புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013

தற்போதைய செய்தி
மரக்காணத்தில் பாதிக்கபட்ட மக்களை சந்திக்க சென்ற  வை கோ விழுப்புரத்தில் வைத்து தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார் 

Chennai Super Kings 164/3 (20/20 ov)
Pune Warriors 50/4 (7.0/20 ov) நேரடி ஸ்கோர் 

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்ட ராமதாஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடுதல்(ஐ.பி.சி 143), காவல்துறையின் உத்தரவை உதாசீனப்படுத்துதல்(ஐபிசி 188), பொதுமக்களுக்கு இடையூறு செய்தல்(ஐ.பி.சி. 151) ஆகிய பிரிவுகளுடன் வன்முறையை

இலங்கை இனப்படுகொலையை நடத்திய மஹிந்த இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது
தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள்.

மேடையில் சவால் விட்டு பேசிய ராமதாஸ் மீது வழக்கு ஜெயலலிதா அறிவிப்ப

Tamil-Daily-News-Ramadas-Jaya

சென்னை: பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவின்போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டப் பேரவையில் நேற்று பல்வேறு கட்சியினர் பேசினர். இதற்கு பதிலளித்து
புனேவுக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணி 164 ரன்கள் சேர்ப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 42-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு புனேவில் தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி

அழகிகள் நடனம் பார்க்க வேலை பார்த்த
நகை கடையில் 360 பவுன் கொள்ளையடித்த ஊழியர்
 
சென்னை புரசைவாக்கத்தில் 'கேரளா ஜுவல்லர்ஸ்' என்ற பிரபல நகை கடை உள்ளது. இதன் உரிமையாளர் சிபிஜோசப். இவர் தனது கடையில் உள்ள நகை கையிருப்பு அவ்வப்போது ஆய்வு செய்வது உண்டு. இப்படி ஆய்வு செய்த போது 417 பவுன்

ராமதாஸ் கைது எதிரொலி : கிருஷ்ணகிரியில் பஸ் எரிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் அரசு பேருந்தை வழிமறித்து பயணிகளை இறக்கிவிட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் அரசு பேருந்து முழுமையாக எரிந்தது.   பேருந்துக்கு தீ வைத்தவர்களை பிடிக்க இன்ஸ் பெக்டர் சிவலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பாமக கொடிகள் சேதம்- சாலைமறியல் செய்தவர்களிடம்
டி.எஸ்.பி சமாதானம் ( படங்கள் )
 


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராம கூட்ரோட்டில் உள்ள பாமக கொடி கம்பத்தில் இருந்த கொடியில் அசிங்கம் ஏற்படுத்தியதாக கூறி காஞ்சிபுரம் சாலையில் அக்கிராம பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல் மும்முனி கிராமத்தில் பாமக கொடியை சேதப்படுத்தியதை கண்டித்து செய்யாறு பைபாஸ் சாலையிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் வந்தவாசி பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாமகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் வந்தவாசி சுற்றுவட்டாரப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் எஸ்பி முத்தரசி தலைமையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


நடிகர் வையாபுரி குடும்பத்தினருடன் ஜெயலலிதாவை சந்தித்தார் 
நடிகர் வையாபுரி தனது குடும்பத்தினருடன் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயல லிதாவை சந்தித்தார்.  அப்போது அவர்,  தனது மகன் வி.ஷ்ரவன் உபநயன நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்துமாறு அழைப்பிதழ் கொடுத்து கேட்டுக்கொண்டார்.


காடுவெட்டி சென்னையில் கைது
பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார்.  திருவல்லிக் கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது போலீஸ்.

மாமல்லபுரம் வன்னிய சித்திரை முழுநாள் இரவு விழாவில் அனுமதித்த நேரத்திற்கு மேலாக பேசியதன் புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ராமதாசுக்கு 15 நாள் சிறை : கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ்.  காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்ப்பட்டார்.  இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார். 
இதையடுத்து  ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங் கிக்கொண்டுள்ளனர்.


ராமதாஸ் கைது எதிரொலி : செஞ்சியில் 5 பேருந்துகள் உடைப்பு - சாலைமறியல்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்படுகிறார்.   காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாமகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  செஞ்சியில் 5 பேருந்துகளை அடித்து உடைத்துள்ளனர்.   மேலும் செஞ்சியில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 500க்கும் அதிகமான பாமகவினர் கைது 
திருப்பத்தூர், நாட்டராம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, அணைக்கட்டு, வேலூர், ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் போன்ற பகுதிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக் கப்பட்டுள்ளனர்.

ராமதாசை எந்த சிறைக்கு கொண்டு செல்வது? :
காவல்துறை திணறல்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ்.  காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டார்.  இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.  
இதையடுத்து  ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவரை எந்த சிறைக்கு கொன்டு செல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.  வட தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்காணோர் கைதாகி யுள்ளனர்.  இதனால் வடதமிழகத்தில் பதட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ராமதாசை எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் எந்த சிறைக்கு கொண்டு செல்வது என்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.


மதுரை சிறையில் ராமதாசை அடைக்க திட்டம் ?
காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்படுகிறார்.
வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக இருப்பதால் தென்மாவட்டத்தில் குறிப்பாக மதுரை சிறையில் அடைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிகிறது.  
தென்மாவட்டத்தில் அடைத்தால் பதட்டம் குறையும் என்று முடிவெடுத்து மதுரை சிறையில் அடைக்க விருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து கசிகிறது.
ராமதாஸ் கைதினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை பற்றிய மேலதிக செய்திகளுக்கு எம் இணைய தளத்தோடு இணைந்திருங்கள் 


ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு - விபரம்!
 

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் வைக்கப்படுகிறார்.  அவர் கைது செய்யப்பட்டதற்கான வழக்கு விபரம் :
143, 188,சி.எல்.ஏ.7(1) (a) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், காவல்துறை தடையை மீறுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் மூன்று நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளிவர வாய்ப்பு உள்ளது என குறிப்பிடுகின்றனர்.   நாளை மே -1 என்பதால் அரசு விடுமுறை.  அதனால் நாளை ஜாமீன் வாங்க முடியாது. நாளை மறுதினம் தான் பாமக வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தடைமீறு - பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு
கடந்த 25 ந்தேதி பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டம் நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது மரக்காணத்தில் பாமகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமதாஸ் கைது எதிரொலி : விழுப்புரத்தில் 144 தடை உத்தரவு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் பிறப்பித்த உத்தரவில், ராமதாஸ் கைதை தொடர்ந்து பா.ம.க.,வினர் போராட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ராமதாசுக்கு 15 நாள் சிறை : வேலூர் சிறையில் அடைக்க முடிவு

மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (30.4.2013)காலை கைது செய்யப்பட்டார்.

மிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பொலிஸார் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை ஹோமரங்கடவல பம்புருகஸ்வௌ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பளம் கேட்டமைக்காக கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டு கையில் படுகாயங்களுடன் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைப் பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.
புத்தளம் பாலாவி பகுதியைச் சேர்ந்த லட்சுமி (38) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறான கையில் எரிகாயங்களுடன் நாடு திரும்பியவராவார்.

தயா மாஸ்டர் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதை கேட்டாலே மக்கள் சிரிக்கின்றனர்: ஐ.தே.க.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இணையத்தளங்களை ஊடறுக்க மென்பொருள் வழங்கிய நபர் கைது
இணையத்தளங்களை ஊடறுப்பதற்கு மென்பொருள் வழங்கிய நபர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டு!- காத்தான்குடி நகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றில் சரணடைந்த காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீரை எதிர்வரும் மே 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓடும் ரயில் முன் பாய்ந்து தமிழர் ஒருவர் உயிரிழப்பு! கொழும்பு, கொம்பனித்தெருவில் சம்பவம்
ஓடும் ரயிலில் பாய்ந்து தமிழர் ஒருவர் கொழும்பு கொம்பனித் தெருவில் உயிரிழந்துள்ளார்.

ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக மக்கள் நேரடியாக களம் இறங்கினால் சோவியத் ரஷ்யா போன்று இந்தியா துண்டு, துண்டாகத்தான் உடைந்து போகும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 16ம் திகதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை நடைபயணத்தை மதிமுக., பொது செயலாளர் வைகோ தொடங்கினார்.

Chennai Super Kings 164/3 (20.0/20 ov)
Pune Warriors
Chennai Super Kings won the toss and elected to bat
Innings break


புனே ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது சென்னை (நேரடி ஒளிபரப்பு)

புனே வாரியர்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

தம்பி விஜயகாந்தின் கட்சியை ஒழிக்க போராடுகிறார் ஜெயலலிதா: கருணாநிதி
தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் திருவான்மியூரில் தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
ஆசையை வெல்ல நிர்வாண பெண்களோடு தூங்கினார் காந்தி: அமெரிக்க இணையத்தளம்
இந்திய மக்களால் கொண்டாடப்பட்டுவரும் மகாத்மா காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட்.கொம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இறந்து கிடந்த பிச்சைகாரரிடமிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 42ஆயிரம் ரூபாய் பணம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நீண்ட நாட்களாக பிச்சை எடுத்து பிழைத்து வந்துள்ளார்.

வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரர் உயிரிழப்பு: யாழில்

வாள் வெட்டில் படுகாயமடைந்த கடற்படை வீரர் அனலைத்தீவு கடற்படை வை

நடிகர் பவர் ஸ்டாரை பிற கைதிகள் சந்திக்க தடை
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் 60 வயது ரங்கநாதன். தொழிலை விரிவுபடுத்த சென்னையை சேர்ந்த பாபா


ஞானதேசிகனுடன் திருமாவளவன் சந்திப்பு

மரக்காணம் கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பேன் என்று


சட்டசபையில் ஜெயலலிதா-குரு வாக்குவாதம் 

சட்டப்பேரவையில் இன்று மரக்காணம் கலவரம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பாமக உறுப்பினர் குருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன
 தமிழக முதல்வருக்கு நன்றி! : திருமாவளவன்

 

 விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட்


மு.க.அறிவுநிதி மீது
மு.க.முத்து மனைவி அளித்துள்ள புகார் மனு
 

திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.   இவரது மனைவி எம்.சிவகாமசுந்தரி.  இவரது மகன் மு.க.அறிவுநிதி பாடகர்/நடிகர். 


நார்வே திரைப்பட விழாவில் பிரபு சாலமனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது 
வெடிகுண்டு தாக்குதல் : சிரியா பிரதமர் உயிர் தப்பினார்

 சிரிய நாட்டு பிரதமர் வேயல் அல்-ஹல்கி டமாஸ்கஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது தீவிரவாதிகள் பிரதமரை நோக்கி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

Mumbai Indians won by 4 runs

29 ஏப்., 2013LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி

LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 3 நாடுகள் பாதுகாப்பு வழங்க முன் வந்ததாக குமரன் பத்மநாபன் என்று அழைக்கப்படும் கே.பி தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்துக்கான ஆயுதக் கொள்வனவில் பலகாலம் ஈடுபட்டிருந்த கே.பி 2009ம் ஆண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தார். தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ள அவர் அரசியல் களத்திலும் இறங்கவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியவண்ணம் உள்ளது. இதேவேளை இவ்வார இறுதியில் அவர் கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் 2008ம் ஆண்டு புலிகளுக்கு சுமார் 3 நாடுகள் பாதுகாப்பை வழங்க தயாராக இருந்ததாக கூறி புதுக் குண்டு ஒன்றைப் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் !

இரண்டு ஆபிரிக்க நாடுகளும், ஒரு ஆசிய நாடும் இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த நாடுகள் என்று அவர் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை. அக் கேள்வியையும் அவர் தவிர்த்துகொண்டுள்ளார். இருப்பினும் போர் நடைபெற்ற காலப்பகுதியான 2008ம் ஆண்டிலேயே இது நடைபெற்றதாக அவர் மேலும் விபரித்துள்ளார். அத்துடன் தாம் 2008ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை யுத்த நிறுத்தம் குறித்து வலியுறுத்தி வந்த போதும், அவர் இதனை கருத்தில் கொள்ளவில்லை என்றும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் பின்னர், யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பில் புலிகள் தன்னிடம் ஆலோசித்ததாகவும் இருப்பினும் அப்போது காலம் கடந்துவிட்டது என்றும் கே.பி மேலும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவர் குறிப்பிடும் 2008ம் ஆண்டு போர் நிறுத்தமானது கோட்டபாயவால் நெறிப்படுத்தப்பட்டது ஆகும். விடுதலைப் புலிகள் எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்காது, தமது ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையவேண்டும் என்பதே அப்போதைய இலங்கை அரசின் போர் நிறுத்தமாக அறிவிக்கப்பட்டது. அப்படி என்றால் நிபந்தனை அற்ற சரணடைவையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் அதற்கு அடிபணியவில்லையே ! அவர்கள் இறுதிவரை போராடினார்கள். தற்போது வந்து 3 நாடுகள் உதவ இருந்தது 2 நாடுகள் உதவியது என்று கூறுவது எல்லாம் தன்னை நியாயப்படுத்த அவர் கூறும் கூற்றாக அல்லவா இருக்கிற


LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி

LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 3 நாடுகள் பாதுகாப்பு வழங்க முன் வந்ததாக குமரன் பத்மநாபன் என்று அழைக்கப்படும் கே.பி தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்துக்கான ஆயுதக் கொள்வனவில் பலகாலம் ஈடுபட்டிருந்த கே.பி 2009ம் ஆண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தார். தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ள அவர் அரசியல் களத்திலும் இறங்கவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியவண்ணம் உள்ளது. இதேவேளை இவ்வார இறுதியில் அவர் கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் 2008ம் ஆண்டு புலிகளுக்கு சுமார் 3 நாடுகள் பாதுகாப்பை வழங்க தயாராக இருந்ததாக கூறி புதுக் குண்டு ஒன்றைப் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் !

வெனிசுலா செல்ல முயன்ற இலங்கை அமைச்சர் அமெரிக்க விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்
மியாமி விமான நிலையம் வழியாக வெனிசுலா செல்ல முயன்ற  இலங்கை அமைச்சர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

resize_20130428070201

விஜயகாந்துடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! தமிழகத்தில் பரபரப்பு! மூன்றாவது அணியா?


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

தமிழ் நாட்டு ராஜ பக்சேவும் சித்திரை முழுநிலவும் ....... 
ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள், முசுலீம் எதிர்ப்பு இந்துமத வெறி பாசிசத்தை முன்னிறுத்தி அட்டூழியங்களை எப்படிச் செய்து வருகின்றனவோ அப்படியே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை நிறுத்தி மோடியைப் போல

அரசுக்கு எதிராக கடும் தீர்மானம் மேற்கொள்ள போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு!
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி கடுமையான தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கணவனிடமிருந்து நட்டஈடு கோரி இலங்கை பெண் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு
சென்னையில் வாழும் தனது கணவனிடமிருந்து 20 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி இலங்கை பெண் ஒருவர் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஆபாசத் தளங்களைவிட மோசமான செய்தித் தளங்கள்!

செய்தித் தளங்கள் என்ற பெயரில் வலம் வரும் சில இணையத் தளங்கள் இன்று ஆபாசம் நிறைந்த காமத் தளங்களை விடக் கேவலமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. அரசியல், நாட்டு நடப்புகள், சமூக முன்னேற்றக் கட்டுரைகள், வரலாறுகள்,


டக்ளஸ் தேவானந்தாவுக்கு பகிரங்க மடல்

300 வரையான உள்ளுர் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் உள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி உணவகம் (கன்ரீன்) என்ன நிலையில் நடக்கிறது என்று தெரியுமா? 12 சமையல் பணியாளர்கள் நியமனம் செய்யக்கூடிய இடத்தில்

கூட்டமைப்போடு இணைந்து பயணிப்போம்! தந்தை செல்வா நினைவுப் பேருரையில் ஆனந்தசங்கரி

தந்தை செல்வாநாயகத்தின் 36 ஆவது நினைவு தினமான கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.


ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபை செயற்குழு கூட்டம்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) விசேட பொதுச்சபைக் கூட்டம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தர்த்த்தன் அவர்களின்

என்னை இடைஞ்சலாக கருதினால், பொறுப்பானவர்களிடம் கட்சியை கையளித்து விட்டு ஒதுங்கத் தயார் – ஆனந்தசங்கரி!


மண்தின்னி – மகேஸ்வரிநிதியம்

கடந்த 04 வருடங்களில் வடமராட்சி கிழக்கில் ரூபா 4,000 மில்லியன் மண்கொள்ளை – தொடர்ந்து பல்லாயிரம் மில்லியன் மக்களின் பணம் கொள்ளையடிக்கத் திட்டம் – தட்டிக்கேட்பவர்கள் யார்?

