அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
-
19 செப்., 2022
அரசியல் தீர்வு சமஸ்டி கட்டமைப்பில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக இருக்க வேண்டும்!
7 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த 14 வயதுச் சிறுவன்! - போதையில் தடுமாற்றம்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில், ஹெரோயினுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளார். அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது |
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான தாயகத்தில், காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது |
புதிய வரைவு பிரேரணையின் உள்ளடக்கம் - தமிழ்க் கட்சிகள் அதிருப்தி!
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடைய முடியாது எனவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை முக்கிய குறைபாடு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளன |
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு 10 பேர் பலி
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன |
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |