புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013


நக்கீரன் எக்ஸ்குளூசிவ் செய்தி :
ஜெ.,வுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் வைத்த ஆப்பு
 


ர்நாடகாவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கக்கூடிய நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதில் புதிய நீதிபதியாக முடிகவுடர் என்கிற நீதிபதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அத்வானியின் காலை தொட்டு வணங்கிய மோடி

மத்திய பிரதேசம் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று பாரதீய ஜனதா கட்சியின் பேரணி,  தலைநகர் போபாலில் நடைபெறுகிறது. இந்த பேரணியில் கட்சியின் தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இன்றைய தினம் தனது வாய் மூல அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார்.
சுவிட்சலாந்து நேரம் 2.00 மணிக்கு பிற்பாடு ( இலங்கை நேரம் 5.30 பி.ப) சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் அறிக்கையில் அண்மையில் இலங்கை சென்று வந்த விடயங்கள் இடம் பெற உள்ளமையால் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் பலத்த ஆர்வத்துடன் உள்ளமை இங்கு அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் வட மாகாண முதலமைச்சரை சந்திக்க உள்ளார்!
அடுத்த மாதம் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.
முடிந்தால் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றிப் பார்க்கட்டும்! முதலமைச்சருக்கு விமல் வீரவன்ஸ சவால்
வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ஸ சவால் விடுத்துள்ளார்.
நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்! வடமாகாண தேர்தல் குறித்து அனந்தி சசிதரன் பேட்டி-விகடன் 
அளவில் பெரிய கொழும்பு வெற்றிலை காரம் குறைவானது. அளவில் சிறிய யாழ்ப்பாண வெற்றிலை மிகவும் காரமானது. கொழும்பு வெற்றிலையை யாழ்ப்பாண வீடுகள் வீழ்த்தி இருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.  அதாவது, ராஜபக்ச கூட்டணியின் சின்னம் வெற்றிலை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் வீடு. 



              தேர்தல் நெருங்கும் காலங்களில் எல்லாம் தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி மூன்றாவது அணி என்ற நாடகம் நடத்தப்படுவதைப் பார்க்கலாம். ஆனால் தேர்தல் கூட்டணிகள் முடி வாகும் நேரத்தில் இந்த நாடக கோஷ்டிகள் கம்பெனியை கலைத்துவிட்டு ஏதாவது ஒரு பெரிய கட்சியில் துண்டுபோட்டு இடம் பிடிப்பதற்காக அலைமோதும் காட்சியையும் கூடவே பார்க்கலாம். திரும்பத் திரும்ப இதுதான் நடந்துகொண்டிருக் கிறது.

அண்மையில் பா.ஜ.க.வை மையமாக வைத்து தமிழகத்தில் இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப் படுகிறது.




            ""ஹலோ தலைவரே... பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கும் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இப்ப சுப்ரீம் கோர்ட்டில்தான் பரபரப்பா இருக்குது.''


பட்ஜெட் பஞ்சாயத்து!

           "இந்த சினிமா நூற்றாண்டு விழாவுக்கான பட்ஜெட் 35 கோடி ரூபாய்' என விழாத் தலைவரான "ஃபிலிம் சேம்பர்' கல்யாண் அறிவித்தார்.

தமிழக அரசு சார்பில் பத்துகோடி, நிகழ்ச்சி ஒளிபரப்பு உரிமை மூலம் ஜெயா டி.வி. தரப்பில் 5 கோடி, பி.வி.பி. நிறுவனம் தெலுங்கு, மலையாள, கன்னட ஒளி பரப்பிற்காக 12 கோடி என 27
நாளை திருச்சி வருகிறார் நரேந்திர மோடி
திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நாளை வியாழக்கிழமை (செப். 26) திருச்சி வருகிறார்.

முதலமைச்சராக விக்கினேஸ்வரனை நியமிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம்

வடமாகாணசபை முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை நியமிப்பதற்கு ஏகமனதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளமை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் பலியானதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க ஐந்து நாடுகள் முயற்ச
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு ஐந்து நாடுகள் முயற்சித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது,
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை!– அரசாங்கம்
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு
நியூயோர்க் ஐ.நா சபையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை
நியூ யோர்க் - ஐக்கிய நாடுகள் சபையின் 68வது வருடாந்த கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கூட்டத்தொடரின் இன்று 1 மணிக்கு தனது உரையினையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது அவர்கள், இலங்கையின் போருக்குப் பின்னரான நிலைமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நாட்டின் ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடாத்த இலங்கை அரசு எடுத்த முயற்சியையும், நல்லிணக்க
அனந்தியின் வீட்டின் மீது முன்னாள் புலிகளே தாக்குதல் நடத்தினர்!– திவயின - 
வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அனந்தி சசிதரனின் வீட்டின் மீது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வல்லிபுனத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த்து.
ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை குறித்து அன்புமணி ராமதாஸ் ஆற்றிய உரை
இலங்கை வடக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கைகளில், தமிழ்ப் பெண்களை மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
இலங்கையில் ஐ.நா தோல்வியடைந்து விட்டது: ஒப்புக் கொண்டார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக் கொண்டுள்ளார்.
Raghuvannan-marriage-Photo
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள். என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய

கடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையிலும் காணப்பட்டதாக
, கொமன்வெல்த் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். இந்த தேர்தல்கள் நடந்த விதத்தை நேரடியாக கண்காணித்த கொமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக்
கென்யத் தலைநகர் நைரோபியின் வெஸ்ட்கேட் ஷாப்பிங் காம்பிளக்ஸ் வர்த்தக வளாகம், தீவிரவதிகளின் முற்றுகைக்குள்ளாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையிlல், இவ்வளாகத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்கில் ஆயுததாரிகள் யாரும் எஞ்சியிருக்கிறார்களா என்று வர்த்தக வளாகத்திற்குள் துருப்பினர் தேடிவருகின்றார்கள்.BBC
செவ்வாய்க்கிழமை காலையிலும்கூட அந்த இடத்தில் வெடிச்சத்தமும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டிருந்தது. ஆனால் தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பின்னர் கூறினார்.
இந்த வாரமும் , கடந்த வாரமும் "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் இலங்கை மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகப் பல கட்டுரைகள் வெளியாகியிருந்தன. "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டின் பத்தி எழுத்தாளர் "Rosie DiManno" இலங்கை நிலவரங்களை நேரில் சென்று அவதானித்துக் கட்டுரைகளை அங்கிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறார். இன்று அவர் எழுதி "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் வெளியான கட்டுரையின் தலைப்பு "New era begins after Tamils win key election". அந்தக் கட்டுரையில் // Tamils were not bought off by the extensive reconstruction, all the multi-millions - from China, mostly-poured into new roads , new infrastructure, new hospitals, new commercial buildings, even a new sports stadium that's going up outside the new trail station.// இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா

போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில் பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின்

பாரதிய ஜனதாவில் ரஜினி. விஜயகாந்த் அதிர்ச்சி. ஜி.கே. வாசன் உள்பட பல தலைவர்கள் ரஜினியுடன் இணைய அதிரடி முடிவு

வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக “சோ” அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை
ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. 
காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா–தே.மு.தி.க.–ம.தி.மு.க. ஓரணியில் திரள வேண்டும்: தமிழருவி மணியன் பேட்டி
காந்தீய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறியதாவது:–
தமிழகத்தில் நடந்து வரும் கச்சத் தீவு பிரச்சினை,
திரைத்துறையில் பெரும்பங்காற்றியவர் ஜெயலலிதா: ஜனாதிபதி பாராட்டு

சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது:-
16 மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் விடுதலையானார் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் முதல்–மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 
ஜெகன் மோகன் ரெட்டி முறைகேடாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 27–ந்தேதி கடப்பா தொகுதி எம்.பி.யான ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதா, அமிதாப், ஸ்ரீதேவி உட்பட 41 பேருக்கு பதக்கங்களை வழங்கினார் பிரணாப் முகர்ஜி
முதல்வர் ஜெயலலிதா உள்பட திரைத் துறையில் சாதனை படைத்த 41 பேருக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா பதக்கங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை தாக்கல்

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 24வது கூட்டத்தொடர் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் உலகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இலங்கையில் நடந்த ராஜபக்சே அரசின் மனித
விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவில் புலனாய்வாளர்களை புகுத்த கோத்தபாய திட்டம்
வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவிற்குள் அரச புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகளை இரகசியமான முறையில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது.
நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம் - இந்திய உதவிகள் இனி வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே சு.நாச்சியப்பன்
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்!- நாராயணசாமி நம்பிக்கை
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பார் என இந்திய மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி இன்று தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கை இராணுவ அச்சுறுத்தல்: கொமன்வெல்த் குழு கடும் சாட்டம்- [ பி.பி.சி ]
கடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையிலும் காணப்பட்டதாக, கொமன்வெல்த் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.
டுவிட்டரில் பதிலளிக்கும் ஜனாதிபதி மகிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், நியூயோர்க்கில் இருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்!- நாராயணசாமி நம்பிக்கை
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பார் என இந்திய மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி இன்று தெரிவித்தார்.
பலத்த சர்ச்சைகளின்  பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டமைப்பு கூட்டம் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுகாலை முதல் மாலைவரையில் தமிழரசுக் கட்சியின் யாழ் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிபெற்ற தோல்வியடைந்த அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ad

ad