புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2011









பிரான்சின் சோசலிச கட்சிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!
[ வியாழக்கிழமை, 26 மே 2011, 12:13.53 PM GMT ]
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி, பிரான்சின் முதன்மைக் கட்சிகளில் ஒன்றாகவும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்ற (PSF) சோசலிச கட்சிப் பிரதிநிதிகளுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மே-15 புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 
பிரான்சு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சோசலிச கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் மக்கள் பிரதிநிதி சுபா குருபரன் உள்துறை அமைச்சு செயலர் ரமேஸ் பத்மநாதன் பங்கெடுத்திருந்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள்,
தமிழர்களுடைய அரசியல் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், சிறிலங்கா அரசின் இனவாதப் பிடிக்குள் சிக்குண்டு தமிழினம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டதாக தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ள சர்வதேச விசாரணை மற்றம் அனைத்துலக பொறிமுறை ஆகிய பிரதான விடயங்களை ஐ.நா. சபை நடைமுறைப்படுத்த பிரான்சு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரப்பட்டதோடு இதற்கு வழிகோலும் முகமாக பிரான்சு நாடாளுமன்றத்தில் இது குறித்து விரிவான விவாதத்தை முன்னிறுத்துமாறும் கேட்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்



வெள்ளைக்கொடி ஏந்தியவாறு புலிகள் சரணடைய வரவில்லை

சரத் பொன்சேகா சாட்சியம்

[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-26 09:38:57| யாழ்ப்பாணம்]


Sarath Fonsekaஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடி ஏந்தி விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எவரும் வரவில்லை எனவும் யாரும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்றும் முப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நான்காவது நாளாக சரத் பொன்சேகா சாட்சியம் அளித்தார்.

தன்னை நேர்காணல் செய்யும்போது பெட்ரிக்கா ஜேன்ஸின் கையில் குறிப்பு புத்தகம் எதுவும் இருக்கவில்லை எனவும் நேர்காணலின் பின்னரே தன்னைப் பழிவாங்கவென குறிப்பு புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மேலும் வெள்ளைக் கொடியேந்தி வந்த புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கூறியதான ஒரு வசனத்தை தான் ஒருபோதும் பெட்ரிகா ஜேன்ஸிடம் கூறவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனினும் நேர்காணல் முடிந்ததும் வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் ஊடகவியலாளர் மூலமே தானும் அப்படியயாரு தகவலை அறிந்து கொண்டதாகவும் கூறியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யுத்தகாலத்தின் போது தனது அனுமதியின்றி பாதுகாப்புச் செயலாளர் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகவும் ஜனாதிபதி தன்னை தூற்றும் வகையில் பேசியதாகவும் தெரிவித்த சரத் பொன்சேகா, அரசியலுக்கு வரும் எண்ணம் கொண்டிராத தான் மோசடி அரசியல்வாதிகளிடமிருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வெள்ளைக்கொடி விவகார வழக்கு இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம்: அப்ரூவல் ஆகிறார் சரத் பொன்சேகா
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.


கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் சாட்சியமளிக்கும்போது அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா மேலும் கூறியிருப்பதாவது, வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயா ராஜபக்சே உத்தரவிட்டிருந்ததாக போரின் இறுதிக் கட்டம் வரை ராணுவத்தினருடன் தங்கியிருந்த செய்தியாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.

அதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு செய்தியாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு இருந்தார். நேர்காணலின் போது அவர் எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட  ரீதியில் பேசும்போது நான் மேற்கண்ட விஷயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன்.

ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து ராஜபக்சே கும்பல், போரின்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது பழிபோட முயன்றது. இந்நிலையில் சரத் பொன்சேகா கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம் அளித்திருப்பது ராஜபக்சே கும்பலை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.










இலங்கை - ஐ.நா. சபைக்கும் இடையில் அமைதி காப்பு படை உடன்படிக்கை! போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கையின் சார்பில் கைச்சாத்து!
[ வியாழக்கிழமை, 26 மே 2011, 07:29.53 AM GMT ]
அமைதி காப்பு உடன்படிக்கையில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் கைச்சாத்திட்டன. ஆனால் ஐ.நா.சபையின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக உள்ள போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கையின் சார்பில் கைச்சாத்திட்டமை  நியாயமான செயலா? என்று இன்னர் சிற்றி பிரஸ்  கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த உடன்படிக்கை இந்த வாரத்தில் கைச்சாத்திடப்பட்டதாக நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளரான மார்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் போர்க்குற்றவாளியும் இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியுமான சவேந்திர சில்வா, கையெழுத்திட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் பேச்சாளரிடம் சுட்டிக்காட்டி இந்த எந்தளவிற்கு நியாயமான செயல் என்று கேள்வி எழுப்பியது

இதற்கு பதிலளித்த நெசர்கி, ஐக்கிய நாடுகள் சபை, தனிப்பட்டவர்களுடன் அல்லாமல் இலங்கை அரசாங்கத்துடனேயே இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு பணியில் ஈடுபடுவோர் அவர்களின் நாட்டில் எந்த ஒரு மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடாதவர்களாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக நெசர்கி குறிப்பிட்டார்.
இது இராணுவ அதிகாரிகளுக்கும் பொருந்தும். இந்தநிலையில் அவ்வாறானவர்கள் சோதனைகளின் பின்னரே ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு படைக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் என்றும் நெசர்கி குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட இன்னர் சிற்றி பிரஸ், சவேந்திர சில்வா, அண்மைக்காலம் வரை யுத்தகளத்தில் ஈடுபட்ட ஒருவராவார். அவர் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மீறல் ஒழுங்குகள் பின்பற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு உரிய பதிலை அளிக்காத மார்டின் நெசர்கி, பின்னர் இலங்கையுடனான உடன்படிக்கையில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹனவே கைச்சாத்திட்டார் என்று குறிப்பிட்டார். 

ஒத்திவைக்கப்பட்ட உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள் எதிர்வரும் யுலை மாதத்தில் நடத்த அரசு தீவிரம் - தமிழர் மண்ணில் வெற்றியை பெறுவதற்காக அதீத பிரயத்தனங்களை ஆரம்பித்துள்ளது.
[ புதன்கிழமை, 25 மே 2011, 09:33.31 PM GMT ]
வடக்கில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுர் அதிகார சபைக்கான தேர்தல்கள் எதிர்வரும் யுலை மாத்தில் நடத்தப்படுமென அமைச்சர் பசில் இன்று தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே பசில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே நடத்தப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தல்களில் கிழக்கு மற்றும் வன்னி தேர்தல் தொகுதிகளில் தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு அமோக வாக்களித்து பெருவெற்றியை தேடிக்கொடுத்துள்ள நிலையில் சிங்கள அரசாங்கம் போர் வெற்றியை கொண்டு தமிழர் வாழும் பிரதேசங்களில் நடத்திய அரசியலில் படுதோல்வி அடைந்துள்ளமையை சர்வதேசம் உணரத்தலைப்பட்டுள்ளமையை கண்டு அச்சமுற்றுள்ள அரசாங்கம் அதை முறியடிக்க வடக்கில் தமிழர் மண்ணில்
வெற்றியை பெறுவதற்காக அதீதபிரயத்தனங்களை ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே அமைச்சர் பசில் தலைமையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பழைய வேட்பாளர்கள் புதிய வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் போட்டியிடும் வகையில் இத்தேர்தல் நடைபெறும் எனவும் தகவல்கள்
வெளிவந்துள்ளன. நடைபெற இருக்கும் இத்தேர்தல் பிரச்சாரங்களுக்காக வடக்கில் தமிழர்களின் தேர்தல் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் 3 கபினற் அமைச்சர்களையும் 3 பிரதி அமைச்சர்களையும் அரசாங்கம் இறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா சபையின் போர்குற்ற அறிக்கையால் மிகவும் பின்னடைவை சர்வதேச அளவில் சந்தித்துள்ள மகிந்த அரசாங்கம் தமிழர்களை இப்போர் குற்ற அறிக்கைக்கு எதிராக கையெழுத்திட வற்புறுத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஒரு புறம் தமிழர்களின் ஆறாரணங்கள் மீது ஈட்டி பாயச்சுவதுபோன்றிருக்க இன்னொரு புறத்தில் எப்படிப்பட்டேனும் தமிழர்களின் வாக்குகளை பிடுங்கியெடுத்து தமிழர்கள் தம் பக்கமே என்ற மாயையை உருவாக்க இவ்வுள்ளுராட்சி சபை தேர்தல்களில் அரச கங்கணம் கட்டி நிற்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆயினும் தமிழர்களில் ஆழ்மனக்கிடக்கைகளை எப்போதும் புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் காட்டும் முனைப்புக்களால் எஞ்சுவது படுதோல்வியே என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.






அரசு பேச்சை முறிக்கும் என தெரிந்து கொண்டு எதற்காக பேசுகிறீர்கள்- கூட்டமைப்பிடம் சிறிகாந்தா கேள்வி!

Published on May 25, 2011-6:01 pm   ·   No Comments
அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வருகின்ற பேச்சுக்கள் முறியும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு கருதினால் அதிலிருந்து  உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியேறவேண்டும் அதைவிடுத்து அரசாங்கமே முறிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது எந்த வகையான அரசியல் என்று தமக்கு தெரியவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் சிறிகாந்தா இன்று மாலை அதன் யாழ். அலுவலகத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசாங்கமே அரசு கூட்டமைப்புப்பேச்சுவார்த்தைகளை முறிக்கும் என்று தெரிவித்தாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்த நேரத்தில் சில விடயங்களை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய கடமைப்பாடு தமிழ் மக்கள் சார்பில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்புக்கும் இருக்கின்ற காரணத்தினால்தான் அதன் தலைவர் என்ற வகையில் நானும் செயலாளர் என்ற வகையில் சிவாஜிலங்கமும் கட்சியின் தலைமைக் குழுவிற்கமைய இந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்த ஒழுங்கு செய்திருந்தோம்.

பேச்சு வார்த்தைகள் சரியான இடத்திலே அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையிலே இல்லை என்பதே பிரேமச்சந்திரனின் கூற்று மாத்திரமல்ல சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூற்றுக்களும் தெளிவுபடுத்துகின்றன. இது கவலைக்குரிய விடயம்  ஐக்கிய இலங்கைக்குள்ளே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் பேசியாகவேண்டிய கட்டாயமான நிலைமையில் தமிழர் தரப்பு தள்ளப்பட்டிருக்கின்றது.

தமிழர் தரப்பினுடைய மிகப்பிரதான அரசியல் கட்சி என்ற முறையிலே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு அதனுடைய பங்கு இந்த விடயத்தில் இருப்பதை எவரும் மறுக்க முடியாது ஆனால் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தானாக முறிக்கும் என்று சொல்லுகின்றபோது. இந்தப்பேச்சுவார்தையின் நோக்கமே அர்த்த மற்றுப் போய் விடுகின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் கூட இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகின்றது.

பேச்சுவார்த்தைகள் உரிய முறையிலே சரியான தடத்திலே  நடைபெற வேண்டும் என்ற அவசியத்தை இந்தச் சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். கடந்த காலங்களிலே குறிப்பாக 70 களின் பிற்பகுதிகளிலும் 80களிலும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவோடு அன்றைய பிரதான தமிழ்க் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணி தொடர்ந்து நடாத்திய பேச்சுவார்த்தைகளின் கதி இந்தப்பேச்சுவார்த்தைக்கும் நடந்து விடக்கூடாது அப்படி நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. எனவே தான் சில விடயங்களை  தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு தமிழ் மக்கள்  முன்னாலும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட சகலரின் முன்னாலும் முன்வைக்கின்றது.
முதலாவது, இந்த பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச சமுகத்தின் பங்களிப்பு அவசியமானது எங்களுடைய பிரச்சனையில் மறைமுகமாகவும், நேரடியாகவும் சம்மந்தப்பட்டிருந்த சகல நாடுகளையும் சர்வதேச சமூகமென்று குறிப்பிடுகின்றோம்.
சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் சபையையும் உள்ளடக்கி பேசவிரும்புகின்றோம். சர்வதேசத்தின் பங்களிப்பு முதலில் தேவை அதற்கான யதார்த்தம் உணரப்படவேண்டும் அந்த வகையில் இந்தியாவும்  அதில் உள்வாங்கப்பட வேண்டும் இன்று இருக்கின்ற இந்திய காங்கிஸ் கட்சி தலைமையிலான சோனியா காந்தி அரசாங்கத்தின் மீது தமிழ் தரப்பு நம்பிக்கை வைத்து செயற்படுவதாக நினைத்துக்கொணடிருக்கின்றோம். சோனியாகாந்தி அரசாங்கம் யுத்தத்தின் போது என்ன செய்தது. என்பது எல்லோருக்கும் தெரியும் நாங்கள் அதனை மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது இந்திய அரசாங்கத்தைத் தமிழ்த்  தேசியக்கூட்டமைப்பு நம்புமாக இருந்தால் அது இன்னுமொரு பாரிய தவறாக இருக்கும் இவ்வாறு என். சிறிகாந்தா தெரிவித்தார்.

மகிந்த அரசு இந்தியாவின் கைபொம்மையாக செயற்படுகிறது – ஐ.தே.க. குற்றச்சாட்டு!

