புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2024

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைகிறது

www.pungudutivuswiss.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று   வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், டொலரின் விற்பனை விலை 315 ரூபா 50 சதமாக பதிவாகியுள்ளது. அதன் கொள்வனவு விலை 307 ரூபா 50 சதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 4 வீதத்தை விடவும் அதிகரித்துள்ளது.

கரிநாள் பேரணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியும் ஆதரவு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பெப்ரவரி 4ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி இந் நாளில் கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பெப்ரவரி 4ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி இந் நாளில் கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது

நிகழ்நிலை காப்புச் சட்டம்- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி

www.pungudutivuswiss.com

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது

கிளிநொச்சியில் நாளைய கரிநாள் பேரணியின் ஒன்று கூட சிறீதரன் அழைப்பு

www.pungudutivuswiss.com

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்

தரமற்ற ஊசிமருந்து இறக்குமதி - 10 மணி நேர விசாரணைக்குப் பின் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

www.pungudutivuswiss.com

தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad