புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2013

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் பதுமன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தேர்தல் பரப்புரை
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடும் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்புக்கென இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசின் புலனாய்வுப் பிரிவான கபே அமைப்பு சர்வதேசத்திற்கு தன்னையொரு நேர்மையானதும்,
தேர்தல் பிரச்சாரம் குறுந்தகவல்களின் ஊடாக தொடர்கின்றது
தேர்தல் பிரச்சாரம் குறுந்தகவல்களின் ஊடாக தொடர்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
கே.பி.யை அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியமை பாரதூரமான குற்றம்: ஐ.தே.க
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் அழிக்கப்பட்டத்தில் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டிய கே.பி. என்ற குமரன் பத்மநாதனை மக்களின் பணத்தில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரகராக செயற்பட இடமளித்தமை பாரதூரமா
இலங்கையின் தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்!- பான் கீ மூன் நம்பிக்கை
இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 
அண்ணா மேம்பாலத்தில் தற்கொலை செய்த பெண்ணின் காதலன் கைது

கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் குடியிருந்தவர் அஞ்சலி (26). மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று மாலை சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொணடார். இதையறிந்

அதிமுக எம்.எல்.ஏ. 
புத்திசந்திரன் கைது
 


சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து நீக்கம் செய்யப்பட்டவரும், நீலகிரி மாவட்ட ஊட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான புத்திசந்திரன் கைது செய்யப்பட்டார்.   அவருடன் வந்த 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சுவிஸ் கிராமத்தில் நடைபெற்ற விபச்சாரம்

சுவிட்சர்லாந்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் செயல்பட்டு வந்த விபச்சார ஒட்டலினை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களின் அடையாளமே நான்: எழிலனின் மனைவி அனந்தி தெரிவிப்பு
நான் வெறுமனே விடுதலைப் புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களதும் குடும்பங்களதும் அடையாளமாகவிருக்கின்றேன் என்பதே உண்மையாகும்.
ஆனால் இலங்கை அரசோ காணாமல் போனோர்களது நிலைபற்றி வாய் திறக்க மறுக்கின்ற அதே வேளை, அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி வாய்மூட வைக்க முற்படுவதாக அனந்தி சசிதரன்(எழிலன்) குற்றஞ்சாட்டியுள்ளார்.
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 

எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண  சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் நீங்கள்   என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி மக்கள் அரசியலில் தமிழ் தேசியத்தோடு ஒருசேர இணைந்து நின்றவர்கள். ஆதி முதல் தமிழ் காங்கிரஸ்.தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றை ஆதரித்து ஜனநாயக தேர்வுகளுக்கு உறுதியோடு இறுதி வரை இருந்தவர்கள். காலத்தில் கோலமாய்  எதிரிகளோடு துரோகிகளும் சேர்ந்து துப்பாக்கி முனையில் எம்மை ஆள  வந்து குடி கொண்ட பின்னர் எமது கோட்டை சரிந்தது  இல்லை இல்லை சரியவைத்தார்கள். வன்முறை.துப்பாக்கி கலாசாரம்.தப்பான தேர்தல் நடைமுறை என எல்லாவற்றையும் பயன் படுத்தி எதிரி  வென்றுள்ளதாகவோ பெரும் பான்மை பெற்றதாகவோ கொக்கரித்தான் .சிலவேளைகளில் தேசியம் சார்ந்தவர்கள் பகிஸ்கரிப்பு செய்ததாலும் இது நடக்க வாய்ப்பு கிட்டியது . இப்போது நல்ல காலம் கை கூடி வந்துள்ளது.இப்போது கூட தீவுப்பகுதியில் எதிரியின் ஆயுத கலாசாரம் நிலவுவதால் சரியான முறையில் தேர்தல் பிரசாரமோ பரப்புரையோ செய்ய முடியாத  நிலைதானுண்டு. என்ன தான் இருந்தாலும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி எத்ரியை தோற்கடிக்க முன்வாருங்கள்.எமது இனப்  பிரச்சினைஐ நா  மன்றம் வரை போயிருக்கும் இவ்வேளையில் நீங்கள் துப்பாக்கி அடக்கு முறைக்கு அச்சம் கொள்ளாதீர்கள்.ஜனநாயக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கா விட்டால் கூட உங்கள் வாக்குகள் களவாடப் பட்டு எதிரி வாக்குககளாக மாறும்.எதிரி வியூகத்துக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்,தேர்தல் வாக்களிப்பு முறை ரகசியமானது.எதிரிக்கு ஒரு முகத்தையும் வாக்களிப்பில் மறு முகத்தையும் காட்டி எமது தேசியத்துக்கு வழி  கோலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வையுங்கள்.இல்லை இல்லை  அதிக பெரும்பான்மை பெற உதவுங்கள் மாற்றானை ஆதரிக்காத  எங்கள் மண் (முன்னரைபோல) என்று நிரூபியுங்கள்.எதிரி பதவிகள் பட்டங்கள் வசதிகள் செய்து தருகிறான் என்று ஏமாறாதீர்கள்.அந்த சேவைகள் எல்லாம் ஒரு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தே தான் ஆகவேண்டும் .அவை எல்லாம் தங்கள் சட்டைக்குள் இருந்து எடுக்கும் பணத்தின் மூலம் செய்வதில்லை.எல்லாம் பொது மக்களின் சொத்து தான்  எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் எதோ ஒரு வகையில் தவறு செய்து தானுள்ளன.சந்தர்ப்பம் சூழ்நிலை  காரணமாக பிரிந்து போய் கிடந்த காலங்கள் அவை.இப்போது முதன் முறையாக அரச ஊதுகுழலான கட்சி ஒன்றை தவிர மற்றவை எல்லாம் தமக்குள்ளே ஒன்று பட்டு ஒரே குடையின் கீழ் உங்கள் முன் வந்துள்ளன.பழையவற்றை மறப்போம்.மண் ணுக்காக இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி சின்னமான  வீட்டுக்கு புள்ளடி  இட்டு எமது இனத்தை மண்ணை காப்போமாக. இந்த வேண்டுகோளை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு.நாங்களும் உங்கள உறவுகள் ரத்தங்கள். பொருளாதார வளத்திலும் உங்களோடு ஒன்றாக இருப்பவர்கள் .எங்கள் இதய பூர்வமான இந்த வேண்டுகோளை ஏற்பீர்கள் என் நம்புகிறோம்  

நன்றியோடு                                                                         18.09.2013 
 ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 
தலைமையகம் சுவிட்சர்லாந்து 
tthamil 8@gmail .com 

                                   

பாடசாலையில் பிள்ளையை அனுமதிப்பதற்காக தாயிடம் பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த கொட்டாவ பகுதி பாடசாலை அதிபர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது பிரதான நீதவான் கிஹான் பலபிட்டிய அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார் நடிகர் அஜீத்
    டிகர் அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. 


நடிகர் சங்க பொதுக்குழு
நடிகர் சங்க பொதுக் குழு சென்னையில் புதன்கிழமை கூடியது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள தகுதியுள்ள உறுப்பினர்கள் மொத்தம் 2,900 பேர் இருக்கிறார்கள். இதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அனுமதிக்கப்பட்டனர்.படங்கள் 



திருமணத்துக்கு காதலன் மறுப்பு:
சென்னை அண்ணா மேம்பாலத்தில்
இருந்து விழுந்து காதலி தற்கொலை

கோடம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (26). இவர் தனது தாயார் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். அஞ்சலி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். 
நடிகர் சங்கத்தில் குமரிமுத்துவை மீண்டும் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்: சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நடிகர் குமரிமுத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறப்புரிமையைப் பறிக்க முயலும் அரசாங்கம்
அரசாங்கமும் அதன் கடும் போக்கு பங்காளிக் கட்சிகள் பலவும் 2013 செப்டெம்பர் மாதம் 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதால், ததேகூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில்
ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் நாட்டை விட்டு வெளியேறினார்
இலங்கையின் சண்டேலீடர் பத்திரிகையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மாயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார்.
மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அணிதிரளுங்கள்: வட அமெரிக்கத் தமிழ் உறவுகளுக்கு நா.க.த.அரசாங்கம் அறைகூவல்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக, அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரை எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad