளம் யுவதி கைது!

www.pungudutivuswiss.com


கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது , குறித்த யுவதியை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் அதுருகிரிய பிரதேசத்தில் வைத்து, கிளப் வசந்தவின் கொலைக்கு உதவியவர் என குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது , குறித்த யுவதியை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் அதுருகிரிய பிரதேசத்தில் வைத்து, கிளப் வசந்தவின் கொலைக்கு உதவியவர் என குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

நாளை முதல் போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்!

www.pungudutivuswiss.com


சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இக்காலப்பகுதியில் சாதகமான பதிலை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் தொழிற்சங்கத்தினர் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இக்காலப்பகுதியில் சாதகமான பதிலை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் தொழிற்சங்கத்தினர் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்

குத்துவிளக்கு கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

வழக்கினை கைவாங்குவதாக முதல் நாளிலேயே அறிவித்து விட்டோம்!

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளி கோரிய நிவாரணத்தினை வழங்கி வழக்கினை கைவாங்குவதாக வழக்கு விசாரணைக்கு எடுத்த முதல் நாளிலேயே அறிவித்து விட்டோம் என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளி கோரிய நிவாரணத்தினை வழங்கி வழக்கினை கைவாங்குவதாக வழக்கு விசாரணைக்கு எடுத்த முதல் நாளிலேயே அறிவித்து விட்டோம் என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!

www.pungudutivuswiss.com

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு 
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

www.pungudutivuswiss.com
க்க விமான நிலையத்தில் கைது!
[Sunday 2024-07-21 17:00]


தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

19 ஜூலை, 2024

"போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும்" - பராக் ஒபாமா வெளிப்படை

www.pungudutivuswiss.com

2024 தேர்தலை எதிர்கொள்ள ஜோ பைடனின் திறமை குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள ஒபாமா, அவரது திறமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறைக்குள் தள்ளுவேன் என ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பேன் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பேன் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

வாக்குறுதியை மீறி பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகிறது அரசு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

பலத்தைக் காட்டவே பொதுவேட்பாளருக்கு ஆதரவு!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம் எனவும் அதனால் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம் எனவும் அதனால் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்

நண்பியின் துரோகத்தால் உயிரை மாய்த்த பெண்!

www.pungudutivuswiss.com


தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 
யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்!

www.pungudutivuswiss.com


உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர்  எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்.

உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்

17 ஜூலை, 2024

வகுப்பெடுக்கப் போன விரிவுரையாளர் குளியல் காட்சியை வீடியோ எடுத்து மாட்டினார்!

www.pungudutivuswiss.com

வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

அவரே பதில் வைத்திய அத்தியட்சகர் என்கிறார் சுகாதார அமைச்சர்!

www.pungudutivuswiss.com


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தா

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்- மீண்டும் குழப்பம்!

www.pungudutivuswiss.com
ரம்- மீண்டும் குழப்பம்!
[Wednesday 2024-07-17 17:00]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகினார்

www.pungudutivuswiss.com

பிரான்சில் அவசர அவசரமாக உருவான புதிய கூட்டணி!

www.pungudutivuswiss.com

பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக இடதுசாரிக் கூட்டணி ஒன்றை அமைத்தன. ஆனால், இதுவரை யாரும் ஆட்சி அமைக்கவில்லை! பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி The New Popular Front (NPF).

பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக இடதுசாரிக் கூட்டணி ஒன்றை அமைத்தன. ஆனால், இதுவரை யாரும் ஆட்சி அமைக்கவில்லை! பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி The New Popular Front (NPF).

கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்

www.pungudutivuswiss.com

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்.

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்

20 ஜூன், 2024

ஜனாதிபதியின் நிலைப்பாடு ஆபத்தானது!

www.pungudutivuswiss.com


தேர்தலை ஒத்திவைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனைக்கோட்டையில் இன்று முதல் அகழ்வாய்வு!

www.pungudutivuswiss.com


பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப் பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், இன்று அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப் பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், இன்று அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

மைத்திரிக்கு மீண்டும் தடை

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது

சுதந்திரக் கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு!