Published on May 25, 2011-4:23 pm   ·   No Comments
உள்நாட்டில் எந்தவொரு பிரிவினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாத இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இந்தியா கூறுவதை ஏற்றுக்கொண்டு செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்காதவர்கள் இன்று இந்தியாவின் அழுத்தம் காரணமாக 13 வது திருத்தத்துக்கு அப்பாற் செல்லவும் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
13வது திருத்தம் வேண்டாம் என கூறியவர்கள் தற்போது தமது பிழைப்புக்காக 13 இற்கு அப்பால் செல்வதை காணக்கூடியதாக உள்ளதாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
‘பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி தொடர்பில் இதுவரையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படவில்லை.  பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமோ, மாணவர்களிடமோ, பெற்றோரிடமோ இது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. தலைமைத்துவ பயிற்சியை கட்டாயமாக்கியுள்ளனர். இது சட்டவிரோதமான செயற்பாடாகும். தலைமைத்துவ பயிற்சி தொடர்பில் பல வழக்குகள்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, தலைமைத்துவ  பயிற்சிகளை ஒருவாரத்துக்கு பிற்போடுமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதனை பொருட்படுத்தாது அரசாங்கம் செயற்பட்டது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் கூட இலங்கையில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலைமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை அரசாங்கம் இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் அரச பயங்கரவாதம் நடைமுறையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சியூடாக எதிர்காலத்தில் அரச பயங்கரவாதத்துக்கான சிறந்ததொரு குழுவை தேடிக்கண்டுபிடிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
தலைமைத்துவ பயிற்சி நெறியானது சிறுபான்மை சமூக மகளீருக்கும் சிங்கள மகளீருக்கும்  பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அரசாங்கம் எந்தவொரு குழுவினருடனும் பேச்சுவார்த்தைகக்கு தயாராக இல்லை.  எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதில்லை. நாடாளுமன்றத்தில்  தனக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி தனக்கு தேவையானதை செய்கின்றது.
அவசரகால சட்டத்தை நீக்குமாறு யுத்தம் நிறைவடைந்ததும் நாம் அரசாங்கத்திடம் கோரினோம். நாம் சொன்னதை கேட்கவில்லை.
அவசரகால சட்டத்தை நீக்குமாறு இந்தியா கோரியது. தற்போது அதற்கு தயாராகி வருகின்றனர். இலங்கையிலுள்ள எதிர்க்கட்சியோ ஏனையவர்களோ கூறுவதை கேட்காமல் இந்தியா கூறுவதையே அரசாங்கம் கேட்கின்றது.
13வது திருத்தை நாம் நிறைவேற்ற முறப்பட்டபோது 13வது திருத்தம் என்பது நாட்டை  காட்டிக் கொடுக்கும் செயல் என விமர்சித்தனர். 13வது திருத்தம் நாட்டை பிரிக்கும் நடவடிக்கை என்றும் அதனை தடுக்க யுத்தம் செய்ய வேண்டும் என கூறினார்கள். தற்போது இந்தியாவுக்கு சென்று 13 இற்கு அப்பால் சென்று தீர்வை முன்வைப்பதாக கூறுகின்றனர்.
13வது திருத்தத்தை அமுல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தயாரானபோது  சந்திரிக்கா, மஹிந்த, ஜே.வி.பி ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் நாட்டில் இவ்வளவு இழப்புக்களை தவிர்திருக்கலாம். 13வது திருத்தம் வேண்டாம் என கூறியவர்கள் தற்போது தமது பிழைப்புக்காக 13 இற்கு அப்பால் செல்வதை காணக்கூடிதாயக உள்ளது’ – என்று ஐக்கிய தேசியக் கட்சியின்   நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி
வீரகேசரி இணையம்  5/26/2011 12:18:55 AM-ஐ.பி.எல்., சீசன் 4ல் பிளே ஆப் சுற்றின் 2ஆவது போட்டியில் மும்பையில் நடந்தது.

இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.

இந்த போட்டியில் நாணயசூழற்ச்சியை வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை எடுத்தது.

இதன் பின்னர் 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவரில் 6 விக்‌கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

"ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்': பழ.நெடுமாறன்

First Published : 26 May 2011 12:44:23 AM IST

சென்னை, மே 25: எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் திட்டம் தீட்டியதாக விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாதன் கூறியுள்ளார்.
புலிகள் அமைப்பிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் இல்லை. இப்போது அவர் இலங்கை அரசின் கைப்பாவையாக உலகெங்கும் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் அதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்றும், இக்கொலை சம்பந்தமாக தங்களுக்குத் தெரிந்த சில உண்மைகளை இந்திய புலனாய்வுத் துறையிடம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச புலிகள் செயலகத்தின் தலைவராக இருந்த கிட்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
ஆனால், இந்திய புலனாய்வுத் துறை அவரைச் சந்தித்து உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை. ஈழ மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். எனவே, தமிழக மக்களைக் குழப்புவதற்காக இந்திய, இலங்கை நாடுகளின் உளவுத் துறைகள் இதுபோன்ற பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்னையில் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் மத்திய அரசை கலக்கமடையச் செய்துள்ளன. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிரான நிலையை தமிழக அரசு எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் ஜெயலலிதாவைக் கொல்ல புலிகள் திட்டம் தீட்டியதாக குமரன் பத்மநாதன் மூலம் உளவுத் துறை செய்தி பரப்பியுள்ளது.
புலிகள் அமைப்புக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதா உள்பட யாருக்கும் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.