28 ஏப்., 2013


தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி ஏனைய கட்சிகள் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரெலோ மாநாட்டில் தீர்மானம்


தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒ

காலத்தின் தேவை கருதி பிரான்ங்போர்ட் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு

இவ் எழுச்சி நிகழ்வில் குறிப்பாக இளையோர்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். கவனயீர்ப்பு போராட்டம் இந்திய தூதரகத்தை சென்றடைந்ததும் தமி

தலைவர் குடும்பம் எங்கே? யுவதிகளிடம் விசாரணை செய்யும் படையினர்! புதிய போர்க்குற்ற ஆதாரம்!
40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் எண்ணிலடங்கா தமிழர்கள் இலங்கை அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி வெற்றி: 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது(வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். தொடரின் இன்றைய 38 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுமி முத்து லட்சுமி 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டாள். இருப்பினும் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தாள்.

27 ஏப்., 2013


கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி! மீட்பு பணி தீவிரம்!
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலெட்சுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 
பாதிரிப்பட்டி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன்
உல்லாசத்துக்கு வர மறுப்பு: சித்தியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவ்வாத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் புகழேந்தி (வயது22). அதே பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி ராஜம்மாள் (30)

உலகின் சக்திவாய்ந்த 27 நாடுகளின் பட்டியல் – இந்தியாவுக்கு 8வது இடம்!

வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவெடுக்க வாய்

சிறுமி மீது துஸ்பிரயோகம்! பருத்தித்துறையில் ஒருவர் கைது!

 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சியில் பா.உ சிறீதரன், மாவை சேனாதிராசாவை சந்தித்து ரணில் கலந்துரையாடல்
யாழ்.மாவட்டத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான

கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் பயன் கிட்டவில்லை. எனவே மறுபடியும் ஆழ்துளை கிணறு அருகே

நடுவீதியில் துப்பாக்கி வெறியாட்டம்!! பொது மக்கள் படுகொலை!!! (காணொளி)

 இச் சம்பவமானது வியாழக்கிழமை 14h00 மயியளவில் Berre நீர்க்கரையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்துள்ளது. இதில் வீட்டு முன்பகுதியில் நின்று வேலை கொண்டிருந்த 35 மற்றும் நாற்பது வயதுடைய இரு ஆண்களை இந்த Istres  ஐச் சேர்ந்த 19 வயது இளைஞன்

தமிழ்நாடு கரூரில் ஆழதுனைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுமியை காப்பாற்றும் முயற்சி நேரடி ஒளிபரப்பை புதியதலைமுறை தொலைக்காட்சியில் காணலாம் 
www.puthiyathalaimurai.tv

கிளிநொச்சி அறிவகத்தில் மாற்றுக்கொள்கை பிரதிநிதிகளுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!


இலங்கை அரசால் தொடர்ச்சியாக மக்கள் துன்புறுத்தப்பட்டு அவர்களது வாழ்வாதாரத் தொழில்களும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன” என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவருக்கு வலைவீச்சு!- சிங்கள ஊடகம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது,
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர          "இது நீங்கள் மவுனமாக இருக்க  வேண்டிய நேரமல்ல. நீங்கள் அமைதியாக இருந்தால் உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது  போலாகிவிடு


6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 35-வது லீக் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று பஞ்சாப் அணி

வீரத்தமிழன் மேதகு பிரபாகரன் அவர்களிடம் இருந்த 56 படைத்துறைகளின் தொகுப்பு


சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சரின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
நாகர்கோவில் ராமவர்ம புரத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான சுரேஷ் ராஜனின் வீடு உள்ளது

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஈழத் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்திற்கு தென்சூடான என்றும் துணையிருக்கும் எனத் தெரிவித்துள்ள தென்சூடானிய அரச பிரதிநிதிகள், அனைத்துலக அரங்கில் தமிழர்களின் நியாயப்பாட்டுக்கு

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவே அதிகளவில் உதவியது!- அமெரிக்கத் தூதுவர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கைக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஷன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்வதை தடுக்குமாறு கருணாநிதி கோரிக்கை
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளையெல்லாம் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை இந்திய அரசும் உலக நாடுகளும் தலையிட்டு நிறுத்துமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர் திருவிழா படங்களை தொகுத்து தருகிறோம் www .kannakipuram .blogspot .com 

26 ஏப்., 2013

5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
ஐ.பி.எல். கிரிகெட் போட்டியின் 34-வது லீக் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

குழந்தையை தாராளமாக படம் பிடிக்க அனுமதித்த ஐஸ்வர்யா ராய்
 

கருணா அம்மானுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி பறிபோனது
ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வகித்து வந்த ஸ்ரீலங்கா

சிவகீர்த்தா பிரபாகரனை மட்டு. மாநகர சபைக்கு விசேட ஆணையாளராக நியமிக்க நடவடிக்கைகள்
கலைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் அவர்களை மட்டு. மாநகர சபைக்கு விசேட ஆணையாளராக நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியவருகின்றது.

சென்னை IPL போட்டியில் போராட்டம் நடத்த இருந்த 40 மாணவர்களைக் கைது!

ஆனால் மாணவர்களின் தொலைபேசி எண்ணை தந்திரமாக ஒட்டுக் கேட்ட காவல் துறை மாணவர்கள் கிரிக்கெட் திடலுக்கு அருகே வந்த போது, 40 மாணவர்களை கைது செய்தது.சென்னையில் நடக்க

வட மாகாணசபை தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி! – தயாமாஸ்டர்

நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. இதற்காக இரு கட்சிகள் என்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு அணுகியிருந்தன. இலங்கையில் உள்ள முக்கிய தேசியக் கட்சியொன்றும் வடக்கில் உள்ள அரசியல் கட்சியொன்றும் இவ்வாறு என்னைக் கேட்டுள்ளன. நான் எந்தக் கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றார். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த போது அவருடன் இது தொடர்பான சந்திப்பொன்றை நடத்தியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

யாழ் பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை


கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - 2013 நிர்வாக உறுப்பினர்கள் .


ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம்'
Canada - Old Students’ Association of Pungudutivu
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - 2013

கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2013வது ஆண்டிற்கான பொதுக்கூட்டம் மார்ச் 31, 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. மேற்படி பொதுக்கூட்டத்தில் நடப்பாண்டு நிர்வாகிகளாக அருண் குலசிங்கம்(தலைவர்), எஸ்.எம். தனபாலன்(செயலாளர்;), கதிர் மகாத்மன்(பொருளாளர்), மற்றும்; ஜம்போதரநாதன் விஸ்வலிங்கம்(உபதலைவர்), கைலையநாதன் கோபாலபிள்ளை(உபசெயலாளர்), மணிக்கவாசகர் தம்பிப்பிள்ளை(நாதன்)(உபபொருளாளர்), மற்றும் உறுப்பினர்களாக கருணாகரன் ஸ்ரீஸ்கந்தராசா, ரகுராம் சோமசுந்தரம், மார்க்கண்டு சுகுணேஸ்வரன், குமார மனேகரன், பிரபா நல்லதம்பி, விஜய் கார்த்திகேசு, சோமசுந்தரம் பசுபதிப்பிள்ளை(விசு), திருநாவுக்கரசு கருணாகரன், வடிவேல் நிமலகாந்தன், கணேசபிள்ளை கணேசலிங்கம் (தாசன்), சங்கரலிங்கம் சதானந்தலிங்கம், மயில்வாகனம் ஜெயகாந்தன், அனுராகரன் குலசேகரம்பிள்ளை, துரை ரவிந்திரன், கந்தையா மதியழகன், மற்றும் போசகர்களாக நல்லையா தர்மபாலன், சண் சதாசிவம், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2013ம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் மோர்னிங்சைட் பார்க்கில் ஆகஸ்ட் 04இ2013 (யுரபரளவ 04இ2013) ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்தின் முன்னாள் போசகர் அமரர் இராமலிங்கம் இராசையா அவர்களின் ஞாபகார்த்த திடலில் நடைபெறவுள்ளது. ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்களுக்கான அன்பளிப்புகள், மற்றும் புங்குடுதீவில் கல்விகற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான நிதியுதவிகளை வழங்க விரும்புவோர் இவ்வாண்டிற்கான நிர்வாகசபை உறுப்பினர்களிடம் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்.
தலைவர் செயலாளர் பொருளாளர்
அருண் குலசிங்கம் ளு.ஆ. தனபாலன் கதிர் மகாத்மன்
மேலதிக தொடர்புகளுக்கு:- 416-357-2847 647-290-5856 647-465-3720 

தந்தை தாயை வெட்டிக் கொலை செய்வதற்கு மகள் விளக்கு பிடித்த பிடித்த கொடூரம்


ஏறாவூர். மட்டு. அலிகார் தேசியப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் வைபவம் பாடசாலை முன்றலில் நடைபெற்ற போது இவ் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
chenkalady_c1

