புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

சினிமாசிமிழ்

கமல் சார் ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை” பிக் பாஸ் பற்றி ஆர்த்தி


ஒட்டுமொத்த இந்தியத் தொலைக்காட்சி உலகினையும் கிடுகிடுக்க வைக்கும் ஹிட் ஷோ ‘பிக் பாஸ்’. ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்பது தான் பலரின் ஃபேவரைட் டயலாக்.  பிக் பாஸூக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு என்றாலும், மறுபக்கம் கோடிகளில் லைக்ஸூம் ஓட்டும் குவிகிறது. 
ஆர்த்தி பிக் பாஸ்

கடந்த வாரத்திற்கான நிகழ்சியில் நான்கு பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். ஓவியா, வையாபுரி, ஜூலி மற்றும் ஆர்த்தி. இந்த நான்கு பேரில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்ற பதற்றம் அவர்களுக்கு மட்டுமல்லாமல், டிவி பார்க்கும் ரசிகர்களுக்குமே இருந்தது. இந்நிலையில் அதிக ஓட்டுடன் லீடிங்கில் இருப்பவர் ஓவியா. அந்த அறிவிப்பை கமல் சனிக்கிழமை நிகழ்ச்சியிலேயே சொல்லிவிட்டார்.  வையாபுரி, ஜூலி மற்றும் ஆர்த்தி இந்த மூவரில் யார் வெளியேறப்போகிறார் என்ற ரகசியமும் நேற்று உடைந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அப்பாவின் ஆசைக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், நிச்சயம் நூறு நாள் இருந்து டைட்டிலை வெல்லுவேன் என்றும் கூறியவர் ஆர்த்தி. இருபது நாள்களில் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களுக்கும் நிச்சயம் பெரிய ஏமாற்றம்தான். 
இதுகுறித்து ஆர்த்தியிடம் பேசலாம் என்று அவரை அழைத்தேன். தந்தைக்காகவே ஸ்பெஷல் காலர் டோன் வைத்திருக்கிறார் ஆர்த்தி. 
‘எப்படி இருக்கீங்க?’ என்றதுமே பேசத்தொடங்கிவிட்டார். “சூப்பரா இருக்கேன்” என்றவர் டக்கென்று, “ஆனா, பிக் பாஸ் பத்தி எதுவுமே சொல்லக்கூடாது. என்னைப் பத்திய பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே நீங்க டிவி, ஹாட் ஸ்டாரில் பார்க்குறீங்க. எல்லோருமே நல்லா ட்ரோல் பண்றாங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்லுறது” என்று கேஷூவலாகச் சிரிக்கிறார் ஆர்த்தி. 
“பிக் பாஸூடன் எனக்கு அக்ரீமென்ட் இருக்கு. அதுனால நான் இப்போதைக்கு எதுவுமே பேச முடியாது. வீட்டுக்கு வந்துட்டேன்.  என்னைப் பற்றி மக்களுக்கும் தெரியும். என் புருஷனுக்கும் தெரியும். 10 கொலை பண்ணிட்டு, புழல்ல இருந்துட்டு வந்த மாதிரி நினைக்காதீங்க. டிவி நிகழ்ச்சிக்குத்தான் போனேன்.” ஜாலியாக சிரிக்கிறார் ஆர்த்தி. 
ஆர்த்தி
டிவியில் நாங்க பார்க்காத விஷயம்... கமல் சார் உங்களிடம் சொன்ன விஷயம் ஏதும்? 
“டிவியில் பார்க்காத விஷயத்தைக் கேட்காம இருக்குறதுதானே நல்லது? கமல் சார் எனக்கு ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை. எந்த கவலையும் எனக்கு இல்லை. ஆனால் என்னை வெச்சி ட்வீட்டு, மீம்னு நெட்டுல செய் செய்னு செய்துருக்காங்க. பார்த்தேன். இருந்தாலும் நான் எதுவுமே பேசக்கூடாது. 
உங்களின் அடுத்தகட்ட ப்ளான் என்ன?  
சில படங்கள் கமிட்டாகியிருக்கேன். அவற்றைத் தவிர சில திட்டங்களும் இருக்கு. அடுத்தடுத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து இயங்குவேன்.  சினிமா தவர வேற எங்க போய்ட போறேன்?  விஜய் டிவியிலும் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துப்பேன்.

அதுமட்டுமல்லாம, பிக் பாஸ் பற்றி நிறைய விஷயங்கள் பேச இருக்கு. ஆனா இந்த 100 நாள் முடியற வரைக்கும் எதுவுமே நான் பேசக்கூடாது. அந்த நிகழ்ச்சி  பற்றி நூறு விஷயங்கள் இருக்கு. நூறு நாள் முடிஞ்சதும் நூறு விஷயங்கள் பகிர்ந்துக்குறேன்.” என்று உற்சாகத்துடன் முடித்தார் ஆர்த்தி
.

ad

ad