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றது. இதற்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டார். ​மேலும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றது. இதற்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டார். ​மேலும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழைக்கு வாய்ப்பு

www.pungudutivuswiss.com


எதிர்வரும் 22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழையுடனான காலநிலை நிலவும் என்று வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழையுடனான காலநிலை நிலவும் என்று வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு முழுக்குப் போடத் தயாராகிறார் மஹிந்த

www.pungudutivuswiss.com
பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலுக்கு விடைகொடுக்கத் தயாராவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலுக்கு விடைகொடுக்கத் தயாராவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நீதி, பொறுப்புக்கூறலை ஆதரிக்கிறது கன்சர்வேட்டிவ் கட்சி! - டேவிட் கமரூன்

www.pungudutivuswiss.com


பிரித்தானிய தமிழர்களிற்கான கன்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தமிழர்களிற்கான கன்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

19 ஜூன், 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் அப்படியே பாமகவுக்கு மடை மாறுமா?

www.pungudutivuswiss.com
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்ரவாண்டி சட்டப்பேரவைத்
தொகுதிக்குட்பட்ட பகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு அடுத்து நெருக்கமான

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை

ஜனாதிபதியின் சூழ்ச்சியை முறியடித்து விட்டது அரசியலமைப்பு பேரவை!

www.pungudutivuswiss.com


சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரத்தினத்தை பிரதம நீதியரசராக நியமித்து தனக்கு ஏற்றாற் போல் சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியை அரசியலமைப்பு பேரவை தோற்கடித்து விட்டதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரத்தினத்தை பிரதம நீதியரசராக நியமித்து தனக்கு ஏற்றாற் போல் சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியை அரசியலமைப்பு பேரவை தோற்கடித்து விட்டதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்

அரசை விட்டு வெளியேறுமாறு விஜயதாசவுக்கு ஜனாதிபதி அழுத்தம்!

www.pungudutivuswiss.com

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு இலஞ்சம்

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்கு சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்கு சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்

நாளை மாலை தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்

www.pungudutivuswiss.com


 நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்

நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடுவது தவறான முன்னுதாரணம்!

www.pungudutivuswiss.com


நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார்

நீதிமன்றத்திற்கே சவால் விடுகிறார் ஜனாதிபதி

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்.

ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது - ஜனாதிபதி ரணில் அறிவிப்பு.

www.pungudutivuswiss.com


பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. எனவே அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. எனவே அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

18 ஜூன், 2024

சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜெய்சங்கர்

www.pungudutivuswiss.com


இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார்.
இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தத் தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார். இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இந்தத் தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்

திருமண பந்தத்தில் இணைந்த தர்ஜினிக்கு குவியும் வாழ்த்து!

www.pungudutivuswiss.com


உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

17 ஜூன், 2024

துட்டகைமுனு சிங்கள மன்னன் இல்லை - அவன் வாழ்ந்த காலத்தில் சிங்கள மொழியே இல்லை

www.pungudutivuswiss.com


மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

www.pungudutivuswiss.com12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது

தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்க கிளிநொச்சி மாவட்ட அமைப்புக்கள் ஆதரவு

www.pungudutivuswiss.comஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

சுவிட்சர்லாந்தயுக்ரேன் அமைதி மாநாட்டின் முன்மொழிவில் கையெழுத்திடாத இந்தியா - என்ன நடந்தது

www.pungudutivuswiss.com
ஜெலென்ஸ்கி உச்சிமாநாட்டின் முன்மொழிவுகளை ரஷ்யாவிடம்
முன்வைக்க விரும்புகிறார்

வழக்கை முடிவுறுத்துவதற்கு தமிழ் அரசுக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

16 ஜூன், 2024

மாத்தறை கூட்டத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அறிவிப்பார்! [

www.pungudutivuswiss.comஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார்.

அடுத்த வருடம் முதல் வீடுகளுக்குப் புதிய வரி- ஐஎம்எவ் அறிவுறுத்தல்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.

இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.

14 ஜூன், 2024

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் இருந்து விழுந்து மகள் பலி

www.pungudutivuswiss.comதந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது

13 ஜூன், 2024

காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம்!- என்கிறது சஜித் அணி.

www.pungudutivuswiss.comயுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் 15 முக்கியமான சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் திட்டம்!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்

ad

ad