கண்களை பரிசாக கேட்ட மகள் காதலன் திடுக்கிடும் தகவல்

நால்வரையும் மே மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். இந்த இரட்டைக் கொலை தொடர்பில் கைதானவர்களில் கொலையுண்ட தம்பதியினரின் 16 வயதான மகளான தலக்ஷனா உட்பட நான்கு பாடசாலை

25 ஏப்., 2013


தனுஷ் படப்பிடிப்பில் விபரீதம் :
2 துணை நடிகைகள் பலி
நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய எ.சற்குணம் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின்போது விபரீதம் ஏற்பட்டுள்ளது.  இடமலையில் குளத்தில் மூழ்கி விஜி,சரசு என்ற 2 துணை நடிகைகள் உயிரிழந்தனர். 

பாமக - வி.சி. கட்சியினரால் மரக்காணத்தில் கலவரம் :
போலீஸ் துப்பாக்கிச்சூடு
 சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று இரவு வன்னியர்கள் கூடும் விழா நடை பெறுகிறது.  இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வன்னியர்களும்,


மரக்காணத்தில் கலவரம் : முந்திரிக்காட்டுக்குள் பயணிகள் பஸ் கடத்தல்
 சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று இரவு வன்னியர்கள் கூடும் விழா  நடை பெறுகிறது.  இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வன்னியர்களும், பாமகவினரும் மாமல்ல புரத்தில் திரள்கிறார்கள்.


குடும்பப்பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் :
கமல், பிரகாஷ்ராஜ் மீது புகார்
 

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார்.  அவர், விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த

பழிக்குப்பழி : தாய் - மகளை கற்பழித்த 6 பேர் கொண்ட கும்பல்
பீகார் மாநிலம் சேம்பரன் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ஒரு இளம் பெண்ணை காதலித்து அவளுடன்  ஓடிவிட்டான். 


முதலையுடன் குத்துச் சண்டை ! உயிர் தப்பும் போராட்டம்


ஒன்பது முன்னாள் புலிகள் யாழில் கைது

புலனாய்வுப் பிரிவு தகவல்களுக்கு அமைய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள்

முதல்ல குடியுரிமை கொடுங்க! அப்புறமா அறிவுரை சொல்லலாம்! தமிழக அதிகாரியை முற்றுகையிட்ட இலங்கை அகதிகள்

உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, படகு பழுதாகி 120 அகதிகள் நடுக்கடலில் தத்தளித்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககாரவிற்கு எதிர்த்து ஐதராபாத்தில் போராட்டம்!

 தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்கள அரசினைக் கண்டிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம்பெற தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Mumbai Indians won by 5 wickets (with 1 ball remaining)

24 ஏப்., 2013திருநங்கைகளுக்கான அழகி போட்டிPhotos

    திருவண்ணாமலை மாவட்டம்,   திருவண்ணாமலை – சேத்பட்  செல்லும் வழியில் உள்ளது வேடந்தவாடி கிராமம். இக்கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா 22ந்தேதி தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்துக்கொண்டனர். 

டுபாய் ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம்: 19 தமிழர்களின் நாடுகடத்தல் நிறுத்தப்பட்டது! 11 பேரை அமெரிக்கா உள்வாங்கியது!
டுபாயில் தஞ்சமடைந்திருந்த ஈழத்தமிழ் அகதிகளில் 19 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என்ற நிலையில் தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானwww.news.lk  இனந்தெரியாத நபர்களினாலேயே சற்று முன்னர் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த 3ம் திகதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 9 அணிகள் விளையாடி வருகிறது.
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத் தேர்த்திருவிழா   மற்றும் தீர்த்த திருவிழா வைபவங்கள் இன்று 24  புதன் ,25 வியாழன் காலை இலங்கை நேரம் 9 க்கு நேரடி ஒளிபரப்பாகவுள்ளன.கண்டு களியுங்கள் 
www .sivantv .com 
Europe Champion Leage  Semi Final 1 st Round

Bayaern münchen -Barcelona 4-0
புனே வாரியர்ஸ் அணியை பந்தாடியது ராயல் சேலஞ்சர்ஸ்: 130 ரன்களில் அபார வெற்றி
ஐ.பி.எல். போட்டியில் இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற புனே அணி பந்துவீச முடிவு செய்தது.

Royal Challengers Bangalore won by 130 runs

ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிடம் கோரியுள்ளது.
ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியாக உன்னிப்பாக

ad

ad