சோனியாவை ஏன் சந்திக்கவில்லை? கருணாநிதி விளக்கம்

First Published : 26 May 2011 01:10:28 AM IST

சென்னை, மே 25: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும் தவிர்த்துவிட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தில்லி பயணம்: திகார் சிறையில் இருக்கின்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, என்னுடைய மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோரைக் காண்பதற்காகச் சென்றேன். தில்லியில் தங்கியிருந்த ஹோட்டலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத்,புதுவை நாராயணசாமி, பரூக் அப்துல்லா மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்.
கனிமொழி துணிச்சலோடும், உறுதியோடும் இந்த நிலையைச் சமாளிப்பதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் சட்ட ரீதியாகவும் நீதி கிடைக்கும் என்று நானும், கனிமொழியும் கருதுகிறோம்.
சோனியாவைச் சந்திக்காததன் காரணம்: சோனியாவைச் சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் இருந்தது. என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.
சமச்சீர் கல்வித் திட்டம் ரத்து: எல்லா மாணவர்களுக்கும் சமநிலையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் உள்பட சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து திமுக ஆட்சியில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, தலைசிறந்த கல்வியாளர்களின் ஒப்புதலோடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்து பேசி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அந்தத் திட்டம் இப்போது நிறுத்தப்படுவதால் எதிர்கால தலைமுறைக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
பறிக்கப்பட்ட சொத்துகள்: திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துகள் உரிய முறையில் மீட்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி ஏதாவது இருந்தால் அதைத் திரும்பப்பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார் கருணாநிதி.
தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி, மேலவை என்று திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்படுவது குறித்து கேட்கப்பட்டதற்கு, "இதற்காக வருந்த வேண்டியவர்கள் வாக்களித்தவர்கள்' என்றார்.
இதைப்போல "ராஜீவ்காந்தி கொலையில் திமுகவிற்கும் பங்கு உண்டு என்பதுபோல ஒருவர் (பத்மநாதன்) கூறிருக்கிறாரே' என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, "அவர் யாரென்றும், அவர் என்ன சொன்னாரென்றும் எங்களுக்குத் தெரியாது' என்று கூறினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை சர்வாதிகாரமாக அடக்கியாள முற்படுகின்றார்: பேராசிரியர் ரட்னஜீவன் ஹுில்
[ புதன்கிழமை, 25 மே 2011, 03:52.30 PM GMT ]
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்துக் கொண்டு அடக்கியாள முற்படுவதாக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுில் குற்றம் சாட்டுகின்றார்.
முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு அடக்கியாள முற்பட்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முற்படுகின்றார் என்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுில் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையான லக்பிமவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்சில் கூட்டம் நடைபெற முன்பாக டக்ளஸினால் ஒரு அதன் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடாத்தப்படும். பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான கட்டளைகள் அங்கு வழங்கப்பட்டு விடும்.
துணைவேந்தர் தெரிவில் யாருக்கு வாக்களிப்பது போன்ற முடிவுகள் உட்பட எல்லா முடிவுகளும் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விடும்.  துணைவேந்தரைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது அவருக்கு அவசியமாக உள்ளது. இதனால் எனது நியமனத்தை அவர் விரும்பவில்லை. கிறிஸ்தவனான என்னை துணைவேந்தராக நியமித்தால் இந்துக்கள் கோபம் கொள்வார்கள் என அவர் ஜனாதிபதிக்குச் சொல்லி இருக்கிறார். இதனால் எனக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக முக்கியமான இந்துத் தலைவர்களிடம் அறிக்கை பெற்று வருமாறு கோரப்பட்டேன். பெரும்பாலான இந்துக்கள் நான் துணைவேந்தராக வருவதையே விரும்புகிறார்கள். ஜனாதிபதிக்கு டக்ளஸ் அவ்வாறு சொன்னதன் ஊடாக அவர்களை அவர் அவமானப்படுத்தி இருக்கிறார்.
தேவானந்தாவுக்கு வேண்டியவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பதவிகளுக்கான எத்தகைய விண்ணப்பங்களும் பகிரங்கமாகக் கோரப்பட்டதில்லை. அந்நியமனங்களில் எத்தகைய ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படவுமில்லை.
அதேபோன்று தான் பல்கலைக்கழகத்திற்கான விடுதிகள் கட்டுவது தொடர்பான 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டிட ஒப்பந்தமும் சட்டத்தற்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
குறிப்பாக அண்மைய கொள்ளைகளுக்கும் கொலைகளுக்கும் ஈபிடிபி உறுப்பினர்களே பொறுப்பு என ஜெனரல் மகிந்த ஹத்ருசிங்க கூறியதன் பின்பு இந்த முறைகேடுகள் தொடர்பாக எங்காவது முறையிட மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மூலங்களில்லை. தமிழ் மக்களோடு தொடர்பு கொள்வதென்றால் ஜனாதிபதி தேவானந்தாவை விட்டுவிட்டு தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுடன் அவர் பேச வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான வாக்களிப்பில் முதல் மூவருள் ஒருவராக நான் தெரிவு செய்யப்பட்டேன். முன்னதாக இருந்த துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஜனாதிபதியால் நானும் எனது மனைவியும் அலரி மாளிகைக்கு தேநீர் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டோம். யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு என்னை நியமிப்பதற்கான நியமனக் கடிதம் மறுநாள் காலை ஜனாதிபதிச் செயலகத்திலிருந்து அனுப்பப்படும் என்ற உறுதிமொழியுடன் நாங்கள் விடைபெற்றோம்.

ஆனால் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை. டக்ளஸ்தேவானந்தாவின் எதிர்ப்புக்காரணமாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை மீறி விட்டார் என்றும் பேராசிரியர் ஹுில் தனது நோ்காணலில்  மேலும் குறிப்பிட்டு்ளளார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஊக்க மருந்தைப் பாவித்த உபுல் தரங்க!



E-mailஅச்சிடுகPDF
இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க அண்மையில் முடிவுற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தினை பாவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உபுல் தரங்க உலகக் கிண்ண போட்டிகளின்போது இலங்கை அணி சார்பாக சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார்.

நியுஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியின் முடிவில் நடத்தப்பட்ட சோதனைகளில் இவர் prednisolone என்ற மருந்தைப் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது ஆஸ்த்துமா நோயைக் குணப்படுத்தப் பாவிக்கப்படும் ஒரு வகை மருந்தாகும்.



இது சம்பந்தமாதகக் கருத்து வெளியிட இலங்கையின் தேசிய ஊக்க மருந்துத் தடை அமைப்பின் தலைவர் டொக்டர்.கீதாஞ்சன மெண்டிஸ் மறுத்துவிட்டார்.

தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலச் செயலாளர் நிசாந்த ரணதுங்க இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.



இலங்கை அணி வீரர்கள் பற்றி இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் எழவில்லை என்றும், உலகக் கிண்ணப் போட்டிகளின்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக இது வரை தமக்கு எதுவும் தெரியாது என்றும், இலங்கை கிரிக்கெட்டின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் ஆஷ்லி சில்வாவும் தெரிவித்துள்ளார்














புலிகளின் முன்னாள் அரசியற்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை
[ புதன்கிழமை, 25 மே 2011, 10:38.05 AM GMT ]
வன்னிப் போரின் போது கைதாகி இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரோஜாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார்.
அவரின் மனைவி சசிரோஜாவும் இரண்டு பிள்ளைகளும் யுத்ததத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெயர்ந்து வவுனியா அகதிகள் முகாமில் இருந்த போது  படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – சீன சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு!

Published on May 24, 2011-7:48 pm   ·   No Comments
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக சீன மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சீனாவின் பெய்ஜி;ங் நகரில் சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சீக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கமும், நாட்டு மக்களும் உள்விவகார பிரச்சினைக்கு காத்திரமான முறையில் தீர்வு காண்பார்கள் என்ற பூரண நம்பிக்கை இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சீ தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு சீனா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் இலங்கை காட்டிய ஆர்வம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

கேபியின் பேட்டியின் பின்னணியில் றோ- ஜெயலலிதாவை உசுப்பிவிடவும் திட்டம்!

Published on May 25, 2011-6:27 am   ·   1 Comment
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய  தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ எனப்படும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுத லைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என் பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு, தேநீர் விருந்துக்கு டில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா,
2009 போரில் இலங்கை இராணுவத்தினரின் கொடூரச்செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்குத் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.அதன் பின்னரே இலங்கை ஜனாதிபதி  ராஜபக்ஷவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.இந்நிலையில் அவரது இந்த மாற்றம்,  வெறும் வாக்குகளை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.
அதாவது ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சினை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்றும் கூறியதைப் பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில், “ஐயோ… இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே…!”  என்ற ஐயம் ஏற்பட்டது. இந்நிலையில், போர்க் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையையும், ஜனாதிபதி  ராஜபக்ஷவையும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு,   ஆதரவாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று  ஈழத் தமிழருக்கு ஆதரவாகக்  கருத்துக் கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கிப் போட திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.
இதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான “றோ” மூலம் மேற்கொண்டிருப்பதாகத்  தகவல் வெளியாகி உள்ளன.இதன் ஓர் அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைக்காட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.இந்திய தொலைக்காட்சிக்காக அந்தப் பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்தப் பேட்டியில்  கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி. கூறும் பதில்களும், கே.பியை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப “றோ” முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில், ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே “இசட்’  ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது என்றும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொன்றிருப்பார்கள் என்றும் கே.பி. அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

ஐநாவில் அதிர்ந்த ஒருவரின் பேச்சு ..-காணொளி உள்


தமிழீழ விடியலை நோக்கி நகரும் மக்களால் தெரிவு  செய்ய பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதி நிதிகள்
ஐநா முன்றலில் கூடி தமிழீழ தேசிய துக்க நாளை நினைவு கூர்ந்து அங்கு
சிங்கள இனவெறி அரசினால் அழிக்க பட்ட போது மக்கள் .மற்றும் போராளிகளை நினிவு கூர்ந்தனர் .
இவ்வேளையில் அங்குபல்துறை  அமைச்சு பொறுப்பில் உள்ளவர்களின்
பேச்சுக்கள் அவர் தம் செயல் பட்டு நகர்வுகள் அந்த அரசின் கொள்கை விளக்கங்கள் என்பன
இடபெற்றன .
இதன் போது நாடு கடந்த அரசில்  இருந்து பிரிந்த அணி குழப்பவாதிகளும் அவர்களிற்கு சார்பனா சுவிஸ் விடுதலை புலிகளின்
கிளையினரும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் மீது காட்டு மிராண்டி தாக்குதலை நடத்தினர் .
கருத்தை கருத்தால் வெல்ல முடியாத இவர்கள் மனித நாகரிகமற்ற இந்த செயலை மனித நாகரிகமுள்ள மக்கள் கண்டிக்கின்றனர் .
மக்களால்  தெரிவு செய்ய பட்ட பிரதி நிதிகளை இவ்விதம்  தமிழ் தேசிய விடுலை மற்றும் தமிழ் தேசிய விடுதலை அரசியல் பேசும்
புலிகளின் சுவிஸ் கிளையின் செயல் பாடு கண்டிக்க பட வேண்டியது .
இதை மறுத்துரைத்தால்  எம்முடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு சுவிஸ் கிளையினரை வேண்டி கொள்கின்றோம் .
இது தனி நபர் தாக்குதலோ அல்லது ஒரு அமைப்பின் மீதான தாக்குதலோ அல்ல என்பதும்
மக்களின் பிரதி நிதி தாக்க பட்டது தவறு என்ற வகையிலுமே இந்த கண்டனத்தினையும் செய்திகளையும் பிரசுரிக்கின்றோம் .
உங்கள் கருத்துகளையும் நாம்உள்வாங்கி  பிரசுரிக்க தயாராகவுள்ளோம் என்பதனை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கின்றோம் .



நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ராமச்சந்திரன் கைது - கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை
[ புதன்கிழமை, 25 மே 2011, 05:10.46 AM GMT ]
நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிசார் பென் டிரைவ் (யு.எஸ்.பி) யில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளனர். அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் ஒபரேசன் கொன்னிக் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அமசோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளின் நிதி விவகாரம் – கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை

 விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து அதிகாரிகள் சிறிலங்காவில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

 இதுதொடர்பாக நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ள தகவலில், குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரை அடுத்த மாதம் விசாரிக்க சிறிலங்காவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக சிறிலங்கா சட்டமா அதிபர் மொகான் பீரிசுடன் நெதர்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

 அதேவேளை, இந்த விவகாரம் பற்றிய சாட்சியங்களைப் பெறுவதற்காக நெதர்லாந்து நீதிவான்களும், சட்டவாளர்களும் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

 அமெரிக்காவில் இவர்கள் புலிகளின் ஆயுதக்கொள்வனவு நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரதீபன் தவராசாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

 இவர் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆட்டிலறிகள், ரேடர்கள் போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்திருந்தார்.

 இவரது மடிக்கணினியில், 20மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.

 அந்தப் பட்டியலில் ஒவ்வொன்றும் 160,000 டொலர் பெறுமதியான 25மி.மீ விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆறு, ஒவ்வொன்றும் 30,000 டொலர் பெறுமதியான ரைப்- 69 ரகத்தைச் சேர்ந்த இரட்டைக்குழல் 30மி.மீ கடற்படைப் பீரங்கிகள் ஆறு, ஆயிரக்கணக்கான தன்னியக்கத் துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான ரவைகள்., கிரனேட் செலுத்திகள், 50 தொன் சி-4 வெடிமருந்து, 5 தொன் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், 50 தொன் ரிஎன்ரி சீன வெடிபொருள், விமானக் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தொன் ட்ரைரோனல் வெடிபொருள் ஆகியவை இருந்ததாக அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 நெதர்லாந்தில் உள்ள இராமச்சந்திரன் என்பவர் இந்த ஆயுதக்கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக பிரதீபனின் மடிக்கணினியில் இருந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

 இதையடுத்தே நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று இன்று ஒஸ்லோவுக்கு செல்லவுள்ளது.

 சந்தேகநபர்களின் சட்டவாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் நெடியவனினிடம் விசாரணை நடத்தவே ஒஸ்லோ செல்லவுள்ளனர்.

 இவர் விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர் பணத்தை வழங்கியதாக நெதர்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர்.

 ‘ஒப்பரேசன் கொனின்க்‘ என்ற பெயரில் நெதர்லாந்து அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் இந்த நிதி வலையமைப்பு மீதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த நடவடிக்கையில் நெதர்லாந்தில் 90 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 டசின் கணக்காக வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் கணினிகள், இறுவட்டுகள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் நெதர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.







விளம்பர பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் யாழ்.மாநகர மேயர் பெரும் மோசடி
[ புதன்கிழமை, 25 மே 2011, 02:12.15 AM GMT ]
யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது. இதனால் 2010 ம் ஆண்டில் மாநகரசபைக்கு 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக உயர் மட்ட விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த மோசடி தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் ஆணையாளருக்கும் விளக்கம் கேட்டு 13.10.2010 ல் கணக்காய்வாளர் திணைக்களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்று வரை மாநகரசபையிடம் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் யாழ்.கிளையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கணக்காய்வாளர் திணைக்களத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கமுடியாமல் தடுமாறும் மாநகர முதல்வர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மோசடியைக் கண்டு பிடித்து வெளிப்படுத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
மாநகர சபை எல்லைக்குள் நல்லூர் கோயில் பின் பக்கவீதியில் ஒன்பது பதாகைகள் எந்த விதமான கட்டணமோ அனுமதியோ இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநகர சபைக்கு வரவேண்டிய 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகர சபையின் அங்கீகாரம் இன்றி விளம்பரப் பதாகைகளுக்கான கட்டணம் இரண்டு மடங்காக அறவிடப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புத் தொடர்பாக பகிரங்க அறிவிப்போ அன்றி அரச வர்த்தமானி அறிவித்தலோ விடப்படவில்லை.
அத்துடன் அங்கீகாரம் இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.


நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இலங்கைக்குச் சீனா முழுமையாக ஆதரவு!
[ புதன்கிழமை, 25 மே 2011, 03:08.24 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு முழு ஆதரவும் வழங்கப்படுவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் தகுதியும் வல்லமையும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது என்று சீனா முழுமையாக நம்புகின்றது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங்ஜிச்சி தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பீஜ்ஜிங் சென்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின்போது ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பீரிஸ் சீன வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கினார் என்று கொழும்பில் வெளிவிவகார அமைச்சுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் எல்லாப் பிரச்சினைகளையும் இலங்கை அரசும் மக்களும் தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வலுவும் கொண்டிருக்கிறார்கள் என்று சீனா முழுமையாக நம்புவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங் ஜிச்சி தெரிவித்துள்ளார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் என்ற இலக்குகளை இலங்கை அடைவதற்கு சீனா என்றும் துணை நிற்கும் என்றும் ஜங் ஜிச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீனாவுக்கு வருகை தருவதற்கான அழைப்பு ஒன்றையும் அமைச்சர் பீரிஸிடம் அவர் விடுத்தார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவுக்கு அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், அவரது சீனப் பயணம் சாதகமாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.


நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவின: நெதர்லாந்து ஊடகங்கள்
[ புதன்கிழமை, 25 மே 2011, 06:16.44 AM GMT ]
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவியதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டே இலங்கை இராணுவத்தினர் நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தனர்.
அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாகவே விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தினரின் தகவல்களைக் கொண்டே நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் வலையமைப்பைக் கண்டறிந்து அதன் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாக நெதர்லாந்தின் அரச வானொலியும் செய்தியொன்றை ஒலிபரப்பியுள்ளது.
அண்மையில் நோர்வேயில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலும் இலங்கை இராணுவ உளவுப் பிரிவின் தகவல்களே முக்கிய பங்கு வகித்திருந்ததாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

போலிக்கடவுச்சீட்டுடன் சென்னையில் கைதான இலங்கைப் பெண்!

E-mailஅச்சிடுகPDF
இந்தியாவிலிருந்து போலிக் கடவுச் சீட்டினை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

வசந்தி என்ற 42 வயதுடைய பெண்ணே இந்தியக்கடவுச்சீட்டை பயன்படுத்தி நேற்று காலை இலங்கை வரமுற்படும்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் இதற்கு முன்னர் இரு தடவை இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

இந்திய பிரஜையான சிறிரமாலு என்பரை திருமணம் செய்து கொண்ட வசந்தி கடந்த 20 வருடங்களாக கிரிஸ்ணகிரி பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். 

1994ஆம் ஆண்டு முகவர் ஒருவர் மூலம் இந்தியக் கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்ட வசந்தி 2004ஆம் ஆண்டு அதனை புதுப்பித்துள்ளார். 

இந்தியாவில் தான் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக வசந்தி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

எனினும் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு அதிகாரிகள் குறித்த பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

ad

ad